Vallalar Universal Mission Trust   ramnad......
குளிகை மணி ஒன்பதின் விவரம்.....
அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே
விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே
பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
சார்புற நடத்தும் சரஒளி மணியே
அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே
சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராயுள் விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே
தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா
வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே
.........அருட்பெருஞ்ஜோதி அகவல்

குளிகை மணி ஒன்பதின் விவரம்:

1. பரம்பரமணி - அண்டத்தையும் அண்ட வஸ்துக்களையும் காட்டுவது.

2. பராபரமணி - பிண்டத்தையும் பிண்ட வஸ்துக்களையும் காட்டுவது.

3. அரும்பெறன்மணி - நினைத்ததை நினைத்தபடி அருளுவது.

4. ககனமாமணி - விண்ணுலக வஸ்துக்களை ஆட்டி வைக்கும்.

5. சரஒளிமணி - மண்ணுலகையும் மண்ணுலக வஸ்துக்களையும் ஆட்டி வைக்கும்.

6. கலைநிறைமணி - எல்லா வுலகத்தும் உலாவுதல்.

7. வித்தகமணி - சர, அசர வஸ்துக்களிடம் விளங்குவது.

8. சித்திசெய்மணி - மகாசித்திகளை நடத்துவது.

9. வளரொளிமணி - அழியாப் பெருவாழ்வு அளிப்பது.*