கவிஞர். கங்கைமணிமாறன்
உயிர்ப்பறவைக்கு ஒரே கூடா?
வள்ளல் பெருமானுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டு.
உடல் அழியும்.ஆன்மா அழியாது.
செய்த வினைகளுக்கேற்ப
அது பிறிதோருடம்பில் பிரவேசிக்கும் என்பதை அழுத்தமாய் அறிவுறுத்துகிறார் அவர்.
"சிலர், முன்தேகம் எடுத்ததும் பின்தேகம் எடுப்பதும் இல்லை.
இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால்
தேகியும் அழிந்து விடுவான் என்றும்,
சிலர் முத்தியடைவான் என்றும்,
சிலர் பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பான் என்றும்,
சிலர் தேகம் இல்லாமல்
தேகம் அழிந்த அதே இடத்தில் இருப்பான் என்றும்"
பலவாறு விவாதிப்பதை
அவர் ஏற்றுக் கொண்டவரில்லை.
பானை உடைந்தால்
பானைக்குள் இருந்த ஆகாயம்(வெளி)
மற்றும் காற்று விடுபடுமே தவிர
உடைபடுவதில்லையே என்று அவர்
உதாரணப்படுத்தும் அழகு
உதாசீனப் படுத்தக் கூடியது அன்று.
உடற்கூடு அழியும்.
உயிர்ப்பறவை வேறு கூடு சேரும் என்பது
வள்ளலார் இஸம்.
Natarajan Subbiramani
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

வள்ளுவர் திருமூலர் மாணிக்கவாசகர் என வாழையடிவாழை வந்த சாகாக்கல்வி.
Friday, October 16, 2020 at 02:48 am by Natarajan Subbiramani