SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் பெற்ற மரணமிலாப் பெரு வாழ்வு :
வள்ளலார் பெற்ற மரணமிலாப் பெரு வாழ்வு :

எதனாலும் அழியாத தேகம் நான் பெற்றேன்;

காற்றா லே புவியாலே ககனமதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே கோளாலே பிறவியற்றும் கொடும் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே ..1733

நானே தவம் புரிந்தேன் அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சத்தி நாடடைந்தேன் –நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு............1509

எஞ்ஞான்றும் சாகாவரம் நான் பெற்றேன்
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போலப் பெற்றவரும் எவ்வுலகில
யார் உளர் நீ சற்றே உரை .....1025

முத்தேக சித்தி ;
சுத்த தேகம்; சாயை அதாவது நிழல் இருக்காது;.

சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் ஒன்பது முறை முயற்சி செய்தும் வ;ள்ளலாரை போட்டோ எடுக்க முடியவில்லை. வள்ளலார் சுத்த தேகம் பெற்றார் என்பதற்கு சான்று.

பிரணவ தேகம்; தோன்றும் பிடிபடாது.

ஞான தேகம் ; தோன்றியும் தோன்றாமலும் இருக்கும்.

• 8.6..1870 அன்று திரு தொழுவூர் வேலாயுத முதலியார் வடலூர் ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகளுக்கு எழுதியது;
“ நம்பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கிறது.சாலை என்ன ஸ்திதியில் இருக்கிறது.அவ்விடத்தில் காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள்..இது விபரங்களை உடனே கட்டளை இரும்படிக் கோருகிறேன்.அந்தப் பக்கங்களில் இருந்து இசங்கு வருகின்றவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை .உணர அருள் செய்தல் வேண்டும்.

(இது திருக்காப்பிட்டுக் கொள்வதற்கு நான்கு ஆண்டுகட்கு முன்பே வள்ளலார் காணாமல் போய் இருக்கிரார் என்பதற்குச் சான்று.

மறைந்திருந்த வள்ளலார் மீண்டும் வெளிப்பட்டார்; .26-10-1870 அன்று வள்ளலார் வெளியிட்ட அறிக்கை.

“அன்புள்ள நம்மவர்கட்கு அன்புடன் அறிவிப்பது; ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மை உண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள்.நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்..அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாக நடத்துங்கள்.

வள்ளலார் தோன்றாமல் போனார் மீண்டும் தோன்றினார்.

2.சென்னையில் உள்ள பிரம்ம ஞான சங்கத்திற்கு தொழுவூர் வேலாயுதனார் கொடுத்த வாக்கு மூலம்.
இவர் 1855ம் ஆண்டில் சென்னையைவிட்டுச் சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி,என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம்க் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு.இவர் எங்குச் சென்றார் என்பதை அறிவோர் எவரும் இல்லை.இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.

வள்ளலாரின் தலை மாணாக்கர் வள்ளலார் தோன்றியும் தோன்றாமலும் இருந்ததை அறிவிக்கிறார்.

1873ம் ஆண்டு சித்தி வளாகத்தில் கொடி கட்டி பேருபதேசம் செய்கிறார். இறுதியில் 30-1-1874 அன்று மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் அன்பர்களிடம் கூறியது;

நான் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப்போகிறேன் .பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானே இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்..என்னைக் காட்டிக்கொடார்.

இந்த வார்த்தைகளைக் கூறும்போது தோன்றினார்.கதவைத் திறந்து பார்த்தபோது தோன்றவில்லை..இதுதான் நடந்த உண்மை.


வள்ளலாரைப் பற்றி நம்மவர்கள் தற்சமயம் பேசிவருவது

வள்ளலார் ஜோதி ஆகிவிட்டார்.
அவர் தேகம் அணு அணுவாக மாறி உலகமெல்லாம் பரவி விட்டது.
அவர் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார்.
அவர் கடவுளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.
தன் உடம்பைப் பஞ்ச பூதங்களுடன் சேர்த்துவிட்டார்.

ஞான தேகமானது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்று வள்ளலார் கூறியதில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசும் பேச்சு இது. ஞான தேகத்தைப் பற்றி வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாம் பிரிவில் எழுதி உள்ளதை இங்கே படியுங்கள்.

