T Mohan
உயிர் உறவு நூல்
HINDU நாளிதழில் (The Hindu) 1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் வெளியான ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம் வருமாறு

யோக சாதனையால் தன்னை எரித்துக் கொண்ட சாது லக்னோ-நவம்பர் 27

உத்திரப்பிரதேசத்தில் எட்டா மாவட்டத்தில், கஞ்சுடுட்டு வாரா என்னும்
என்னும் ஞானயோகி ஒருவர், 21 நாள்களுக்கு முன்பாக, யோக சாதனையால் தன்னையே எரித்துக்கொண்டதால், அந்நகரம் ஒரு புனித யாத்திரை ஸ்தலமாக ஆயிருக்கிறது.அந்த யோகி தன்னை அதிசயமாக எரித்துக் கொண்டு, மறைந்த குருத்துவார், (சீக்கிய கோவில்) நூற்றுக்கணக்கான மக்களால் தரிசிக்கப்பட்டு வருகிறது. உள்ளூரிலுள்ள இந்து, சீக்கிய மற்றும் முஸ்லீம்கள் அனைவரும் இச்சாதுவை ஒரு சாதாரண, தன்னைக் காட்டிக் கொள்ளாத, அடக்கமான சாது என்று மட்டும் கருதியிருந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் அவரை ஒரு சிறப்புமிக்க சாது என்று மதித்து, அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பத் திட்டமிட்டிருக்கின்றனர்

ஹிஸ்.. ஸ் என்ற சப்தம்

நவம்பர் 6ஆம் நாள் கோகுலாஷ்டமி தினம் கிருஷ்ண பரமாத்மாவின் தொடர்புடைய திருநாள். கஞ்சுடுட்டுவாராவிலுள்ள ஒரு சீக்கிய வியாபாரியின் மகன் 12 வயதுள்ள குல்தீப் பள்ளிக்கூடத்திற்குப் போகும் வழியில் யோகி சாதுசிங்கின் பாதங்களைத் தொட்டு வணங்கக் குருத்துவாரரவுக்குச் சென்றான் குருத்துவாராவுக்குள் அடியெடுத்து வைத்ததும், "ஹிஸ்...ஸ்' என்ற அழுத்தமான சப்தத்தைக் கேட்டான். அப்பொழுது சுமார் காலை 9 மணியிருக்கும். அவனுடைய 15 வயதான மூத்த சகோதரன் ஜக்ஜித் அந்த சாதுவுக்கு அரைமணி நேரத்திற்கு முன்னால் தான் பால் கொடுக்க குருத்துவாருக்குச் சென்றிருந்தான் உள்ளூர் சீக்கியர் சிலர், அக்குருத்துவாருக்குப் பிரார்த்தனைக்கு வந்திருந்தவர்களும் காலை 8 மணிக்குப் போய்விட்டார்கள் பீதியடைந்த குல்தீப், அந்த சாதுவானவர் யோகாசனத்தில் அசையாமல் அமர்ந்திருக்கும் அவரது அடிவயிற்றிலிருந்து நெருப்புச் சுவாலை தாவிக்கிளம்பி சாதுவின் நெஞ்சை எரித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். குல்தீப் வெளியில் ஓடி "பாபா ஞானி' எரிந்து கொண்டிருக்கிறார் என்று கூச்சலிட்டான்.

நிமிஷ நேரத்திற்குள் நந்தலால் என்னும் கூலிவேலைக்காரர் ஒருவர், ராஜாசிங், மற்றும் அவதார்சிங் என்னும் இரண்டு சீக்கிய வியாபாரிகள், மற்றும் உதேராம் என்ற மற்றொரு இந்து வியாபாரியும், குருத்துவாருக்கு வந்து, சாதுவின் உடலிலிருந்து நெருப்புச் சுவாலை வெளிவருவதைக் கண்டனர். இராஜாசிங் தீயை அணைக்க ஒரு வாளி நிறையத் தண்ணீர் கொண்டுவந்தார்.

