சன்மார்க்கக் குறள் வெண்பா
அல்லல் அகற்றும் அருட்பா அமுதத்தை
சொல்லித் துதிக்கச் சுகம் 1
ஆரமுதை உண்டார்க் கழிவில்லை ஆகவே
ஊரமுதை உண்ணா தொழி 2
அன்புடன் வாழ்வார்க் கழிவில்லை ஆருயிரைத்
துன்புறுத்த துன்பம் துணை 3
வானுள்ளோர் போல மரணமில்லா வாழ்வுதரும்
ஊனுண்னார் வாழும் உலகு 4
சன்மார்க்கச் சங்கத்தைச் சார்வார்க் கழிவில்லை
இன்பமாய் வாழ்வார் இசைந்து 5
இயற்கை இறைவனை ஏத்தினார்க் கில்லை
செயற்கை மரணச் செயல் 6
கரிசாலை தூதுவளை காலை புசிப்பான்
மரிக்கா நிலைபெறு வான் 7
மதம்பிடியா மக்களெலாம் மாநிலத்தில் என்றும்
இதமோடு வாழ்வார் இசைந்து 8
பயமின்றி பாருலகில் பற்றனைத்தும் விட்டு
தயவுடன் நிற்றல் தவம் 9
கள்ளப் புலனால் கடவுளைக் காணச்செல்
வள்ளல் பெருமான் வழி 10
அருட்பெருஞ்சோதி வள்ளலார் திருவருளால் இயற்றியது
Kanchipuram K Thangavel
#சன்மார்க்கக் கவிதைகள்
#kanchipuramkthangavel
அருமை
3 days ago at 20:17 pm
by Kanchipuram K Thangavel
Write a comment