முன்பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் முதலியனவற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதி என்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் தயவு வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்கின்ற சிறிய கேள்விக்கு உத்தரம் எது என்று அறிய வேண்டில்:- அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்துக் கால்களுக்கு விலங்கிடப்பட்டுச் சிறைச்சாலையி லிருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக்கின்றான். அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தம் செய்யப்பட்டு நரகத்தில் இருக்கிற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக்கின்றார்
Write a comment