சாதுவின் உடல் விறகில்லாமல் தானாகவே எரியவதால், அது சாதாரணமான ஒன்றல்ல, என்று சொல்லி, உதேராம் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

ஆறுமணியளவில் தீச்சுவாலை

அந்த குருத்துவாருக்குச் சென்றிருந்த நான், இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பல துறைகளிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்களைச் சந்தித்து, விசாரித்தேன். அவர்களுள் காவல்துறையினர், விஞ்ஞானப் பேராசிரியர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களும் வேறு பலரும் அடங்குவர். அவர்களுள் பலர் முகமதியர்கள், சிலர் அதி தீவிரமான ஆரிய சமாஜத்தினர் ஒருவர் மார்க்கிஸ்ட் கொள்கையிலுள்ளவர் குறித்த அந்த இடத்திற்கு மாலையில் வருகைதந்திருந்த மாவட்டக் குற்றவியல் நீதிபதி திரு. பல்வந்த் சிங்கையும் சந்தித்தேன்,

ஆறுமணிநேரம் எரிந்துகொண்டிருந்த சமயம் அநேக உள்ளூர் வாசிகள் அந்த இடத்திற்கு ஐந்தாறு தடவைகள் வந்து பார்த்தனர். சாதுவின் உடல் விறகில்லாமலேயே எரிந்தது என்றும், சாதாரண மாக மனித உடல் எரியும்போது வெளியாகும் துர்நாற்றம் கிடையாதென்றும், ஒரு வேள்வி (யாகம் )த் தீயின் போது வெளி யாகும் ஒரு மதுரமான நறுமணம் வீசிற்று என்றும் அனைவரும் சொன்னார்கள். மெழுகுவத்தி எரிவதுபோல, சுவாலை பிரகாசமாக இருந்ததாகவும், அதற்கு இரண்டடித் தொலைவிலிருந்தபோதிலும் வெப்பத்தை உணர முடியவில்லை என்றும் கூறினர்.

செய்தியை அறிந்ததும் குறித்த இடத்திற்கு விரைந்தோடிய சாலிக்ராம் என்னும் தலைமைக் காவலரைப் (Police Head Constable) பார்த்து, 'ஏன் அவர் நெருப்பை அணைக்க முயல வில்லை?' எனக் கேட்டேன். சாது ஏற்கெனவே இறந்துவிட்ட தாகக் காணப்பட்டாரென்றும், அது ஒரு சாதாரணமான நெருப்பு இல்லை என்பதாகவும் சொன்னார்.

'அச்சாதுவின் உடல் அருகே நெருப்பு எளிதில் பற்றக் கூடிய எவ்விதமான பொருளும் இருந்ததாகக் காணப்படவில்லை' என்று காலை பத்து மணிக்கு அவ்விடத்தைப் பார்வையிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. D. P. சர்மா கூறினார்.

காவல் துறையினர், மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு இந்த அதிசயமான நிகழ்ச்சியைப் பற்றித் தகவல் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர், இது எந்தவிதமான மோசடியோ, தற்கொலையோ அல்லது எதிர்பாராத அசம்பாவிதமோ இல்லை என்பதாக முடிவு செய்தனர், என்றாலும், அந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? என்ற விளக்கம் கூறமுடியவில்லை . ஆனால் இது ஒரு மர்மமானது' என்று முடிவு செய்துவிட்டனர். அந்தச் சாது தன்னுடைய உடலை யோக சாதனையால் எரித்துக் கொண்டார் என்று மாவட்டக் குற்றவியல் நீதிபதி திருப்தியளிக்கும் வகையில் மனப்பூர்வமாக நம்பியிருக்கிறார்.

