இராமலிங்க அபயம் துணை


வள்ளலாரைப் பற்றிய எனக்குத் தெரிந்த எல்லா உண்மைகளையும் இங்கே எழுத எண்ணுகிறேன். வள்ளலாரின் பக்தி,தயவு,ஒழுக்கம்,தவம் ஆகிவற்றின் பயனாக இறைவனே வள்ளலாரிடம் அவர் இருந்த இடம் தேடி வந்து கலந்துகொண்டார்.இதனால் வள்ளலார் வேறு இறைவன் வேறு என்ற நிலை மாறி வள்ளலாரே இறைவனாக இருப்பது உண்மை. தனது தூல தேகத்தை மண்ணுக்கோ நெருப்புக்கோ விடாமல் ஞான தேகம் பெற்று இன்றும் தன் உடலோடு இருக்கும் ஒரே ஒரு மகான்  இந்த உலகத்திலேயே வள்ளலார் ஒருவர்தான்.அவரை ஒரு சாதாரண குருவாக மட்டும் எண்ணாமல் இறைவனாகவே புரிந்துகொள்ளுங்கள்.

உலகத்தில் உயிர்களுக்கு உறும் இடையூறுகளை எல்லாம் நீ அடைந்து விலக்குக என்று ஆண்டவன் வள்ளலாருக்கு ஆணை இட்டதோடல்லாமல் அவரை நமக்குத் துணையாகவும் வைத்திருக்கின்றான்.நமக்குத் துணையாக இருக்கும் வள்ளலார் நமக்கு வரக்கூடிய இடையூறுகளையும் நீக்க வல்லவர். எனவே வள்ளலாரை வணங்கி நாம் இன்பமான வாழ்வு பெற்று வாழ்வோம்.வள்ளலார் இருந்த இடம் தேடி வந்து ஆண்டவன் அவருடன் கலந்து இருவரும் ஒன்றாக உள்ளதால் இறைவன் வேறு அல்ல வள்ளலார் வேறு அல்ல. தன்னை வணங்க வேண்டாம் என்று வள்ளலார்   சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு ஏமாந்து போகவேண்டாம்.அவர் தன்னடக்கம் மிக்கவர்.அதனால் அவ்வாறு சொன்னார்.இந்த ஜகத்தில் உள்ளவர்கள் மிகத் துதிக்கத் தக்கோனாக என்னைவைத்து என் அகத்தும் புறத்தும் இறைவன் விளங்குகின்றான் என்பது போன்ற அனேக பாடல்கள் அருட்பாவில் உள்ளன. அவற்றையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.வள்ளலாரை வணங்குவோம் இடர்கள் அனைத்தும் நீங்கப் பெற்று அவரது துணையுடம் இன்பமாக வாழ்வோம். . வள்ளலாரை ஒரு குருதான் என்று ஏமாந்து போகாதீர்கள். அவரைத் தெய்வமாக ஏற்று வணங்குங்கள்.  வள்ளலார்ட நம்மோடே இருக்கிறார்.நன்றி இந்தச் சங்கத்திலே வார வழிபாடு,மாதாந்திர வழிபாடு, சத்விசாரம் ஆண்டுதோறும் நம் பெருமானாரின் பிறந்த தின வழிபாடும் நடைபெறுகின்றது.வந்தனம் நன்றி முபா

Welcome to SANMARKA SANGAM AT ALWARTHIRUNAGAR - MUPA

 

 


இராமலிங்க   அபயம்  துணை

Do not delete this word/this line, you can add content before this line

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம்
எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக்கு அருள் புரிந்தே

எல்லாருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்

எல்லாருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்

எல்லாருக்கும் செய்யாமை யகது குறித்து இசை எனக்கே.

இந்தப் பாடலில் வள்ளலார் என்ன சொல்லுகிறார்.இறைவன் நமக்கெல்லாம் வள்ளலாரைத் துணையாய் இருக்க வைத்துள்ளான் என்பதே.

நமக்கெல்லாம் துணையாய் இருக்க வைத்தால் போதுமா.அதற்குரிய ஆற்றல்கள் எல்லாம்

Read more...
newdesign4b_19.gif

newdesign4b_19.gif

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம் s
சைதாப்பே ட்டை சன்மார்க்க சங்கத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் திரு அருட்பா பாடல்களுக்கு உரை காணுவது வழக்கம்.அனுபவ மாலை உரை ஆரம்ப தினத்தன்று ஓர் அன்பர் புதியதாகச் சங்கத்திற்கு வந்தார்.திரு அருட்பா ஆறாம் திருமுறை ரூபாய் ஐம்பது கொடுத்து விலைக்கு வாங்கிக்கொள்ளும் வசதி இல்லாதவர்.குறைந்த வருமானம் உள்ளவர்.யாரிடமும் இனாமாகப் பெறவும் அவர் விரும்பவில்லை.எனவே ஒருபேப்பரில் அனுபவ மாலை முதல் பா டலை எழுதிக்கொண்டு சென்றார் .

