Vallalar Universal Mission Trust   ramnad......
தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரைவரும்ஓர் தருணம்இதில்
தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.