இன்று, 12.2.2023 காலை 6.00 மணி முதல், திண்டுக்கல்லில், வள்ளலார் 200வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகின்றது. அகவல் பாராயணம், போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்குதல், திரு அருட்பா இசைக் கச்சேரி, முதலானவை இது வரையில் நடைபெற்றுள்ளன. காலை உணவு, மதிய உணவு வழக்ஞப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத் துறை, இதனை எடுத்து செயல்படுத்துகின்றது. மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம், அவருடன் திரு எஸ்.எஸ்.கே.ஆனந்தன் மற்றும் மூத்த சன்மார்க்க அன்பர்கள் பலரும், இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
Write a comment