இராமலிங்க அபயம் துணை


வள்ளலாரைப் பற்றிய எனக்குத் தெரிந்த எல்லா உண்மைகளையும் இங்கே எழுத எண்ணுகிறேன். வள்ளலாரின் பக்தி,தயவு,ஒழுக்கம்,தவம் ஆகிவற்றின் பயனாக இறைவனே வள்ளலாரிடம் அவர் இருந்த இடம் தேடி வந்து கலந்துகொண்டார்.இதனால் வள்ளலார் வேறு இறைவன் வேறு என்ற நிலை மாறி வள்ளலாரே இறைவனாக இருப்பது உண்மை. தனது தூல தேகத்தை மண்ணுக்கோ நெருப்புக்கோ விடாமல் ஞான தேகம் பெற்று இன்றும் தன் உடலோடு இருக்கும் ஒரே ஒரு மகான்  இந்த உலகத்திலேயே வள்ளலார் ஒருவர்தான்.அவரை ஒரு சாதாரண குருவாக மட்டும் எண்ணாமல் இறைவனாகவே புரிந்துகொள்ளுங்கள்.

உலகத்தில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை எல்லாம் நீ அடைந்து விலக்குக என்று ஆண்டவன் வள்ளலாருக்கு ஆணை இட்டதோடல்லாமல் அவரை நமக்குத் துணையாகவும் வைத்திருக்கின்றான்.நமக்குத் துணையாக இருக்கும் வள்ளலார் நமக்கு வரக்கூடிய இடையூறுகளையும் நீக்க வல்லவர். எனவே வள்ளலாரை வணங்கி நாம் இன்பமான வாழ்வு பெற்று வாழ்வோம்.வள்ளலார் இருந்த இடம் தேடி வந்து ஆண்டவன் அவருடன் கலந்து இருவரும் ஒன்றாக உள்ளதால் இறைவன் வேறு அல்ல வள்ளலார் வேறு அல்ல. தன்னை வணங்க வேண்டாம் என்று வள்ளலார்   சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாந்து போகவேண்டாம்.அவர் தன்னடக்கம் மிக்கவர்.அதனால் அவ்வாறு சொன்னார்.இந்த ஜகத்தில் உள்ளவர்கள் மிகத் துதிக்கத் தக்கோனாக என்னைவைத்து என் அகத்தும் புறத்தும் இறைவன் விளங்குகின்றான் என்பது போன்ற அனேக பாடல்கள் அருட்பாவில் உள்ளன. அவற்றையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.வள்ளலாரை வணங்குவோம் இடர்கள் அனைத்தும் நீங்கப் பெற்று அவரது துணையுடம் இன்பமாக வாழ்வோம். . வள்ளலாரை ஒரு குருதான் என்று ஏமாந்து போகாதீர்கள். அவரைத் தெய்வமாக ஏற்று வணங்குங்கள்.  வள்ளலார்ட நம்மோடே இருக்கிறார்.நன்றி இந்தச் சங்கத்திலே வார வழிபாடு,மாதாந்திர வழிபாடு, சத்விசாரம் ஆண்டுதோறும் நம் பெருமானாரின் பிறந்த தின வழிபாடும் நடைபெறுகின்றது.வந்தனம் நன்றி முபா

Welcome to SANMARKA SANGAM AT ALWARTHIRUNAGAR - MUPA

 

 


