www.vallalarspace.com/durai
முக்காடு?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

குல்லா பேன்ட்டு முழுக்கைச் சட்டைஇவைகள்

எல்லாம் இருந்தாலும் அவைகள் எல்லோருக்குமே

இல்லாத நிலைமைதான் பெரும்பாலும் இருந்தன

Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரைப் புரிந்து கொள்ளுங்கள் 2
வள்ளலாரை வணங்குவது சரியா தவறா. அருட்பா என்ன சொல்லுகிறது

இத்தனை என்று நின்று எண்ணிட ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே

சத்தியமாம் சிவ சித்தியை என்பால் தந்தெனை யாவரும் வந்தனை செயவே

நித்தியனாக்கி மெய்ச் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த

அத்தனி வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே

எல்லோரும் வந்தனை செய்யவே வள்ளலாரை ஆண்டவன் நித்தியனாக்கினானாம். மனுமுறை கண்ட வாசகம் குருவை வணங்கக் கூசி நிற்பது பாவம் என்கிறது. இவை எல்லாம் வள்ளலார் வாக்கே.

15 Comments
ram govi
Ayya, whom we should portray or pray to...... once .for all...after Peruman if a senior San Margi like you or beginner ..myself become Primordal Source? whether APJ or Vallalar or the senior San Margi? whose picture we should hold ? Do we need to make a new mantra like that Ohm Ramalinghaya Namaha!! ..Do we need to make latest new mantra like ...Ohm Govindarasu Namayaha!!..Do we need to pray to all three or follow an order or have a priority? If we can understand this...it may not call for bow of any individual to a statue...we are all created equally with divine....Peruman is defintely is not a school teacher or professor to be pleased by praising him or chanting his name or saluting his idol...let us focus on Chirsabhai (residence of Supreme Reality), Truth, kindness, reducing food intake, lessening sleep hours, reduce breath etc., Please resentful me on my unembellished comment.We should not waste money/time/thought/words discussing about statues or photos or garlands ...instead we should try to understand the fragrance of divine in all and how to make those lives happier/peaceful and it will sublimates ragadhees.
Sunday, July 30, 2017 at 00:52 am by ram govi
Ramalingam Natarajamoorthy
ஐயா கீழ் வரும் பெருமான் பாடலுக்கும் பதில் சொல்வீர்

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே. - ஆறாம் திருமுறை (தனித் திருஅலங்கல்)
Tuesday, August 1, 2017 at 01:14 am by Ramalingam Natarajamoorthy
manohar kuppusamy
Dear Brother Ram Govi, Your statement is correct.
Tuesday, August 1, 2017 at 03:55 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றார் என்பதை நம்புகிறீர்களா.மரணமிலாப் பெருவாழ்வு என்பது உடம்பைவிட்டு உயிர் பிரியாமல் இருப்பதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா.அவர் உடம்பு காற்றாலே.......எதனாலும் அழியாத உடம்பு என்பதை நம்புகிறீர்களா. நம்பினால் வள்ளலார் இன்றும் தன் உடம்போடுதான் இருக்கிறார் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.அடக்கத்தின் சின்னமாக வள்ளலார் விளங்கியதால் தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னார். உண்மை என்னவெனில் இறைவன் வள்ளலாருடன் கலந்ததை நம்பினால் வள்ளலார் வேறுஇறைவன் வேறு என்று எண்ணமாட்டீர்கள். இறைவனாகிய அருட்பெருஞ்சோதி ஓர் அனுபவம். அந்த அனுபவத்தை அடைய முயற்சி செய்யவேண்டுமேதவிர அதை வணங்குவது எப்படி. நாம் எண்ணெய் விட்டு ஏற்றிவைக்கும் விளக்கு கடவுள் ஆகுமா..காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமாய் ஏற்றுதலாம் கண்டீர் என்கிறதே அருட்பா
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை என்ற வள்ளலாரை நான் வேறு அவன் வேறு அல்ல இருவரும் ஒன்றானேம் என்ற வள்ளலாரை வணங்காமல் விடலாமா. அருட்பெருஞ்சோதி அனுபவத்தை எங்களுக்கு அருள வேண்டும் என்று இன்றும் துணையாக இருக்கும் வள்ளலாரை வணங்குகிறேன்.வள்ளலாரை வணங்கி நான் பெற்றுக்கொண்டிருக்கும் அனுபவங்கள் ஏராளம்.என்னுடன் பழகும் சன்மார்க்க அன்பர்கள் எல்லோரும் அறிவர். இதில் வாதம் வேண்டாம்.என் அறிவு அவ்வளவுதான் என்று என்னை மன்னித்து விட்டுவிடுங்கள். நன்றி.
5 days ago at 06:56 am by Muthukumaaraswamy Balasubramanian
venkatachalapathi baskar
"சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்" -

