SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை நான் ஏன் வணங்குகிறேன்

ஒரு பதார்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் ருசி தெரியாது.ருசி தெரியாத பதார்த்தத்தின் மீது இச்சை போகாது என்றார் வள்ளலார்,நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் என்றாரே வள்ளலார் அந்த வார்த்தையை நான் முழுவதுமாக நம்புகிறேன் .அவரைத் தவிர வேறு  எந்தத் தெய்வத்தையும் நான் வணங்குவதில்லை .அவரே என் குல தெய்வம். நான் பெற்ற பெறுகின்ற அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் ஒன்றை இதோ எழுகிறேன்.இதைத் தற்பெருமை என்று எண்ணிவிடவேண்டாம்.வள்ளலாரை நீங்களும் வணங்கினால் எந்தக் குறையும் இல்லாமல் வாழலாமே.


சில ஆண்டுகட்குமுன் எங்கள் குடும்பத்தவர் அனைவரும் வட நாட்டிற்கு யாத்திரையாகச் சென்றோம். குளு மணாலி பனி மலைமீது ஏறி,சறுக்கி விளையாடினோம். நானும்தான். காலை மணி பத்து ஆகிவிட்டது. எல்லோருக்கும் பசி. அங்கிருந்த எல்லாக் கடைகளிலும் சைவ உணவும் மாமிச உணவும் கலந்தே இருந்தது. மற்றவர்கள் சைவ உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டார்கள். நான் புலால் விற்கும் கடையில் எதையும் வாங்கிச் சாப்பிட மாட்டேன். அதனால் நான் ஒன்றும் சாப்பிடவில்லை.பசி அதிகமாகி என்னால் நடக்க முடியாமல் ஆகிவிட்டது.சறுக்கு வண்டியில் என்னை உட்கார வைத்து எங்கள் வேன் அருகில் கொண்டுவந்து விட்டார்கள். நான் மிகுந்த பசியோடு வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒருவர் நான் இருக்கும் வேன் அருகே வந்து பூரி சென்னா வேண்டுமா என்று கேட்டார். ஐநூறு வேன்களுக்கும் மேல் அங்கே இருக்க என்னிடம் வந்து அவர் கேட்டது எனக்கு மிக மிக வியப்பாக இருந்தது. இருந்தாலும் அதுவும் ஒரு மாமிசக்கடையிலிருந்து வந்திருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.அதனால் நான் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் சந்தேகத்தை உணர்ந்தவர் போல் இது சுத்த சைவம் என்றார்.வட நாட்டிற்கு நான் சென்றாலும் என்னுடன் வந்து என் பசி அறிந்து அந்த நேரத்தில் பசி போக்கிய அந்த நினைவை என்னால் மறக்க முடியவில்லை. நான் பசித்தபோதெல்லாம் தான் பசித்தாராகி என்று வள்ளலார் பாடியுள்ளார். அதைப்போல் நான் பசித்த போது அவருக்குப் பசித்ததோ ?எனக்கு அங்கே வந்து என் பசியைப் போக்கினாரே . வள்ளலார் பார்வையில் நான் இருக்கிறேன். இது சத்தியம்.
2 Comments
venkatachalapathi baskar
அற்புதம். இதுபோன்று தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
Tuesday, December 25, 2018 at 03:39 am by venkatachalapathi baskar
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நெகிழ்ச்சி.மகிழ்ச்சி.
Friday, December 28, 2018 at 14:02 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்