Vallalar Universal Mission Trust   ramnad......
தண்ணளி வாழ்க
வாழ்க நின் சேவடி, போற்றி நின் பூம்பத வாரிசங்கள்
வாழி நின்தாள்மலர், போற்றி நின் தண்ணளி வாழி நின்சீர்
வாழி என் உள்ளத்தைல் நீயும் நின் ஒற்றி மகிழ்தரும் நீ
வாழி என் ஆருயிர்  வாழ்வே வடிவுடை மாணிக்கமே

     வடிவுடை மாணிக்கமே  என் ஆருயிர் வாழ்வே வாழ்க.. உன்னுடைய செம்மை பொருந்திய திருவடி வாழ்க
உன் அழகிய பாதங்களாகிய தாமரைகளுக்கு வணக்கம் உன் மலர்த்தாள் வாழ்க உன் தண்மை மிக்க அருளை வணங்குகின்றேன் உன் புகழ் வாழ்க சக்தியாகிய நீயும் உன் மகிழ்நராம் சிவமும் என் உள்ளத்தில் என்றும் வாழ்க.  வடிவுடை மாணிக்க மாலை...