இராமலிங்க   அபயம்  துணை

Do not delete this word/this line, you can add content before this line

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் என்ன ஆனார்
வள்ளலாரின் தேகம் கற்பூரம் போல் கரைந்துவிட்டது என்று வள்ளலார் மறைந்தது எப்படி என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறது. உடம்பு மண்ணில் போட்டு மக்கிப்போனால் என்ன நெருப்பில் இட்டு சாம்பலாய் போனால் என்ன கற்பூரம் போல் கரைந்து போனால் என்ன ஆக உடம்பு அழிந்து போனது என்றுதானே பொருள் அப்படியானால் அதுதான் மரணமிலாப் பெருவாழ்வா?சிலருடைய பாடல்களை ஆதா ரம் காட்டி எழுதப்பட்டு உள்ளது. கர்பூரம் போல் கரைந்து போனவர்களா எழுதி உள்ளார்களா இது ஒரு ஊகம் தானே?1874 ம் ஆண்டு அவர் மறைந்தது கற்பூரம போல் கரைந்ததுதான் என்றால் 1870 ம் ஆண Read more...
6 Comments
Jeeva Mano
Ithu oru chitrantha kelvi nanbarey.
Wednesday, January 6, 2016 at 07:10 am by Jeeva Mano
Durai Sathanan
அறிவார் அறிகின்ற வண்ணங்கள் எல்லாம்
அறிகின்ற அவனது ஓர்வண்ணமே ஆதலால்
அறிகின்ற அளவிலே அமர்ந்தாங்கு ஆயுளும்
அடைந்திட அனைவரும் ஏமாந்தனர் அந்தோ!
அருட்பெருஞ்ஜோதி...
Thursday, January 7, 2016 at 03:54 am by Durai Sathanan
Chitrambalam Ramaswamy
Mr Mu.Pa's concept of Vallalar's Gnana degam is correct, HE (Vallalar) can dis appear and re appear whenever he decides to.
Like camphor it's not dematerialisation. Dematerialsation can not materialise back - it's irreversible.
But my question is when HE went into the room of Siddhi Valagam under every body's presence, HE remarked that HE would go inside and if anybody forced to open and see, Arutperunjothi will ensure that the room would remain empty.
That means He decided never to re appear as He used to do earlier? Because thereafter no body
did see HIM. HE decided to be with us as 'Arutperunjothi' and not as a human Vallalar.
Friday, January 8, 2016 at 15:23 pm by Chitrambalam Ramaswamy
Durai Sathanan
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
Friday, January 8, 2016 at 17:16 pm by Durai Sathanan
Nakinam Sivam
இந்த காணும் உலகம் மாயையின் சம்பந்தத்தால் வந்தது என்பது வள்ளல் பெருமானின் வாக்கு. இதில் அசுத்த மாயை, சுத்த மாயை கடந்தால் மாயத் தோற்றம் மறையும் அது போல தோற்ற உடலும் மறையும். ‘தோற்ற மாமாயை தொடர்பறுத்து’ என்பது வள்ளல் கூற்று. ஆக நாம் தோற்றத்துடன் கூடிய இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு அவரும் நம்மை போலவே மீண்டும் தோற்ற பொருளாக காட்சி தருவார் என்பது நாம் அவர் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை என்பதே பொருள். வான் கலந்து கொண்டேன் என்பது வானத்தின் உருவற்ற தன்மையை பெறேன் என்பதே பொருள். அவர் மீண்டும் தோற்ற பொருளாக காட்சி தர வேண்டும் என்றால் மீண்டும் சுத்த மாயை என்னும் நிலைக்கு கீழிறங்க வேண்டும். ஆனால் பெரும்பொருளை பற்றிய பின்னர் கீழிறங்க வேண்டுமானால் உயிர்களின் மேல் கொண்ட இரக்கத்தினால் மட்டுமே அவர் தோன்றுவார். உரைமனம் கடந்த நிலையில் உள்ளவர் அறிவு என்னும் நிலையிலிருந்து மனம் என்னும் நிலைக்கு இறங்கினால் மட்டுமே சாத்தியம்.
அன்பன்
நக்கினம் சிவம்
Saturday, January 9, 2016 at 03:56 am by Nakinam Sivam
Muthukumaaraswamy Balasubramanian
8.6.1870 அன்று அவர் காணாமல் போனார் என்பது தொ. வே. வடலூரிலிருந்த ஆனந்த நாத ஷண்முக சரணாலய ஸ்வாமிகளுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறிகிறோம்..26.10.1870 அன்று வள்ளலார் வெளியிட்ட அறிக்கையில் நான் சமீபத்தில்தானே வெளிப்படுவேன் அஞ்சவேண்டாம் என்று அறிக்கை விட்ட வள்ளலார் மீண்டும் தோன்றி 18 74 வரை எல்லோரும் காணும்படித்தானிருந்தார். அவருடைய ஞான தேகம் எல்லோருடைய கண்களுக்கும் தோன்றியது,ஆகவே ஞான தேகமென்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்ற வள்ளலார் வாக்கை நன்கு புரிந்துகொள்வோமாக, நன்றி,
4 days ago at 09:27 am by Muthukumaaraswamy Balasubramanian
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தெய்வம் என்று யாரை வணங்குவது
இதுவரை நாம் சிவன்,முருகன்,விநாயகர் என்றெல்லாம் பலப்பல தெய்வங்களை வணங்கிவந்தோம். ஆனால் வள்ளலார் சமயத் தெய்வங்கள் அனைத்தும் கற்பனையே என்றும் உண்மையில் அவைகள் இல்லை என்றும் தெளிவாகக் கூறிவிட்டார்,ஜீவகாண்யம் பக்தி,ஒழுக்கம் தவம் ஆகியவற்றால் இறவாப் பெரு நிலையும் பெற்று இன்றும் தன் உடலோடு இருக்கின்றார். அவருபைய உடல் மன்னுககோ நெருப்புக்கோ போகவில்லை . எனவே அவர் ஒருவர்தான் உடலோடு இருக்கின்றார். இறைவன் அவருடன் கலந்துவிட்டதானால் அவர் இரைவானாகவே இருக்கின்றார்,. இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் என்றும் Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
Abayam
Ramalinga abayam

