Vallalar Universal Mission Trust   ramnad......
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.





பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே
புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால்
செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில்
சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர்
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே
கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.