அடுத்த வாரம் இரண்டா வது பாடலுக்கு உரை நிகழ்ந்தது.அன்றும் ஒரு பேப்பரில் இரண்டாவது பாடலை Read more...
Arun Prakash
wow !!! vera level 🙂🙂
Thursday, November 28, 2019 at 03:58 am by Arun Prakash
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம்
எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக்கு அருள் புரிந்தே

எல்லாருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்

எல்லாருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்

எல்லாருக்கும் செய்யாமை யகது குறித்து இசை எனக்கே.

இந்தப் பாடலில் வள்ளலார் என்ன சொல்லுகிறார்.இறைவன் நமக்கெல்லாம் வள்ளலாரைத் துணையாய் இருக்க வைத்துள்ளான் என்பதே.

நமக்கெல்லாம் துணையாய் இருக்க வைத்தால் போதுமா.அதற்குரிய ஆற்றல்கள் எல்லாம்

Read more...
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் ஒரு மாமன்னர்
வள்ளலார் ஒரு மாமன்னர் c

ஒவ்வொரு மனிதனும் தன் மகன் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி தன் மகனே அரசனாகட்டும் என்று தன் மகனுக்கு மகுடம் சூட்டுவது வழக்கம். அதேபோல் இறைவனும் தன் மகனான வள்ளலாருக்கு ஆட்சி செய்ய மகுடம் சூட்டினான்.

ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்

ஜோதி மா மகுடம் சூட்டிய தந்தையே (அகவல் வரி 1130)

அண்ட பகிரண்டம் முழுவதும் ஆட்சி செய்யும் இறைவன் தன் கையில் பிடித்திருந்த செங்கோலை தன் மகனாகிய வள்ளலாரிடம் தந்து இனி நீ ஆட்சி செய் என்று கூறினான்.

தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்

Read more...

Audio:

venkatachalapathi baskar
அருமை.
Monday, November 4, 2019 at 15:10 pm by venkatachalapathi baskar
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
vallalaarin samayap puratchi

Download:

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
vallalaar about god

Download:

SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை
ஸ்ரீ இராமலிங்க அபயம் துணை.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

சன்மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை

இதுகாறும் என்னோடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை.

நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை .எனது போதனையின் கருத்தின்படி நடக்கவும் இல்லை .நான் சொல்வதைக் கவனிக்க மாட்டோம் என்று திடப்படுத்திக்கொண்டீர்கள் போலும்

Read more...
6 Comments
Vivek D
Arumai..
Thursday, December 6, 2018 at 17:17 pm by Vivek D
Muthukumaaraswamy Balasubramanian
இந்தக் கட்டுரையை ஒருவர் மட்டும்தான் படித்திருக்கின்றாரா .வேறு யாருமே படிக்கவில்லையா.ஐயா செந்தில் ஐயா .நீங்களாவது எப்போதாவது என் கட்டுரைகளைப் படிப்பதுண்டா.நான் எழுதுவதெல்லாம் தேவையே இல்லாத கருத்துக்களா.யாராவது பதில் சொல்லுங்களேன். வந்தனம் முபா,
Sunday, December 23, 2018 at 09:37 am by Muthukumaaraswamy Balasubramanian
manohar kuppusamy
WHAT ABOUT KARMA???????????
Thursday, December 27, 2018 at 13:24 pm by manohar kuppusamy
Senthil Maruthaiappan
என்னுடைய விசாரம் மிகச் சிறுது, அகண்டதல்ல ஆதலால் மற்ற சக சன்மார்க்க சிந்தனையாளார்களின் பங்க்களிப்பை வோண்டியே தங்களைப் பேன்று காத்துள்ளோம்.

எதாது அற்புதம் நிகழ்த்துவார் அல்லது அவர் தொடர்பால் இவ்வுலகப் பொருள் கிடைக்கும் என்று தன்னை சுற்றி வந்த அன்பர்களுக்குக்காவே வள்ளாரர் அவ்வாரு கூறியிக்கக் கூடும்.

என்வே, முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளிவரும் காலம் வரை கோழி அடைகாப்பது அவசியம் என்பது போல் சன்மார்க்க பிடியாதவர்களின் நிலமையும் ஆதலால் காத்திருப்போம் ஒவ்வொரு ஆன்மாகளும் வெளிவரும்வரை.