சன்மார்க்க சங்கத்தார்களையே நமது பெருமான் வணங்குகிறேன் என்று கூறிதான் இந்தப் பாடலையே ஆரம்பிக்கிறார். தொண்டரை வணங்கும் நமது தலைவரை நாம் வணங்க வேண்டாமா?
4 days ago at 03:05 am by venkatachalapathi baskar
Ramalingam Natarajamoorthy
மதிப்பிற்குரிய ஐயன்மீர் ...
.(வந்தனை என்பதும் தொழுவது என்பதும் ஒன்றல்ல)
இந்த பாடல் பெருமானின் தீர்க்கமான கட்டளை.
பெருமானின் ஒவ்வொரு கட்டளையையும் நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் தான் சன்மார்க்கப் பெரும்பயனை அடைய ஏதுவாக முடியும்.நம் அறிவைக் கொண்டு கட்டளைக்கு எதிரான கருத்துக்களை திரட்டுவது நன்மை பயக்க உகந்தது அல்ல என்பது எமது தாழ்மையான கருத்து.
3 days ago at 22:01 pm by Ramalingam Natarajamoorthy
venkatachalapathi baskar
அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
3 days ago at 03:32 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"வந்தனை என்பதும் தொழுவது என்பதும் ஒன்றல்ல'.

இறைவனை வந்தனை செய்யலாமா? தொழுலாமா? வணங்கலாமா?


பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.

வள்ளல் பெருமான் இறைநிலையை அடைந்தவரா இல்லையா?
3 days ago at 03:50 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்"- வள்ளல் பெருமானே, நீங்கள் எப்படி பாடினாலும் நாங்கள் புரிந்து கொண்டு விடுவோமா?
3 days ago at 03:54 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
114. வந்தன முறை

ஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள் யோகிகள் சாந்தர்கள் வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாதெனில்:-

வந்தனஞ் செய்வது ஆயுள் விருத்திக்கும் அறிவு விளக்கத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோருக்கும் ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விருத்தியும் அறிவு விளக்கமும் குறைவாகும்.

இதற்குச் சம்பந்தம் யாதெனில், ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தமிருக்கின்றது. எப்படியெனில்: ஒரு திருவிளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல் ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரஹங்காரமென்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி விளக்கு வைக்க வேண்டியது. ஆனால் மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக்கும்போது நோக்கமான கெட்ட உஷ்ணத்தைச் சம்பந்தப்படுத்தினால் லாபஞ் செய்யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அதுபோல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும் இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், கெட்டுப் போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறதல்லவா?

இவற்றால் ஆசாரியனையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும் சிறுவர்களையும் ஆசாரியரும் பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படியெனில்: திருவிளக்கு எரிய - சாதாரண காலத்தில் அதம பக்ஷத்துக்குரிய கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்குவைக்கின்றதும், கொஞ்சம் விசேஷ காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும் ஞானாசாரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேஷ விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல். கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன் அதமபக்ஷம் மத்திமபக்ஷத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக் கொள்வதில் ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய்விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரஹங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில் ஜீவவிருத்தியு முண்டாகின்றது. திருவிளக்கு - அதன் உஷ்ண சம்பந்தமான தைலங்களை விட்டுக் கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய் நெய் முதலியவை விட்டெரிப்பதில் விசேஷப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும் - ஜீவனுக்கு அதன் உஷ்ண சம்பந்தமான மும்மலப் போக்கையுண்டுபண்ணுவதில் ஜீவிப்பு விருத்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரஹங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தையுண்டுபண்ணிக் கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்திற்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும். இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விருத்தியாவது போல் மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விருத்தியடைகின்றது. ஆதலால் ஆசாரியரையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்குவதில் நிரஹங்கார சக்தி பெறுவதனால் ஜீவனுக்கு ஆயுள் விருத்தியுண்டாகின்றது.

சிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில் ஆயுட்குறைவு எப்படியுண்டாவதெனில்: ஒரு மணிவரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில் ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், 1 மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷ்ணத்தைப் பெரிய தீபம் கிரஹ’த்துக்கொள்வதில் ஒருமணி நேரம் எரியவேண்டிய தீபம் அரை மணிக்குள் எரிந்துவிடுவதுபோல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியோர் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மல ரஹ’தமான நிரஹங்கார மெனகின்ற மத்தாப்புக் கொப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப்போல் ஜீவனுடைய ஜீவவிருத்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாய் இருக்கிறது.

ஆசாரியன் பெரியோர் ஞானி யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால் ஆயுள் குறைவு வரமாட்டாது என்றதெப்படியெனின்:- மேற்குறித்தவர்களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால் ஆயுள்விருத்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம்: சமயச் சார்பில் பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் அனுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும் அப்பர்சுவாமி முதலியோரும் வணங்கியது முணர்க. மேலும் சமயமதாதீத ஞானிகளுக்கும் சமயமதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேக மாதியாவும் தமது பதியின் தூலசூக்கும மாதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட்குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும் - இவர்கள் சென்றவிடமெல்லாம் கண்டு சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கை கூப்புவது இயற்கை.

ஆதலால், மலசகிதர்களான ஜீவர்கள் மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்ய பாவத்தில் வணங்கலாதி தொழிலால் ஜீவிப்பின்மையும் விருத்தியும் உண்டாகின்றன. மகான்கள் கை கூப்புவதில் ஆன்மவிருத்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில்: அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.
3 days ago at 07:17 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"பெருமானின் ஒவ்வொரு கட்டளையையும் நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் தான் சன்மார்க்கப் பெரும்பயனை அடைய ஏதுவாக முடியும்.நம் அறிவைக் கொண்டு கட்டளைக்கு எதிரான கருத்துக்களை திரட்டுவது நன்மை பயக்க உகந்தது அல்ல என்பது எமது தாழ்மையான கருத்து"- இக்கருத்துக்கான விடை.


நான்கு புருஷார்த்தம்
(சன்மார்க்கப் பெரும்பயன்)


மனிதன் முக்கியமாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டியன அடியில் குறித்த 4 விஷயங்களாம். அவையாவன: 1)ஏமசித்திசெய்தல், 2)சாகாத கல்வி கற்றல்,3) தத்துவநிக்கிரகஞ் செய்தல்,
4)கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல்,இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.


கடவுணிலையறிந்து அம்மயமானவர்தான் வள்ளல் பெருமான். இந்த உண்மையை புரிந்து கொண்டால் விவாதம் பெருகாது.

உண்மை

("உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்"-)

"அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு"
3 days ago at 07:29 am by venkatachalapathi baskar
Ramalingam Natarajamoorthy
அன்புடையீர், பெருமான் நம் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குரு.அவர் கூறுவதை வரிக்கு வரி ,வார்த்தைக்கு வார்த்தை ,சொல்லுக்கு சொல் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் .ஏனென்றால் நாம் சாதக நிலையில் இருந்து சாத்திய நிலையை அடைய வேண்டும்.உலகியலில் பெற்ற சிறு விஷயங்களை பெரிதாக நினைக்காமல் சன்மார்க்க சாதனையை மட்டுமே லாபமாக கருத வேண்டும்.
பெருமானின் பேருபதேச வரிகள் அனைவரின் விசாரணைக்கும் ....... சமப்பிக்கிறேன் ........
பேருபதேசம்

ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம்..........தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்...........என்றும் அன்புடன்
இராமலிங்கம் நடராஜமூர்த்தி
2 days ago at 04:56 am by Ramalingam Natarajamoorthy
venkatachalapathi baskar
"ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி "அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்".

