DAEIOU - தயவு
இலங்கை தயவுத் திரு கேதீஸ்வரன் அவர்களை, சந்தித்தவர்கள்.
          இலங்கையில் சத்திய ஞான கோட்டம் கட்டி அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டினைக் காட்டியவர் இலங்கை திரு கேதீஸ்வரன் அவர்கள்.
          கடந்த 20.3.2023 திங்கள் அன்று, சென்னை வந்து, 21.3.2023 அன்று, மதுரை நாராயணபுரத்திற்கு அவர் வருகை புரிந்தார். அவர் மதுரை வந்தபின்னர் நடந்த நிகழ்ச்சிகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

21.3.2023 செவ்வாய் .மாலை..சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவில் நிறுவனர் திரு ஜெயராம், அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் சந்தித்தனர்.
22.3.2023 காலை..மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் (புதிய) தலைவர் திரு சந்திரமோகன் அவர்கள், ஊமச்சிகுளத்திலிருந்து வருகை புரிந்து, சன்மார்க்க நிகழ்ச்சிகள் பற்றி அளவளாவினார்.
அன்று மாலை, திரு கேதீஸ்வரன் அவர்களை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எல்லையூரில் (மதுரை) திரு கண்ணப்பன் அவர்களால் அமைக்கப்பட்டு வரும் சத்திய ஞான சபைக்கு அழைத்துச் செல்லுதல்.
திரு கேதீஸ்வரன்,  அந்த சத்திய ஞான சபையினைப் பார்வையிட்டு, அடுத்த கட்டமாகச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து யோசனை தெரிவித்தல்.
23.3.2023 (வியாழன்) காலை..திரு கண்ணப்பன் மற்றும் திருமதி மீனாள் ஆகியோர் நாராயணபுரம் வருகை புரிந்து, தாம் கட்டிக் கொண்டிருக்கும் சத்திய ஞான சபை குறித்து, மேலும் சில விளக்கங்களைப் பெற்றனர். இலங்கையில் மீசாலை வடக்கு..சத்திய ஞான கோட்டத்தின் அமைப்பினை, வாட்ஸ் அப் செயலி மூலம், நேரலையில் காணல்.
23.3.2023 (வியாழன்) முற்பகல்.சிவகங்கை மாவட்டம்.மானாமதுரைக்குச் செல்லுதல். திரு ஜெயராம் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோரிடம், சன்மார்க்க சத் விசாரம் செய்தல்.
24.3.2023 (வெள்ளி) இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரையில் திரு முத்துக்குமார் அவர்கள் கட்டியுள்ள சத்திய தர்மச்சாலை செல்லுதல்., திரு அருட்பா பாசுரங்கள் .. அங்கு பாடி அன்பர்களை மகிழ்வித்தல்.
24.3.2023 (வெள்ளி) மாலையில்...மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் உள்ள வள்ளலார் கோவில் சென்று, அங்கு திரு கேதீஸ்வரன் அவர்களின் உபயத்தில், அன்னதானம் செய்தல்.

26.3.2023 (திண்டுக்கல்), சுவாமி சரவணானந்தா அவர்களின் குருபூஜை விழாவில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றுதல்.
20150325_085241.jpg

20150325_085241.jpg