காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.

Write a comment