SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை
ஸ்ரீ இராமலிங்க அபயம் துணை.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

சன்மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை

இதுகாறும் என்னோடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளவில்லை.
நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை .எனது போதனையின் கருத்தின்படி நடக்கவும் இல்லை .நான் சொல்வதைக் கவனிக்க மாட்டோம் என்று திடப்படுத்திக்கொண்டீர்கள் போலும்

இந்த வாசகங்கள் சுத்த சன்மார்கக் கொள்கை என்ற தலைப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பது சமயத் தேவர்களை வழிபடுவது அவசியமல்ல .மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று ,அதில் மகிழ்ந்து அகங்கரித்து,மேல் படிகள் ஏறவேன்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் ,இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல் சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவர் உண்டென்று ,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து ,பூரண சித்தியைப் பெறவேண்டுவது சன்மார்க்க கொள்கை.
மேலும் தனித் தலைவன் லட்சியம் தவிர அநித்திய சடச் துக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற்குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை. (பக்கம் 409 410).
இதற்குப் பிரமாணமாக இரண்டு பாடல்கள் காட்டப்பட்டு உள்ளன.
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் நுமது தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினோடும் கேட்பீர்
என்மார்கத்து எனை நுமக்குள் ஒருவன் எனக் கொள்வீர் எல்லாம் செய்வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன்மார்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்தறிமின் ஈண்டே 1734

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இம்மொழிகேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மதத் தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர்பால்
இறங்கலிலென் பேசுதலால் என் பயனோ நடஞ்செய் இறைவர் அடிப்புகழ் பேசி இருக்கின்றேன் யானே.1161
சன்மார்க்கம் இன்னதென்று அறிந்தவர்கள் சமயத் தெய்வங்களை வழிபடுதல் அவசியம் அல்ல என்று உணர்தல் வேண்டும் என்று வள்ளலார் எதிர்பார்த்திருந்தார் என்று புலனாகிறது.
இங்கே இன்னொரு பாடலை நாம் கவனத்தில் கொள்ளலாம்.
தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும் சேர்கதி பல பல செப்புகின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய்ச் சமாதியை மெச்சுகின்றாரும்
மெய் வந்த திருஅருள் விளக்கம் ஒன்றில்லார் மேல் விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய் வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே
*****************
வள்ளலாரின் நெருங்கிய நண்பராகிய ரத்ன முதலியார்க்கு அனுஷ்டான விதியும் கணபதி பூஜா விதியும் எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
செவ்வாய்க் கிழமை விரத முறையை புதுவை வேலு முதலியாருக்கு எழுதிக்கொடுத்திருக்கின்றார்.
சன்மார்க்கம் என்பது யாது;?பக்கம் 406
எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டம் என்று அறிக .மார்க்கம் நான்காவன.தாசமார்க்கம்,சத்புத்திர மார்கம்,மித்திர மார்க்கம் சன்மார்க்கம்.சன்மார்க்கம் மூன்று வகைப்படும் . சமய சன்மார்க்கம்,மத சன்மார்க்கம்,சுத்த சன்மார்க்கம். சமய சன்மார்க்கம் கொல்லாமை,பொறுமை,சாந்தம்,அடக்கம்,இந்திரிய நிக்கிரகம்,ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம்.
மத சன்மார்க்கம் என்பது;
நிர்குண லட்சியம் உடையது.
சுத்த சன்மார்க்கம் என்பது;
கேட்டல்,சிந்தித்தல்,தெளிதல், நிஷ்டை கூடல் ஆகிய நான்கையும் கடந்து ஆரூடராக நிற்பார்கள்.
**********
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்;
உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே—திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.....1685
கிளைச் சாலைகள் ..................542
சன்மார்க்க விவேக விருத்தி.542
சன்மார்க்க போதினி 544
சன்மார்கத்தை அவரே ஏன் நடத்தவேண்டும்.யாரிடமும் ஏன் ஒப்படைக்கவில்லை.

தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திருக்கோயில் கண்டிடவும்
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் ......209
சன்மார்கப் பெரு நெறியின் ஒழுக்கங்கள் நான்கு.
இந்திரிய ஒழுக்கம்...........ஏம சித்தி இந்த இச்சை இன்னும் ஏன் நிறைவேறவில்லை
முதல் ஐந்து திருமுறைகளும் வெறுமனே பக்திப் பாடல்கள்தானா;இல்லை.அவை ஒழுக்கம் நிறைந்த பாடல்களே. உதாரணமாக முதலில் பாடிய தெய்வமணி மாலையையே எடுத்துக்கொள்வோம் எல்லாப் பாடல்களும் ஒழுக்கங்களையே வற்புறுத்தும், காம உட்பகைவனும்.....ஈ என்று நான் ஒருவரிடம்.........எல்லாம் ஒழுக்கங்களே. அவை பின்பற்றப்படாததால் நான்கு ஒழுக்கங்கள் கடைசியில் அதாவது 1872ம் ஆண்டில் உரைநடையாக எழுதினார். .
நான்கு ஒழுக்கங்கள் எழுதப்பட்டது நவம்பர் 1872

சங்கத்தார் பழக்க விதி ;25.11.1872 page 553 உரைநடை

சாலையில் உள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை. பக்கம் 550 9.3.1872

1872 ஞானசபை திறப்பு.அது ஏன் மூடப்பட்டது.