விசாரம் செய்து தெய்வம் எது? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2 days ago at 07:13 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"அன்புடையீர், பெருமான் நம் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குரு".
"அவர் கூறுவதை வரிக்கு வரி ,வார்த்தைக்கு வார்த்தை ,சொல்லுக்கு சொல் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்

(உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்"

"அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு")ஏனென்றால் நாம் சாதக நிலையில் இருந்து சாத்திய நிலையை அடைய வேண்டும்.உலகியலில் பெற்ற சிறு விஷயங்களை பெரிதாக நினைக்காமல் சன்மார்க்க சாதனையை மட்டுமே லாபமாக கருத வேண்டும்".


சன்மார்க்க பெரும்பலனைப் (கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல்) பெற, அந்நநிலையினை அடைந்தவரிடம் மட்டுமே கற்க முடியும்.

அந்நநிலையினை அடைந்த வள்ளல் பெருமானை குறைந்தபட்சம் குருவாக ஏற்றால்கூட, நாம் அவரை வணங்கித்தான் ஆக வேண்டும்.

(அன்புடையீர், பெருமான் நம் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய குரு)


குருவை வணங்க கூசி நின்றேனோ?

வள்ளல் பெருமானை வணங்க அப்படி என்ன கூச்சம்?
2 days ago at 07:35 am by venkatachalapathi baskar
Ramalingam Natarajamoorthy
உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்")
ஒன்றான பின் இருப்பது எது?அல்லது யார்?
(அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு)
அருட்சோதி ஆன பிறகு இருப்பது யார்
சன்மார்க்க பெரும்பலனைப் (கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல்) பெற, அந்நநிலையினை அடைந்தவரிடம் மட்டுமே கற்க முடியும்.
கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆன பிறகு இருப்பது எது அல்லது யார்??
தம்மைப்போல் ஒவ்வொரு மனிதரும் சன்மார்க்கம் அடைய முடியும் ,அடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பம் .சன்மார்க்கத்தை என் மார்க்கம் என்று கூறுகிறார்,சன்மார்க்கத்தை நானே நடத்துகிறேன் என்கிறார்.
(((தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், -பேருபதேசம்))))

மேற்கண்ட பெருமானின் பேருபதேச வரிகளுக்கு என்ன பொருள்?

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே

இந்த பாடலை மீண்டும் மீண்டும் படித்து தெளிக .சன்மார்க்கத்தை ஒரு மதமாக மாற்றாமல் சன்மார்க்கமாகவே விளங்க பெருமானால் இடப்பட்ட கட்டளை இந்த வரிகள் .

வள்ளலாரை வணங்குவது சரியா தவறா.என்பது போன்ற விவாதங்களை விடுத்தது அவர் காட்டிய வழியில் மரணமில்லா பெருவாழ்வைப் பெற
முயல்வோம்
19 hours ago by Ramalingam Natarajamoorthy
DAEIOU - தயவு
இங்கிதமாலை பதிகத்துக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட அருள் உரை.
இங்கித மாலை பாடல் எண்.8.

கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றியதாம்

பண்கள் இயன்ற திருவாயால் பலிதா என்றார் கொடுவந்தேன்

பெண்கள் தரல் ஈ(து) அன்று என்றார் பேசப் பலியா(து) என்றேன் நின்

எண்கள் பலித்த(து) என்கின்றார் இதுதேன் சேடி என்னேடீ.

திரு அருட்பிரகாச வள்ளலார்.

Read more...
1432741756728.jpg

1432741756728.jpg

DAEIOU - தயவு
திருவண்ணாமலையில் சேவை செய்யக் காத்திருக்கும் அன்பர்கள்.
இது போன்றதொரு அன்பர்கள் குழாம் பெருமளவில் கூடினால், மாதப் பூச நாட்களில், வடலூரிலும் மேட்டுக் குப்பத்திலும் சுத்தத்திற்கு குறையேற்படுமா?

திருக்கோயிலூர் வழக்குறைஞர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மையம் மட்டும் மாதப் பூச நாட்களில் அங்கு இயங்கி வருகின்றது.

