Anandha Barathi
ThiruArutpa 6 Thirumurai Audio Book - திருஅருட்பா 6ஆம் திருமுறை ஒலி நூல்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அனைவருக்கும் வணக்கம்,

திருவருட்பா திருமுறைகளை ஒலி நூலாக செய்யும் பணி இறைவன் திருவருளால் துவக்கப்பட்டுள்ளது,   திருவருட்பா முழுவதையும் ஒலி நூல்களாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன முதலில் ஆறாம் திருமுறை ஒலி நூலாக்கம் தற்போது நடைபெற்று வருகின்றது அதன் பதிவுகளையும் இந்த  பக்கத்தில் நாம் காணலாம்.

இந்த ஒலி நூல் திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இசை கலப்பின்றி சொற்கள் பதம் பிரித்த வடிவில் திருவருட்பா முழுவதும் ஒலி நூல்களாக செய்யப்பட்டு வருகின்றது. திருவருட்பாவை முழுவதும் படிக்க நினைக்கின்ற அன்பர்களுக்கு இந்த திருவருட்பா ஒலி நூல்கள் ஒரு ஆசிரியர் போல இருந்து பாடல்களை எப்படி பதம் பிரித்து படிக்க வேண்டும் என வழிகாட்டுகின்றது. அது போலவே அன்பர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப திருவருட்பாவை எங்கு வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளவும். கண் பார்வை இழந்த அன்பர்களும் திருவருட்பாவை முழுமையாக கற்று அறியவும், தமிழ் அறியாத சன்மார்க்க அன்பர்களும் திருவருட்பாவை கேட்டு பயன்பெறவும் இந்த செயல்திட்டம் உறுதுணையாக அமைகின்றது

இந்த ஒலி நூல்களை தாங்களும் கேட்டு, பிறரையும் கேட்க செய்து திருஅருட்பாவை நன்றாக ஓதி நலம் பெற அன்போடு வேண்டுகின்றோம். நன்றி.

அன்புடன்:
ஒலி நூலாக்க குழுவினர்.

Audio:

Dominic Britto
Many many Thanks ayya
3 days ago at 13:54 pm by Dominic Britto