தருமச் சாலையில் சுப்ரமணியப்பிள்ளை யின் கலப்புத் திருமண விசார ணை. பக்கம் ஜெராக்ஸ் 3 8
இரவில் தீபம் இல்லாத இடத்தில் இருக்கக்கூடாது.ஏன் எனில் அஹ்து பிராண நஷ்டம் பண்ணும்.
அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிய கிருகத்தில் அருட்பிரகாசம் இல்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் உண்டாகும்.ஆதலால் நாம் நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்றுக் கொள்வது நலம்.
இதை அநேகர் செய்ததில்லை.

இறைவன் வள்ளலாரை எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நலிதல் அழகோ என்று அறிவுறுத்தியதாக அறிகிறோம்.இது வள்ளலாருக்கு மட்டுமா..மற்றவர்கள் செய்ததாகத் தெரியவில்லை.
வீராசாமி நாயக்கர் ஒவ்வொரு கடிதத்திலும் வள்ளலார் இவரைப்பற்றி எழுதுகிறார்.இவர் வள்ளலாருடனே இருந்தவர்.இவர் சென்னைக்குச் சென்றாலும் விடாமல் இவரைப்பற்றி வள்ளலார் விசாரிக்கின்றார். அப்படிப்பட்ட வீராசாமி நாயக்கர் வள்ளலாரை விட்டுப் பிரிகிறார்.அவரைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளது;”நாயக்கர் சாமிக்குப் பித்த விசேஷத்தால் சிறிது குணம் விகற்பித்து அடிக்கடி சொல்லாமல் போவதும் பின்பு வருவதுமாக இருக்கின்றார்.கடிதம் எண் 29 DATE 28.3.1866
LETTER NO.30 DATED 19.4.1866 நாயக்கர் சாமி என்பவர் தற்காலம் இவ்வுலகில் இருக்கின்ற தான் தோன்றிச் சாமிகளில் தலை நின்ற சாமி என்க.அறியவேண்டியவற்றை அறிய முயலாமையோடு பித்த மயக்கான் மனம் சென்ற வழி சென்று பித்தச்சாமி என்னும் விசேடப் பேர் ஒன்று மிகையாகக் கொண்டு இருக்கின்றனர்.ஆகலில் சூழம் வண்ணம் சூழ்க.
வள்ளலார் கருத்து சிறிதே கண்டு கொண்டதும் எல்லாம் தெரிந்ததுபோல் ஆணவம் வந்துவிட்டதோ.
**********
சித்தி வளாகத்தில் வள்ளலார் வைத்திருந்த இரண்டு இரும்புப் பெட்டிகளையும் சபாபதி சிவாச்சாரியார் களவு செய்து கொண்டுவந்தார்.6.12.1884.......அந்தப் பெட்டிகளை ஞான சபையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3.6. 1890. PAGE 143

ஒழுக்கம்;
விக்கிரம வருஷம் தை மாதம் 6 ம் நாள் கூடிய கூட்டத்தில் எடுத்துக்கொண்ட தீர்மானம்.;
நமது தந்தையாராகிய திரு அருட்ப்ரகாச வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய ஒழுக்கங்களில் தற்காலம் நாம் நடக்கக் கூடுமான அளவில் ஒழுக்கங்களை வருகிற மாசி மாதப் பூசத்தினத்தில் எழுதிக்கொண்டு வரும்படிப் பிரார்த்திக்கிறோம்.((கை எழுத்து பக்கம் 4 5 )
விக்கிரம வருஷம் 2 7 தேதி நடந்த கூட்டத்தில் எழுதப்பட்டுள்ளது;
தைமாதம் கூடிய சபையில் அடுத்த மாசி மாதத்திய பூசத்தில் கூடும் சபைக்கு வரும்போது ஒழுக்கம் முதலிய ஏற்பாடுகள் எழுதிக்கொண்டு வரும்படியாக திட்டம் செய்திருந்தும் அவ்விதம் நடவாததினாலும் மறுபடியும் அடுத்த பங்குனி மாதத்தில் ஏற்பாடுகள் செய்யவேண்டியது.பக்கம் 4 8
பங்குனி மாதம் 2 8 தேதியன்று கூடிய கூட்டத்தின் தீர்மானம்;பக்கம் 5 0
ஒழுக்க விதிகளைப் பின்னிட்டுப் பிரத்தியேகமாய் யோசிக்கும்படியாயும் தீர்மானிக்கலாச்சுது.

