Vallalar Universal Mission Trust Ramanathapuram
அன்னிய சீவர்களுக்கு நேரிடுகிற மேற்குறித்த அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும் அறிவும் இருந்தும் அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பம் அவ்வுலக இன்பத்தோடு மோட்ச இன்பத்தை அனுபவிக்கச் சுதந்தரத்தை அடையப்படுவதில்லை
பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பரசீவகாருணியம் என்றும், அது இவ்வுலகஇன்பம் எல்லாவற்றையும் அளவிறந்த சித்தி இன்பங்களையும் எக்காலத்தும் அழியாத முத்தியின்பத்தையும் அருளால் அடைவிக்கும் என்றும், அன்னிய சீவர்களுக்கு நேரிடுகிற மேற்குறித்த அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும் அறிவும் இருந்தும் அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பம் அவ்வுலக இன்பத்தோடு மோட்ச இன்பத்தை அனுபவிக்கச் சுதந்தரத்தை அடையப்படுவதில்லை என்றும், தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன போக சுதந்தரங்களையும் இழந்துவிடுவார்கள் என்றும் கடவுளருளால் விதிக்கப்பட்டிருக்கின்றபடியால் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமும் இல்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத் தக்க அறிவும் சுதந்தரமும் உள்ளவர்கள் வஞ்சியாமல் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு லக்ஷியம் என்று அறியவேண்டும்.