Download:

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தவறான போதனை
தவறான போதனை.

இந்தத் தமிழ் நாட்டில் ஒருவர் தன்னைத் தானே குரு என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார். தான் பல அனுபவங்களை அடைந்துவிட்டதாகவும் கூறு கிறார். அவருக்குப் பல சீடர்களும் இருப்பதாகத் தெரிகிறது. தான் உபதேசிக்கும் சாதனைக்கு வள்ளலாரின் திரு அருட்பாவைச் சான்றாக எடுத்துக் காட்டுகிறார். தியானம் செய்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடாது. கண்ணைத் திறந்துகொண்டுதான் செய்யவேண்டும் என்று வழி காட்டுகிறார். அதற்கு அவர் வள்ளலார் கூறியுள்ள கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக எனற திரு அருட்பா வரிகளை மேற்க Read more...
venkatachalapathi baskar
மேலே சொல்லப்பட்ட குருவானவர் சில வருடங்களுக்கு முன்னால் மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு இதய பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. பின்னர் சிறிது நாளில் காலமானார். அவருடைய சீடர்கள் அவர் சித்தியாகி விட்டதாக கூறுகின்றார்கள்...! தன்னுடைய தவறான புரிதல்களை எல்லாம் பல நூல்களை ஆக்கி அதன் வழியே பல குழப்பங்களையும் உண்டாக்கி வந்த அந்த குருவின் பணியை அவருடைய சீடர்கள் இப்போதும் தொடங்குகிறார்கள்... குரு சத்குரு போன்ற பட்டங்களையெல்லாம் தங்களுக்கு கொடுத்துக் கொள்கிறார்கள்.. ஞானநிலை அடைந்துவிட்டதாக கூறும் இந்த குருவின் சீடர்கள் பலர் மெத்த படித்து கணினித்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்...!
Friday, March 4, 2022 at 16:14 pm by venkatachalapathi baskar
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கத்தில் திருநீறு அணியலாமா?
சன்மார்கத்தில் திருநீறு அணியலாமா?

இன்றைய தினம் இது ஒரு பெரிய பிரச்சினைக்குரிய வினா . சுத்த சன்மார்கிகள் என்று தன்னை சொல்லிக் கொள்வோர் திருநீறு அணியக்கூடாது என்று ஆணித் தரமாக கூறுவதோடு சமயம் கடந்த சன்மார்கத்தில் சமய சின்னமான திருநீறு எப்படிப் பொருந்தும் என்றும் கேட்கின்றார்கள், திருநீறு என்பது சைவ சமயச் சின்னம்தான், ஒரு சமயச் சின்னம் இருக்குமேயானால் மற்ற சமய மதத்தவர் எப்படி நமது சன்மார்கத்திற்கு வருவர் என்பதும் அவர்களது வினா.? சமய மதம் கடந்த சுத்த சன்மார்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமயச் சின்னம் இருக்க Read more...
SABAPATHY R
NICE EXPLANTION. THANKS
Saturday, February 26, 2022 at 06:27 am by SABAPATHY R
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வணங்கத்தக்கவர் வள்ளலாரே
பல ஆயிரக்கணக்கான சமயத்தெய்வங்களைமக்கள் அவைகள் உண்மையாகஇருப்பதாகவேஎண்ணிவழிபாடுசெய்துவருகிறார்கள்.ஜாதி,மதம்,சமயம் எல்லாம் பொய் என்று சொன்ன வள்ளலார் அவற்றில் கூறப்பட்டுள்ள தெய்வங்களும் கற்பனையே தவிர உண்மையில் இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லுகிறார்.எனவே சமயத்தெய்வங்களை வணங்கவேண்டிய அவசியம் இல்லை.வள்ளலார் கூறியுள்ள அருட்பெருஞ்சோதியை வணங்கலாமா என்றால் அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவமே என்றும்கூறியுள்ளார்.தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும்ஓர்அனுபவமாகிய அருட்பெருஞ்சோதிஎன்கிறது அகவல்.அனுபவத்தை அடையவேண் Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கிகளில்ஜீவகாருண்யம் ஒன்றே போதும் தவம் வேண்டாம் :
ஜீவகாருண்யம் ஒன்றே போதும் தவம் வேண்டாம் :