வெந்நீரும் கரிசாலையும்;
சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு மேல் அழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு ,நல்ல ஜலத்தில் கொஞ்சம் போட்டு 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட ௨ பங்கு நீர் நிற்கக் காய்ச்சி அதைத் தாகம் கொள்ளுதல் வேண்டும்.நேராத பட்சத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமேயன்றிக் குளிர்ந்த ஜாலம் கொள்ளப்படாது
சுத்த சன்மார்கத்தில் தேக விருத்தி செய்தல் வெந்நீராதலால் எக்காலத்தும் சுத்த ஜலம் சேர்க்கக்கூடாது. காலம் கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி.குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது,சமையல் செய்தல் முதலிய வகையிலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பை நீடிக்கச் செய்யும். பக்கம் 432 உரைநடை.

ரத்ன முதலியாருக்கு கடைசி கடிதம் NO,38 தேதி 20.8.1869.ஒவ்வொரு கடிதத்திலும் சிவ சிந்தனையும் ஜீவகாருண்யமும் மாறாமல் ஜாக்கிரதையோடு இருப்பீர்களாக.
வள்ளலாரின் நெருங்கிய நண்பராகிய ரத்ன முதலியார்க்கு அனுஷ்டான விதியும் கணபதி பூஜா விதியும் எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
செவ்வாய்க் கிழமை விரத முறையை புதுவை வேலு முதலியாருக்கு எழுதிக்கொடுத்திருக்கின்றார்.
முதல் மாணாக்கர் தொ.வேலாயுத முதலியார் விநாயகர் அகவலும் சங்கர விஜயமும் எழுதியுள்ளார் என்றால் அவர்கள் சமய மத மார்கங்களை விட்டு விட்டவர்களா.
நித்திய கர்ம விதி,பொது விதி, சிறப்பு விதி முதலியவற்றில் நாம் எவ்வளவு கடைப்பிடிக்கிறோம்

 

6 Comments
Vivek D
Arumai..
Thursday, December 6, 2018 at 17:17 pm by Vivek D
Muthukumaaraswamy Balasubramanian
இந்தக் கட்டுரையை ஒருவர் மட்டும்தான் படித்திருக்கின்றாரா .வேறு யாருமே படிக்கவில்லையா.ஐயா செந்தில் ஐயா .நீங்களாவது எப்போதாவது என் கட்டுரைகளைப் படிப்பதுண்டா.நான் எழுதுவதெல்லாம் தேவையே இல்லாத கருத்துக்களா.யாராவது பதில் சொல்லுங்களேன். வந்தனம் முபா,
Sunday, December 23, 2018 at 09:37 am by Muthukumaaraswamy Balasubramanian
manohar kuppusamy
WHAT ABOUT KARMA???????????
Thursday, December 27, 2018 at 13:24 pm by manohar kuppusamy
Senthil Maruthaiappan
என்னுடைய விசாரம் மிகச் சிறுது, அகண்டதல்ல ஆதலால் மற்ற சக சன்மார்க்க சிந்தனையாளார்களின் பங்க்களிப்பை வோண்டியே தங்களைப் பேன்று காத்துள்ளோம்.

எதாது அற்புதம் நிகழ்த்துவார் அல்லது அவர் தொடர்பால் இவ்வுலகப் பொருள் கிடைக்கும் என்று தன்னை சுற்றி வந்த அன்பர்களுக்குக்காவே வள்ளாரர் அவ்வாரு கூறியிக்கக் கூடும்.

என்வே, முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளிவரும் காலம் வரை கோழி அடைகாப்பது அவசியம் என்பது போல் சன்மார்க்க பிடியாதவர்களின் நிலமையும் ஆதலால் காத்திருப்போம் ஒவ்வொரு ஆன்மாகளும் வெளிவரும்வரை.

--

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து. திருவருட்பா #6-110

-- ஆதலால் நாம் கவலை கொள்ள தேவையில்லை. The Master Plan is from HIM.
Wednesday, January 2, 2019 at 00:17 am by Senthil Maruthaiappan
Williams  Chelliah
Best experience.Real one.
Wednesday, January 2, 2019 at 14:41 pm by Williams Chelliah
Williams  Chelliah
Karma is in lower level.When we transcend high through the support and guidance of THIRUARUTPA we reach final destination ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI.Our mission gets completed.We are with the CREATOR now.In GNANASARIYAY(6th Thirumarai) of THIRUARUTPA how to reach quickly is described.
Thursday, January 3, 2019 at 15:25 pm by Williams Chelliah