Vallalar Universal Mission Trust   ramnad......
சி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த் தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே
உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
உற்றகரு வாகிமுதலாய்
உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
சிவமாய் விளங்குபொருளே
சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
தேற்றிஅருள் செய்தகுருவே
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
வாழ்வேஎன் வாழ்வின்வரமே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.