இன்றைய சன்மார்கிகளில் சிலர் ஜீவகாருண்யம் ஒன்றே போதும் .இறைவனின் அருளை அடைய ஜீவகாருண்யம் ஒன்றுதான் வழி என்று வள்ளலார் அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளார். பேருபதேசத்தில்கூட என்னைத் தயவுதான் மேல் நிலைக்கு ஏற்றிவிட்டது என்று வள்ளலாரே கூறி இருக்கத் தவம் தேவைதானா? முடிந்த முடிபான பேருபதேசத்தில் தவம் செய்யுங்கள் என்று கூறவில்லை. கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் என்ன வரும்.? அதை விட நாலு பேருக்குச் சோறு போட்டால் புண்ணியமாவது கி டைக்கும் என்கிறார்கள்.பல இடங்களிலும Read more...

Download:

3 Comments
MOHAN T
உயிர் உறவு சங்கரய்யா அவர்களின் அமுத மொழிகள்:




அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

பிறவிப் பெரும் பயனடைய வாரிர்!


பெறுவதற்கு அரிய மனிதப்பிறவியைப்பெற்றுக்கொண்டவர்கள் இதுவரையில் வீண் காலங்கழித்தது போலிராமல், இது தொடங்கி அதி தீவிர விருப்ப முயற்சியால் பிறவிப் பெரும் பயனை எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடையில்லாத பேரின்பப்பெருஞ்சித்திப் பெருவாழ்வை அறிந்து அடைதல் வேண்டும். அப்பெருநிலையை அடைய இரண்டே வழிகள். ஒன்று பரோபகாரம்; மற்றொன்று சத்விசாரம். எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி அவ்வுயிர்கள் துன்பம் நீங்கி இன்புறச் செய்யவும் தேவையான ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையுணர்வைத் திருவருள் வல்லபத்தால் அடைதல் வேண்டும். இது ஒரு சுலபமான வழி.

'சீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் ', "அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் உயிர் வழிபாடே கடவுள் வழிபாடாகும்" என்று வள்ளற்பெருமான் அருளிய சீவகாருண்ய ஒழுக்கம் என்ற நுாலில் அறிவுறுத்தியதை ஏற்று நடக்கவேண்டும். உயிருள் யாம், எம்முள் உயிர் என்ற இறைவாக்கை மதித்து நடக்க வேண்டும்.

இரண்டாவது வழி தவமாகும். தன்னை ஏறா நிலமிசை ஏற்றியது தயவு என்னும் சீவகருண்யந்தான் என்கிற வள்ளற்பெருமான், அத்தயவினைப்பெற அவசியம் ஒருமை என்னும் நற்சிந்தனையோடு கூடிய தவமாகும் என்கிறார். இறையனுபவம் பெற்றவர்க்கே உண்மையில் பற்றுதலும் அவ்விறைவனின் கருவிகள் மாத்திரமாகவேயிருந்து பயன் கருதாச்செயலில் ஈடுபட முடியும். கர்த்தாவும் கருவியும் ஒன்று இணைந்து செயல்படுவது தான் பூரண இன்பமுள்ளது.

தவத்தினால் அடையக்கூடிய பேராற்றலை அளவிட முடியாது .மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முடியும். பகுத்தறிவும் அறிவுக்கறிவாகிய மெய்ப்பொருளும் இணைந்து செயல்படும் நிலை தான் அது.

