Vallalar Universal Mission Trust   ramnad......
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங் கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம் அருட்பெருஞ் சோதி அதனால் முடியும் தெருட்பெருஞ் சத்தியம்
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.

செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.