Vallalar Universal Mission Trust   ramnad......
நடம்புரி கருணை நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.
படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
பாவியிற் பாவியேன் தீமைக்
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
என்னினும் துணைஎந்த விதத்தும்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
சிந்தனை செய்திருக் கின்றேன்
நடம்புரி கருணை நாயகா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.