வள்ளற்பெருமான் இறைவனருளை அடைய ஒவ்வொருவரும் உயிர்களிடத்தில் இரக்கமும் தொண்டும். இறைவனிடத்தில் ஒருமையோடு கூடிய மெய்யன்பையும் வலியுறுத்துகிறார். பறவை பறக்க இரண்டு இறக்கைகள் தேவை நடக்க இரு கால்கள் தேவையாவது போல், மனிதன் ஆன்ம இன்ப சுகத்தையடைய தானமும் தவமும் அவசியம், உயிர்ப்பணி பற்றி அருளிய பெருமான் தவத்தின் (ஓர்மை என்றும் ஒருமை) அவசியத்தை விளக்காமலில்லை. ஊன் உடம்பைக் கோயிலாக்கச் சொல்கிறார். சாதனையின்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லையாதலால் முதல் சாதனை சகாயமாக இறைவன் தமக்களித்த மகா மந்திரதை

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"

எந்நேரமும் புறத்தும் அகத்தும் ஜபிக்கச் சொல்கிறார். அடுத்து பெருமான் உபதேசித்து அருளிய உண்மை நெறி என்ற பெரு நெறி ஒழுக்கத்தில், கரண ஒழுக்கம் பற்றிக் கூறும் பொழுது மனதைச் சிற்சபையின்கண்ணே நிறுத்தவேண்டுமென்கிறார். புருவமத்தி லலாடம், சுழிமுனை, நெற்றிக்கண், அருளிடம், மகாமேரு என்று பல குறிப்புப் பெயர்களால் அவ்விடத்தைச் சித்தர்கள் குறிப்பார்கள். வள்ளற்பெருமான் உயிர் அநுபவம், அருளநுபவம், இறையநுபவம் பெற்று அதன் பயனாய் சுத்த தேகம், பிரணவ தேகம் மற்றும் ஞான தேகம் பெற்று, நமது ஊனக்கண்களுக்குத் தெரியாமல் திருக்காப்பிட்டுக் கொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தாம் தங்கியிருந்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் முதன் முதலில் சன்மார்க்கக்கொடியை ஏற்றி வைத்து பேருபதேசம் ஒன்று நிகழ்த்தினார்கள் அவர்கள் கூறியுள்ளதாவது ;




"இது தொடங்கி ஞான சித்தர்காலம் தொடங்கிவிட்டது. இதற்குச் சாட்சியாக இப்போது தான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது அக்கொடி உண்மையில் யாதெனில் நமது நாபி முதல்புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கிறது அந்த நாடியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகிறது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம் மேற்புறம் மஞ்சள் வர்ணம். அச்சவ்வின் கீழ் ஓர்மெல்லிய நரம்பு ஏறவும் இறங்கவும் செய்கிறது. அக்கொடி நம் அனுபவத்தில் விளங்கும் இவ்வடையாளக் குறிப்பாகவே இன்றையதினம்வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லாவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும்..



“எல்லார்க்கும்தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவிகிடைக்கும்படியான இடம். இந்த டம் இது ஆண்டவன் கட்டளை" வள்ளலார் அருளிய பேருபதேசம்

வள்ளற்பெருமான் தமக்கு ஏற்பட்டுள்ள அநுபவங்களை

மெய்யருள் வியப்பு" என்ற அற்புதமான பாடல்களிலும் “சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என்பேச்சு' எனப் பல பாடல்களில் விவரித்துள்ளார்கள் குரு பாதத்தை நம்பி புருவ மத்தியில் நாட்டம் வைக்க வேண்டிய அவசியத்தை

"கையறவிலாத நடுக்கண் புருவப் பூட்டு

கண்டுகளி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு"

என்கிறார்

உரைநடைப்பகுதியில் இதைப்பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது யாதெனில் - "நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுகிரக்கத்தால் திறக்கப்பெற்றுக்கொள்வது நலம். ஏனெனில் மேற்படிநெற்றிக் கண்ணை திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அநுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி'.
மேற்படி கண்ணைத்திறப்பதற்கு ஒரு சாவியும், பூட்டுமுள்ளது. மேற்படி அருள் என்கின்ற திறவு கோலைக் கொண்டு திறக்க
வேண்டும் ஆதலால் மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு நாம் தயா வடிவமானால் மேற்படி அநுபவம் நேரும்