--

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து. திருவருட்பா #6-110

-- ஆதலால் நாம் கவலை கொள்ள தேவையில்லை. The Master Plan is from HIM.
Wednesday, January 2, 2019 at 00:17 am by Senthil Maruthaiappan
Williams  Chelliah
Best experience.Real one.
Wednesday, January 2, 2019 at 14:41 pm by Williams Chelliah
Williams  Chelliah
Karma is in lower level.When we transcend high through the support and guidance of THIRUARUTPA we reach final destination ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI.Our mission gets completed.We are with the CREATOR now.In GNANASARIYAY(6th Thirumarai) of THIRUARUTPA how to reach quickly is described.
Thursday, January 3, 2019 at 15:25 pm by Williams Chelliah
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்கவேண்டும்.
மனுமுறை கண்ட வாசகம் என்ற பகுதியில் குருவை வணங்கக் கூசி நின்றேனோ என்று வள்ளலார் கூறியுள்ளார்.குருவை வணங்காமல் இருப்பது பாவம் என்கிறார்.வள்ளலாரைத் தெய்வமாக ஏற்போர் அவரை வணங்கியே தீருவர். சிலர் அவரை குரு என்று சொல்கிறார்கள். ஆனாலும் அவரை வணங்குவது இல்லை. நாம் செய்துள்ள செய்கின்ற பாவங்கள் போதாதா. இன்னும் ஒரு பாவம் சேரவேண்டுமா. வள்ளலாரை வணங்குவது பெரிய குற்றமா என்ன.இறைவன் உங்களுக்குத் துணையாக என்னை இருக்க வைத்திருக்கின்றான் என்று பாடியுள்ளார்.நமக்கு என்றும் துணையாக இருக்கும் அவரை விடலாமா. என்றும் அழியா Read more...
natarajan jaganathan
அருள் ஜோதி டிவியிலும், பல மேடைகளிலும் சொ்ன்னதை இங்கே வரிவடிவத்தில் பகிர்ந்து கொண்ட ஐயாவுக்கு மிக்க நன்றி. சன்மார்க்க வழியில் நடக்க முயற்சிக்கும் என் போன்றோர்க்கு இந்த அனுபவ உரைகள் மிக்க பயனுள்ளதாக அமையும். பழுத்தி அனுபவமிக்க உங்களது அனுபவங்களை மேலும் எதிர்ப்பார்க்கிறோம்.
Sunday, December 30, 2018 at 11:09 am by natarajan jaganathan
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
எனக்கு எப்போது என்ன தேவை என்று வள்ளலாருக்குத் தெரியும்.
:

1977ம் ஆண்டு தொடங்கி வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் காணச் சென்னையிலிருந்து நாங்கள் பாத யாத்திரை மேற்கொண்டோம் . 1982ம் ஆண்டு.எங்கள் பாத யாத்திரைக்குழு காடாம் புலியூரில் இரவு தங்கி மறுநாள் காலை ஆறு மணிக்குப் புறப்பட்டது.அன்பர் ராஜமாணிக்கம் என்பவர் நாங்கள் புறப்படும்போது எங்களுக்குக் காரா பூந்தி வழங்கினார். அது எண்ணெய்ப் பண்டமாயிற்றே என்று நாங்கள் தயங்கினோம் .நான் பாத யாத்திரை நடத்துனர். எனவே என்னால் சாப்பிடாமல் தவிர்க்க முடியவில்லை. சாப்பிட்டேன். அவ்வளவுதான். சிறிது தூரமே நடந்தோம்.அந்த ஊர் எல்லையைத் Read more...
3 Comments
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
இந்தவித அற்புதங்களை வள்ளல்பெருமானின் உண்மையான அடியார்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.நிஜமானவர்கள் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் நிச்சயம் இருக்கும்.தங்களுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. வாழ்க.
Friday, December 28, 2018 at 14:01 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
venkatachalapathi baskar
அற்புதம் அற்புதமே! அருள் அற்புதம் அற்புதமே!
Friday, December 28, 2018 at 17:36 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
வள்ளல் பெருமானின் வழி நடந்த நாள் முதல் தங்களுக்கு ஏற்பட்ட எல்லா அனுபவங்களையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டுகிறேன். அந்நூலிற்கு 'ஒரு சன்மார்க்கியின் வாழ்வில் நடந்த அருள் அனுபவங்கள்" என்று பெயரிடலாம்.
Saturday, December 29, 2018 at 06:16 am by venkatachalapathi baskar
SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை நான் ஏன் வணங்குகிறேன்
ஒரு பதார்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் ருசி தெரியாது.ருசி தெரியாத பதார்த்தத்தின் மீது இச்சை போகாது என்றார் வள்ளலார்,நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் என்றாரே வள்ளலார் அந்த வார்த்தையை நான் முழுவதுமாக நம்புகிறேன் .அவரைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் வணங்குவதில்லை .அவரே என் குல தெய்வம். நான் பெற்ற பெறுகின்ற அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் ஒன்றை இதோ எழுகிறேன்.இதைத் தற்பெருமை என்று எண்ணிவிடவேண்டாம்.வள்ளலாரை நீங்களும் வணங்கினால் எந்தக் குறையும் இல்லாமல் வாழலாமே.

சில ஆண்டுகட்குமுன் எங்கள் குடு Read more...
2 Comments
venkatachalapathi baskar
அற்புதம். இதுபோன்று தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
Tuesday, December 25, 2018 at 03:39 am by venkatachalapathi baskar
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நெகிழ்ச்சி.மகிழ்ச்சி.
Friday, December 28, 2018 at 14:02 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்