Vallalar Universal Mission Trust   ramnad......
சீவர்கள் துக்கப்படுவதைக் கண்டபோதும் சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாக இருக்கின்றார்களே, இவர்களுக்கு ஆன்ம உரிமை இல்லாமற்போவது என்னென் றறியவேண்டில்:-
சீவர்கள் துக்கப்படுவதைக் கண்டபோதும் சிலர் சீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாக இருக்கின்றார்களே, இவர்களுக்கு ஆன்ம உரிமை இல்லாமற்போவது என்னென் றறியவேண்டில்:- துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனமென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளிமழுங்கின படியாலும் அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனமுதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாசப் பிரதிபலித மில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால் ஆன்மஉரிமை இருந்தும் சீவகாருணியமில்லாமல் இருந்ததென் றறியவேண்டும்.
ஆனால் இந்த ஆன்மஉருக்கம் என்கின்ற சீவகாருணியத்திற்கு ஆற்றல் எவ்விடத்து உண்டாகுமென்று அறியவேண்டில்:- பசி கொலை பிணி முதலிய தடைகளில் எந்தத் தடைபற்றி சீவகாருணியந் தோன்றியதோ அந்தத் தடையை நிவர்த்தி செய்கின்ற விடத்துத்தான் சீவகாருணியத்திற்கு ஆற்ற லிருந்ததென்று அறியவேண்டும்.