Badhey Venkatesh
” வள்ளலின் முத்தேக சித்தி”
” வள்ளலின் முத்தேக சித்தி”
BG Venkatesh / November 23, 2017
” வள்ளலின் முத்தேக சித்தி”

எல்லோரும் வள்ளலின் இந்த சித்தி பற்றி வாய் பிளந்து போகின்றார்கள்
இந்த பெரிய அரிய ஆரும் ஆற்றாத சாதனை தான் கண்ணுக்கு தெரிகிறதே தவிர , அதுக்கு அவர் செய்த

1 கடின உழைப்பு

2 செய்த 35 வருட கடின தவம்

3 தவத்தில் அர்ப்பணிப்பு

4 அருளின் ஒத்துழைப்பு

5 வாழ்க்கை அர்ப்பணிப்பு

6 மிகப் பெரிய தியாகங்கள் – உணவு – உறக்கம் – மைத்துனம் – உலக விஷயங்கள் – உலக இன்பங்கள் – காட்சி இன்பங்கள் யாவும்

7 கர்ம வினைகள் – மாயா மலங்கள் ஒழிவு

8 குடும்பப் பற்றிலிருந்து விலகி நின்ற பக்குவம்

9 அவர்க்கு கிடைத்த சத்தினிபாதம் என்னும் அருள் பதிவு

10 அவர்க்கு இருந்த மனோதிடம் – மனோவலிமை – மன உறுதி

11 கொண்ட லட்சியம் வெற்றி அடைய இருந்த மன உறுதி

12 இலக்கு நிர்ணயம் செய்தது – முத்தேக சித்தி என்பது

இதெல்லாம் தெரியாமல் மறைந்து நிற்க , அவர் அடைந்த முத்தேக சித்தி ஏதோ உணவு மட்டும் வழங்கி – ஜீவகாருண்ணியத்தால் மட்டும் கிடைத்த போல் நினைப்பது அவரின் சாதனத்துக்கு நாம் கற்பிக்கும் இழிவு ஆகும் – களங்கம் ஆகும்

இது எப்படி இருக்குது எனில் , கடலில் நிற்கும் பனிப்பாறைகள் , வெளியில் கொஞ்சம் தான் தெரியும் – அது போல் அவர் முத்தேக சித்தி

அதன் அடியில் மிகப் பிரமாண்டமான பாறை மறைந்து உள்ளது தான் மேற்கூறிய அவர் தம் உழைப்பு, அர்ப்பணிப்பு, சாதனம் , தியாகங்கள் எல்லாம்

இதை எல்லா சன்மார்க்கத்தவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் – வேண்டுவது அவசியம் ஆகும்

வெங்கடேஷ்

IMG-20210504-WA0016.jpg

IMG-20210504-WA0016.jpg