இன்று, 4.6.2023 அன்று மாலை 6.30 மணிக்கு, திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில் மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தயவுத் திரு க.மயில்வேல், மேனாள் பேராசிரியர், வணிகவியல் விவேகானந்தா கல்லூரி, திருவேடகம் அவர்கள் தலைமை வகித்தார்.
இலால்குடி திரு பா.எழில் செல்வன், எம்.ஏ, அகில இந்திய வானொலி நிலைய பகுதி நேர ஒலிபரப்பாளர் அவர்கள் வருவிக்க உற்ற வள்ளல் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இந்த சங்கத்தில் தலைவர் திரு ஓ.சந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.