Vallalar Universal Mission Trust   ramnad......
நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
 சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.
நனந்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
தினங்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.
நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.
 உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.