DAEIOU - தயவு
வள்ளலார் முப்பெரும் விழா..அரசு ரூ.3.25 கோடி அளிப்பு..தினமலர் நாளிதம் மதுரைப் பதிப்பு நாள் 26.4.2023.
வள்ளலார் முப்பெரும் விழா
அரசு ரூ.3.25 கோடி அளிப்பு.

தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பு செய்தி..26.4.2023.

சென்னை, ஏப்.26,

வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்துக்கு அரசு மானியமாக 3.25 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று விழாக் குழுத் தலைவரிடம் வழங்கினார்.

வள்ளலாரின் முப்பெரும் விழாவை 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாடும் வகையில் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானம் செலவுக்கு, அரசு மானியமாக 3.25 கோடி ரூபாய்க்கான காசோலையை நேற்று தலைமைச் செயலகத்தில் விழாக் குழுத் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு தலைமை செயலர் இறையன்பு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் முரளிதரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

20150119_184350.jpg

20150119_184350.jpg