கடந்த 21.11.2022 திங்கட் கிழமை அன்று மாலையில், சிவகங்கையில், மதுரை ரோடில் உள்ள மெளனகுரு சுவாமிகள் மடத்தில், வரவிருக்கும் 11.12.2022 ஞாயிறு அன்று, வள்ளலார் 200வது ஆண்டு விழா கொண்டாடுவது பற்றிய கலந்துரையாடல் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களால் நடத்தப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி சங்கம், மூங்கில் ஊரணி சங்கம், கிருங்காக் கோட்டை சங்கம், காரைக்குடி சங்கம், உள்ளுரைச் சேர்ந்த சங்க அங்கத்தினர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், அனைவரும் ஒத்துழைப்பு நல்கி, இந்த விழாவினை, சிவகங்கையில் சிறப்பாக நடத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
விழா நாளான 11.12.2022 ஞாயிறு அன்று, காலையில் அகவல் பாராயணம், ஊர்வலம், திரு அருட்பா பாட்டு கச்சேரி, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கு வைத்த போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளித்தல், சன்மார்க்க அன்பர்களை கெளரவித்தல் கருத்தரங்கம், நாட்டியம், பட்டி மன்றம் ஆகியவை நடத்தவிருப்பது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த செய்தியினை படிக்கும், சன்மார்க்க அன்பர்கள், தாங்கள், தங்களுக்குத் தெரிந்த சன்மார்க்க அன்பர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, 11.12.2022 ஞாயிறு அன்று, சிவகங்கையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரவேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150119_184350.jpg
Write a comment