Sivam  Nagendran
வடலூரைப் புனித நகரமாக அறிவிக்க வேண்டி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 எல்லாம் செயல் கூடும் இறைவனின் அருளால் 

வடலூரைப் புனித நகரமாக
அறிவிப்போம்! உயிர்களைக் காப்போம்!

https://vadalurpunithanagaram.com/

 
"உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு" — வள்ளல் பெருமானார்.
 
எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்" வீற்றிருக்கும், உத்தர ஞான சிதம்பரம் எனும் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளி மற்றும் வள்ளல் பெருமான் பிறந்து, வாழ்ந்து, சித்தியடைந்த புனித கருணைத் திருத்தலங்களான மருதூர் (சத்திய ஞான சபையிலிருந்து 12 கி.மீ), கருங்குழி (8.3 கி.மீ), மேட்டுக்குப்பம் (7.6 கி.மீ) மற்றும் வள்ளலார் பேருந்து நிலையம் (3 கி.மீ) உள்ளிட்ட சுமார் 15 கி.மீ தொலைவிற்குள் அமைந்திருக்கும் பகுதிகளை அரசு "புனித நகரமாக (Compassion Town)" அறிவிக்க வேண்டும்; மேலும், அப்பகுதிகளில் இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
 
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான வள்ளலார் அன்பர்களின் குரலை டிஜிட்டல் மற்றும் நேரடி கையெழுத்துகள் மூலம் ஆவணமாகத் திரட்டி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிப்பதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்

── ஏன் வடலூர் ──
 
பிரபஞ்சத்திற்கே ஆன்மநேயம் போதிக்கும் புனித பூமி
“எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும்” ஒரு புதிய உலகைப் படைக்க, தனிப்பெருங்கருணையின் ஊற்றுக்களமான வடலூரைப் புனித நகரமாக அறிவிக்கக் குரல் கொடுப்போம். உங்கள் ஒவ்வொரு கையெழுத்தும், ஒரு ஜீவனின் மூச்சைக் காப்பாற்றும் பெரும் புண்ணியம்.

டிஜிட்டல் கையெழுத்துயிட கீழே கொடுக்க பட்ட இணையதளத்திற்கு சென்று பார்வையிட்டு கையெழுத்து இடலாம்.


https://vadalurpunithanagaram.com/

https://youtube.com/shorts/gdF2QPvszhc?si=Yeyjc7c-eBSjebjl
 
https://youtube.com/shorts/w4jVseJM9qc?si=WGLzVBCWvG4WRbJ5