இரண வைத்தியரின் அறிக்கை:

தனது நீண்டகாலப் பணியில் நூற்றுக்கணக்கான பிரேதங் களைப் பரிசோதனை செய்துள்ள, பதவி ஓய்வு பெற்ற, சிவில் இரணவைத்தியர் டாக்டர் வர்மா, சாது எரியும் காட்சியை வெகு அருகிலிருந்து நேரில் பார்த்திருக்கிறார், டாக்டர் வர்மா எழுத்து மூலம் ஒரு அறிக்கையில்

"அந்தத் தீ அந்தச் சாதுவின் அடிவயிற்றிலிருந்து எழுந்தது நான் உணர்ந்து பார்த்தேன். அத்தீ சூடாக (வெப்பமாக) இல்லை ஆனால் அழுத்தமாகவும், ஆழமாகவும் அமைந்திருந்ததால், சாதுவின் கெட்டியான பருத்த எலும்புகளும் அழிந்து, மிகக்குறைவான சாம்பலாகியது அவரது உடலைச் சுற்றி வேதனையால் ஏற்படும் அசைவு எதுவுமில்லை. பொதுவாக மனித உடல்கள் எரியும் போது காணப்படும் பச்சை அல்லது நீல நிறமோ காணப்படவில்லை

சாதாரணமாகத் தீப்பற்றி எரியும் நிகழ்ச்சிகளில் உடல் வெளுப்பாகவும் ஈரமாகவும் இருக்கும். மாறாக இச்சாதுவின் உடல் கருப்பாகவும் மிகவும் வரட்சியாகவுமிருந்தது. மேல் தோலும் உள் தோலும் சீராக இல்லை. உள்ளுறுப்புகள் வெந்து, சாம்பலாயின இளகும் தன்மையிலான கொழுப்பு, அமிலப் பொருள்கள் காணப் படவில்லை

காவல் துறையினரின் அறிக்கையில் மற்றும் இரண்டு அம்சங்கள் இருந்தன. அவை மக்களின் தகவல்களும், மற்றும் புகைப்பட சாட்சியங்களுமாகும். சாது அமர்ந்திருந்த கோரைப்பாய் முழுமை யாகக் கெடாமலிருந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்புதான் எரிந்தது. இரண்டாவதாக, சாது அணிந்திருந்த உடைகள் உடல் எரியும்போதே சேர்ந்து எரிந்தது.

சாது இயற்கை எய்திய அந்தக் குருத்துவாரா 1960 ஆம் ஆண்டு உள்ளூர் சீக்கிய மக்களால் அமைக்கப்பட்டது. சாதுவின் பூர்வீக கான ஊர் பஞ்சாபிலுள்ள மோகாவிலிருந்தது. கடந்த 33 ஆண்டு களாக இப்பகுதியில் அந்தச் சாது காணப்பட்டார், 1914 ஆம் வருடத்திலிருந்து அவர் துறவு மேற்கொண்டிருந்தார்.

அவரது வயதை நிச்சயிக்க எவ்வித ஆதாரங்களுமில்லை, அவருக்கு 114 வயது என்று உள்ளூரிலுள்ள சீக்கியத் தலைவர்கள் சிலர் உறுதி யளிக்கின்றனர். 85 வயதாயிருக்கலாம் என்பது காவல் துறையினயின் கணிப்பு. இந்தக் குருத்துவாரா கட்டி முடித்ததும் அதற்கு பூசகராகவும், போஷகராகவும் குருத்துவாரில் தங்கியிருக்கும்படி வேண்டிக்கொள்ள அவரும் இணங்கினார். சர்க்கரையிலான பொம்மைகளைத் தெருக்களில் அவர் விற்றதைப் பொது மக்கள் நினைவில் வைத்துள்ளனர். அவர் தானாகவே அவற்றைத் தயா ரித்து, சிறுவர்களிடையே வந்த விலைக்கு விற்று வந்தார்.

"
மற்றறிவோ மெனச்சிறிது தாழ்ந்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே யந்தோ

சற்றுமதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்களல்லா லதனை சுற்றி நின்று தடுக்க வல்லார் ரெவ்வுலகி லெவரும் இல்லை கண்டீர், சத்திய மீது என்மொழி"...

"இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடு சேர்ந்திடுமின் என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே."

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால் நிந்தியமாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்துளீர்களே"

திருவருட்பா

காலங்கடந்த கடவுளைக் காண்பதற்கு காலங்கருத வேண்டா தடையொன்று மில்லாத தலைவரைக் காண்பதற்கு எவ்விதத்தடையுமில்லை. விரைவில் ஒருமைப்பாடு வோம். கடவுளாகலாம்.

உயிர் உறவு நூல்