Vallalar Universal Mission Trust   ramnad......
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
எனக்கும் உனக்கும்
சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
எனக்கும் உனக்கும்