வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் தலைமையில் நடக்கும் ஒரு பொது அமைப்பு. இது சாதி சமயம் மதம் இனம் மொழி நிறம் வயது பால் மற்றும் பல வேற்றுமைகளை கடந்த ஆன்ம நேய உரிமை பாராட்டும் அமைப்பு. இது வள்ளல் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாக விளங்கி அவரின் கோட்பாடுகளையும் வழிகாட்டுதலையும் முதன்மையானதாகவும் தலைமையானதாகவும் போற்றி அவ்வழியில் நடக்கும். இங்கு நாம் அழைப்பு விடுத்து பேசுகின்ற சான்றோர்களும் மற்றும் நிகழ்வில் பங்குகொள்கின்ற அனைவரின் கருத்துக்களும் வள்ளல் பெருமானின் கொள்கைகளையொட்டியே இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அனைத்து பேச்சாளர்களின் கருத்துக்களும் அவர்களையே சாரும் அல்லாது வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் கருத்து ஆகாது என்று அறிந்திடல் வேண்டும். பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசவும் மற்றவர்கள் அதை ஆமோதித்தும் மறுத்தும் பேசவும் உரிமையுள்ளது. எனினும் ஒருவரையொருவர் மனம் நோகாதபடி அன்புடனும் பண்புடனும் விசாரம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்இங்கனம்- வள்ளல் பெருமான் தலைமையில் வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் நிர்வாகத்தினர்
Dec10Music.jpg
AgavalPart59.jpg
23Nov26.jpg
Slide1.JPG
Slide2.JPG
Slide3.JPG
Slide4.JPG
Slide5.JPG
Slide6.JPG
Slide7.JPG