SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் கூறியுள்ள பயிற்சி
ஆன்மா இந்த  உடம்பினுள்ளேதான் இருக்கிறது. ஆனால் அது இருதயம்,நுரையீரல் போன்று மனித உடம்பின் ஓர் உறுப்பாக இல்லாமல் தனியே இருக்கிறது என்கிறார் வள்ளலார். அதனால்தான் அது வெளியே போய்விடுகிறது. அந்த ஆன்வை நம் உடம்பின் உள்ளே ஓர் உறுப்பாக மாற்றிக்கொள் என்கிறார் வள்ளலார் அகவலில்.   
அகப்பூ அக வுறுப்பாக்க அதற்கு அவை அகத்தே வகுத்த அருட்பெருஞ்சோதி.   
 அகம் என்பது ஆன்மா.அதை அகத்தினுள்ளே உறுப்பாக்க அத ற்கு என அவை அதாவது சபை அதாவது புருவமத்தி  சிற்சபை அகத்தே நம்முள்ளே வகுத்த அருட்பெருஞ்ஜோதி..
நான்கு ஒழுக்கங்களை வள்ளலார் நமக்குத் தந்துள்ளார். அதாவது இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்.இந்திரிய ஒழுக்கத்தை யார் முழுமையாகக் கடைப்பிடிக்கின்றார்களோ அவர்கள் அடுத்து கரண ஒழுக்கத்திற்கு வரவேண்டும். அதில் முதலாவது மனதை எந்தவித ஆபாசத்திலும்
செலுத்தாமல் புருவ மத்தியில் நிற்கச் செய்தல்.  இது தவம் அல்ல. ஆன்மாவை உள்  உறுப்பாக மாற்றம் செய்யக்கூடிய ஒரு பயிர்ச்சியே ஆகும் இதற்குத் தவம் என்ற பெயர் கொடுத்து ஏமாறவேண்டாம். இது ஒரு பயிற்சியே ஆகும். மரணத்தைத் தவிர்க்கக்கூடிய பயிற்சி. இதை உணர்ந்து செய்வோமா.இந்த ஒழுக்கங்களி வள்ளலார் ஆரம்ப காலத்திலே சொல்லவில்லை.ஆங்கிரச ஆண்டு கார்த்திகைத் திங்களில் தான் சொல்லியுள்ளார். அதாவது அவள் எல்லா அனுபவங்களையும் முழுமையாகப் பெற்ற பின்னர் நாம் பாடல் மூலமாக உணர்ந்து கொள்ளாததால் உரை நடையாக, தான் திருக்காப்பிட்டுக்கொள்ளுவதற்கு முந்தின ஆண்டு சொல்லியுள்ளார்.சமயத்தில் வள்ளலார் இருந்தார் என்று சொல்கிறார்களே அப்போது சொன்னதல்ல  இதை உணர்ந்து  இனிமேலாவது .தினமும் ஆறு வேளைகளிலும் மனதைப் புருவமத்தியில் இருத்தி  ஆன்மாவை உள் உறுப்பாக்கி மரணத்தை வெல்வோமாக. நன்றி வந்தனம்.
Damodaran Raman
ஐயா,மு பா அவர்களுக்கு வணக்கம். அகப்பூ என்பதை அகம் என்று பிரித்துப் "பூ"வை விட்டு விட்டுள்ளீர்கள். உயிர்,சித்துப் பொருள். உடம்பு சடப்பொருள். உயிர் ஒருபோதும் உடம்பினுள் ஒரு உறுப்பு ஆக மாட்டது. வள்ளலார் பொத்திய மலப்பிணி என்னும் பாட்டில் சித்தியல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால் உடம்பு நித்தியமாகும் என்றார். கூற்றம் குதித்தலும் கை கூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவருக்கு என்றார் திரு வள்ளுவர்.தவத்தின் ஆற்றலால்தான் மரணத்தை வெல்ல முடியும். தவம் என்பது சரியை,கிரியை,யோகம் எனும் மூன்று ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் இவை மூன்றும் அடங்கும்.
ஆன்மா எங்கு எப்படி எவ்வாறு உள் உறுப்பு ஆகும்? விளக்கம் தேவை.
நன்றி.
Tuesday, May 31, 2016 at 11:56 am by Damodaran Raman