19.7.2024 அன்று முதல் கோயம்புத்தூர் அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள கொடிசியா ஹாலில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது ஸ்டால் எண் 176 ல் வள்ளலார் அருளிச்செய்த சுத்த சன்மார்க்கம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் திண்டுக்கல் சுவாமி சரவணாநந்தா அவர்கள் இயற்றிய சன்மார்க்க விரிவுரை புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கப் பெறுகின்றன. இந்த மூன்று நாட்களாக அதிக அளவிலான சன்மார்க்க அன்பர்கள் வந்து இந்த புத்தக ஸ்டாலை பார்வையிட்டு சன்மார்க்க விளக்க விரிவுரை நூல்களை பெற்றுச் செல்கின்றனர். இந்த புத்தகத் திருவிழா 28/7/2024 வரையில் நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வள்ளலார் மற்றும் சுவாமி சரவணா நந்தா அவர்கள் எழுதிய சுத்த சன்மார்க்க விளக்க விரிவுரை நூல்களை பெற்று அருள் இன்பம் அடைய வேண்டும் என்று ஸ்டால் நிறுவியவர்கள் வேண்டிக் கொள்கின்றனர்
Write a comment