------திருவருட்பா உரைநடைப்பகுதி

இதிலிருந்து நாம் உணரவேண்டியது ஒன்று தானமும், தவமும் முறையாக நிகழ திருவருள் காரியப்படவேண்டும். சீவனது விடா முயற்சியும் சிரத்தையும் உறுதியாயிருத்தல் வேண்டும். பகவான் புத்தர், மகாவீரர், இராமகிருஷ்ணன், இரமண மகரிஷி, அரவிந்தர், தாயுமாணவர் போன்ற ஞானிகளும், மகான்களும் அவதார புருஷர்களும் இளமையில் கடுந்தவம் இயற்றி கடவுள் நிலையறிந்து அம்மயமாயினர்.

இராகாதிகள் எனப்படும் செயற்கை குணங்களாகிய மாயத் திரைகளை விலக்கி ஆன்ம விளக்கம் பெற மெய்யருள் கனல் என்னும் சுத்த உஷ்ணம் தேவைப்டுகிறது. இவ்வுஷ்ணம் யோகியின் அநுபவத்தில் தெரியும். இதனை மனிததரத்தில் உண்டு பண்ணத்தெரியாது. கடுந்தவத்தால் பெறக்கூடிய மேற்படி மெய்யருள் கனலை பார்க்கிலும் தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும் தாகமாய் நினைக்கின்றதிலும் கோடிப்பங்கு, பத்துக்கோடிப்பங்கு அதிகமாக உண்டு பண்ணக்கூடும்.

உயிர்காப்போம், ஒருமையில் கலப்போம், உத்தமராவோம்!

தொகுத்தவர்

உயிர் உறவு கூ. சங்கரய்யா , இலட்சுமிபுரம் சன்மார்க்க சங்கம்
Sunday, April 11, 2021 at 00:49 am by MOHAN T
MOHAN T
தவமும் தானமும் இனைத்து செயல் பட வேண்டும். உங்கள் கருத்து மிகவும் அருமை. இதை உயிர் உறவு சங்கரய்யா அவர்களும் வழிஉறுத்தி உள்ளார். இதையும் இந்த நேரத்தில் பகிர்ந்து உங்களை வணங்குகிறேன்.
மோகன்.9003077772
Sunday, April 11, 2021 at 00:54 am by MOHAN T
MOHAN T
கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவிகிடைக்கும்படியான இடம். இந்த இடம் .இது ஆண்டவன் கட்டளை" வள்ளலார் அருளிய பேருபதேசம். சிற்சபை கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவிகிடைக்கும்படியான இடம்.
Sunday, April 11, 2021 at 00:59 am by MOHAN T
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் பெற்ற மரணமிலாப் பெரு வாழ்வு :
வள்ளலார் பெற்ற மரணமிலாப் பெரு வாழ்வு :

எதனாலும் அழியாத தேகம் நான் பெற்றேன்;

காற்றா லே புவியாலே ககனமதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே கோளாலே பிறவியற்றும் கொடும் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே ..1733

Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
அருள் தருவதா அல்லது பெறுவதா
அருள் தருவதா அல்லது பெறுவதா?

ஒரு சாமியார் மக்கள் நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அங்கிருந்த மக்களிடம் காட்டி இது யாருக்கு வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் அவர் நமக்குத் தருவார் என்று எதிர்பார்த்தார்கள்.சிலர் கேட்கலாமா என்று தயங்கினார்கள்.இப்படியே காலம் கழிந்து கொண்டிருந்தது.திடீரென்று ஒரு சிறிய பையன் ஓடிவந்து அவர் கையிலிருந்த அந்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பிடுங்கிகொண்டு போய்விட்டான்.அந்தச் சாமியார் சிரித்துக் கொண்டார்.ஐயா இது ஞாயமா Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
vallalaar is child of god
இராமலிங்க அபயம் துணை

பேருற்ற உலகிலுறு சமய மத நெறி எலாம் பேய் பிடிப்புற்ற பிச்சுப்

பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும்

போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண் போகாதபடி விரைந்தே

புனிதமுறு சுத்த சன்மார்க்கக நெறிகாட்டி மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்

ஏருற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே

Read more...