New Doc 2017-10-30_1.jpg

New Doc 2017-10-30_1.jpg

DAEIOU - தயவு
Madurai Dt. Thirumangalam Tk. A.Kokkulam Sathiya Gnana Sabai under construction.
The Sanmargis at A.Kokkulam village near Chekkanurani, Thirumangalam Taluk of Madurai.constructing the new Sathiya Gnana Sabai in their village and it has reached the lintel level...The villagers are co operating and unite in this work..

IMG-20171010-WA0000.jpg

IMG-20171010-WA0000.jpg

IMG-20171010-WA0002.jpg

IMG-20171010-WA0002.jpg

DAEIOU - தயவு
Go meatless...Times of India Daily Newspaper.(3 photos)
New Doc 2017-11-24 (1)_1.jpg

New Doc 2017-11-24 (1)_1.jpg

New Doc 2017-11-24 (2)_1.jpg

New Doc 2017-11-24 (2)_1.jpg

New Doc 2017-11-24_1.jpg

New Doc 2017-11-24_1.jpg

Vallalar Universal Mission - USA
Vallalar Life Events 16
Vallalar_Life_events16.JPG

Vallalar_Life_events16.JPG

deepa deepa
வணக்கம் ஐயா வள்ளலார் சந்தித்த சங்கராச்சாரியாரின் பெயர் என்ன ?
ஒரு சிறிய தெளிவு வேண்டும். வள்ளலார் (1823-1874) தமிழ் மொழியின் சிறப்பை , கஞ்சி மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் அவர்களுக்கு எடுத்து உரைக்கிறார். அவர் எத்தனையாவது மடாதிபதி என்று அறிய முடியுமா ?

64. Chandrasekharendra Saraswati VI (18131851)

65. Sudarsana Mahadevendra Saraswati (18511891)

venkatachalapathi baskar
நமது பெருமான் சென்னையில் வசித்த காலத்தில் (1858 வரை) இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம். காஞ்சி சங்கர மடத்தில் தகவல் கிடைக்கலாம்.
2 days ago at 09:10 am by venkatachalapathi baskar
Kovai Siva Prakasa Swamigal
திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு பத்து நாள்கள் - தொடர் அன்னதானம் மற்றும் சொற்பொழிவு - அழைப்பிதழ் - 22-11-2017 முதல் 02-12-2017 வரை (10 நாள்கள் )
திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு பத்து நாள்கள் - தொடர் அன்னதானம் மற்றும் சொற்பொழிவு - அழைப்பிதழ் - 22-11-2017 முதல் 02-12-2017 வரை (10 நாள்கள் )

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,

திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு பத்து நாள்கள் - தொடர் அன்னதானம் மற்றும் சொற்பொழிவு 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான விழா நவம்பர் 22-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

கோவை சிவப்பிரகாச சுவாமிகளும் 10 நாட்கள் முழுவதும் அங்கு இருந்து சொற்பொழிவு செய்வார்கள்,

அனைவரும் வருக!

Read more...
Sivaprakasa Swaigal Meetukuppam (1).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (1).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (2).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (2).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (3).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (3).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (4).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (4).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (5).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (5).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (6).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (6).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (7).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (7).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (8).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (8).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (9).jpg

Sivaprakasa Swaigal Meetukuppam (9).jpg

thiruma valavan
சன்மார்க்க கொடி விளக்கம்
[11/11, 8:32 AM] Thiruma the great:

[11/11, 8:33 AM] Thiruma the great: 👆🏿சன்மார்க்க கொடி விளக்கம் என்ற தலைப்பில் சேலம் குப்புசாமி மேட்டுக்குப்பத்தில் 09-11-2017ல் ஆற்றிய உரை பகுதி - 1. (சேலம் குப்புசாமி சிறு வயதில் நாத்திகனாக இருந்தவர். பின்னர் மெய்ப்பொருளை அறியவிரும்பி உலகதின் அத்தனை மார்க்கங்களுக்கும் சென்று கடைசியில் சன்மார்க்கமே சிறந்த வழி வள்ளலாரே சிறந்த வழிகாட்டி என தேர்ந்தார்)👆🏿

[11/11, 12:31 PM] Thiruma the great: https://youtu. Read more...