திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) நடுநாட்டு சிவத்தலங்களுள் ஒன்று, வடலூர் அருகே உள்ள மிக பழைமையான நகரம், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானுக்கு மிகவும் பழக்கமான ஊர், நமது வள்ளல் பெருமான் திருமுதுகுன்றத்து இறைவன் "பழமலை நாதர் " குறித்து பதிகமும் அருளியுள்ளார்கள்.
வள்ளல் பெருமான் காலத்தில் இருந்தே இங்கு சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகின்றது.
நமது வள்ளல் பெருமானுக்கும் விருத்தாசலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதை, அனுபவம் மிக்க சன்மார்க்க அன்பர்கள் அறிவார்கள், ஆயினும் அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு,
வள்ளலார் குடில் அன்பர் ஆனந்த பாரதி அவர்கள் இச்செய்திகளை திரட்டி ''திருமுதுகுன்றத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார்' என்னும் ஒரு நூலாக செய்துள்ளார்,
சன்மார்க்க அன்பர்கள் அறிய வேண்டிய பல முக்கிய செய்திகள் உள்ளன, அன்பர்கள் படித்து பயன் பெரும் பொருட்டு இந்த நூலின் PDF வடிவத்தை இங்கு இணைத்துள்ளோம், அன்பர்கள் பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெற வேண்டுகின்றோம்.
அன்புடன்..
வள்ளலார் குடில்,
விருத்தாசலம்.
09865104682,