ஆதாரத்தில் அன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும்,வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் ,பார்த்தல் முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும்,பற்றுவனவல்ல.தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில் சுவர்,மலை முதலிய தடைகளும் அவர் கண்களை மறைப்பனவல்ல. அண்ட பிண்டங்களில் அகம் புற ம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்டறியும்.அண்ட பிண்டங்களில் எவ்விடத்திருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்திருந்தே கேட்டறியும் .எவ்விடத்தில் இருக்கின்ற ரசங்களையும் அவர் நா இருந்த இடத்திருந்தே சுவைத்தறியும்.எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் இருந்த இடத்திருந்தே பரிசித்தறியும். எவ்விடத்திருக்கின்ற சுகந்தங்களையும் அவர் நாசி இருந்த இடத்திருந்தே முகர்ந்தறியும்..எவ்விடத்திருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்திருந்தே கொடுத்தல் கூடும். எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்திருந்தே நடத்தல்                  கூ டும்....................
ஞான தேகம் பெற்றவர்களுக்குக் கண்கள் உண்டு, காதுகள் உண்டு, நாசி உண்டு, நா உண்டு, கைகள் உண்டு கால்கள் உண்டு என்றால் அவரது உடம்பு இல்லாமல் இவைகள் எங்கே இருக்கின்றன.வள்ளலார் உடம்போடுதான் இருக்கின்றார் என்பதற்கு இவை போதாதா.

அன்பர்களே நன்கு சிந்தியுங்கள்.ஞான தேகம் பெற்ற வள்ளலார் தனது தேகத்துடந்தான் இன்றும் இருக்கிறார்..அவர் நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்.நமக்குத் துணையாக இருக்கின்றார்.

துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்கத்தில் உத்தம ஞானப்
பதி செயும் சித்திகள் பற்பலவாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதி செயப் பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருட்ஜோதியால் விளைவிப்பன் நீ அவ்
அதிசயம் பாக்கலாம் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து..........1990.

வள்ளலாரைப் புரிந்து கொள்வோம் .அவர் வழி நடந்து அவர் அருள் பெறுவோம்

பஞ்ச பூதங்களில் மண்ணும்,நீரும்,நெருப்பும் நமது கண்களுக்குத் தெரிகின்றன. காற்றானது கண்களுக்குத் தெரியாவிட்டாலும் அது நமக்குப் ச்பரிசமாகிறது.ஆனால் ஆகாயம் மட்டும் நமது கண்களுக்குத்                  தெ ரியவில்லை.ஆகாயம் மட்டும் மற்றவர்களால் தன்னைக் காணாதவாறு செய்துகொண்டது.வான் செய்துகொண்டதை நான் செய்துகொண்டேன் என்று வள்ளலார் பாடியுள்ளார்.அதாவது மற்றவர்களால் தன்னைக் காணாதவாறு வான் செய்துகொண்டதுபோல் நான் செய்துகொண்டேன் என்று பாடியுள்ளார். இதோ பாடலைப் பாருங்கள்.

மானாகி மோகினியாய் விந்துவாகி மற்றவையால் காணாத வானமாகி
நானாகி நானல்லனாகி நானே நானாகும் பதமாகி நான்தான் கண்ட
தானாகித் தானள்ளனாகித் தானே தானாகும் பதமாகிச் சகசஞான
வானாகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன நிலையாகி எங்கும் வளரும் தேவே. ( மகாதேவ மாலை பாடல் 29

மற்றவையால் கானாதாவாறு வான் செய்துகொண்டதை இந்தப் பாடல் விளக்குகின்றது.வான் செய்து கொண்டதை நான் செய்துகொண்டேன் என்று வள்ளலார் பாடியுள்ளார்.அதாவது மற்றவர்களால் காணாதவாறு தன்னைச் செய்துகொண்டார்.

மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்துகொண்டேன்
முன் செய்துகொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடல் ஆதியை ப்
பொன் செய்துகொண்ட பொதுவினில் ஆடும் பொ ன்னடிகாணப் பொருந்திக் கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்து கொள்கிற்பீர் எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே

மற்றவையால் காணாதவாறு ஆகாயம் செய்துகொண்டதுபோல நானும் மற்றவர்கள் காணாதவாறு செய்துகொண்டேன் என்று வள்ளலார் அறிவித்துள்ளார் மரணத்தை வென்ற வள்ளலார் தன் உடம்போடு இன்றும் நம்மிடையே இருக்கின்றார் என்பதுதான் உண்மை,

. நன்றி முபா,