ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
விருத்தாசலம் வள்ளலார் குடிலில் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன வகுப்புகள் தொடக்கம் (ஆகஸ்டு 14)
விருத்தாசலம் வள்ளலார் குடில் மாணவர்களுக்கு ஆகஸ்டு 14 அன்று வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் வள்ளலார் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டது, குடிலின் நிறுவனத் தலைவர் முனைவர் திரு. தியாக. இளையராஜா அவர்கள் முறையாக வகுப்புகளை தொடங்கி வைத்தார் ஆசிரியர் செல்வன் ஆனந்த பாரதி அவர்கள் குடில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தின் படி வகுப்புகளை நடத்தினார்.

இந்த சிறப்பான அருட்பா கல்வியின் முறை மற்றும் பாட அமைப்பை ஆய்வு செய்த முனைவர் இளையராஜா அவர்கள் வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள் முனைவர் இராம. பாண்டுரங்கன், முனைவர் வை. நமசிவாயம் ஆகியோருக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஆனந்த பாரதியிடம் தெரிவித்துக்கொண்டார்.

இந்த அருட்பா கல்வி வகுப்பில் 20 வள்ளலார் குடில் மாணவர்கள் பங்குகொண்டார்கள்.

இது போல் தமிழகம் மற்றும் அனைத்து மாநில சன்மார்க்க சங்கங்கள் இந்த அருட்பா கல்வி வகுப்பில் மாணவர்களை சேர்த்து பயன்பெற வேண்டும் என்று வள்ளலார் குடில் சார்பாக வேண்டுகின்றோம்.

===============

VETRI (Vallalar Education Training Research Institute) Class at Vriddhachalam:

VETRI (Vallalar Education Training Research Institute) class has started at Vriddhachalam Vallalar Kudil on August 14. Kudil Chairman Dr. T. Elayaraja formally inaugurated, Teacher Ananda Bharathi held classes according to the curriculum for students in their hut.

After examining the education system of the VETRI, Founder has expressed his gratitude and appreciation to Dr. Rama Pandurandan and Dr. V. Namasivaayam (Directors VETRI).

The Arutpa education class offered to students in the 20 students.

Vallalar Kudil requests all Sanmarkka sangams and schools to start the VETRI (Vallalar Education Training Research Institute) classes at your Schools and state, region.

Thanks.

=============
VETRI_1.jpg

VETRI_1.jpg

VETRI_2.jpg

VETRI_2.jpg

Daeiou  Daeiou.
நல்ல முயற்சி இதுவாகும். இதுபோன்றே பட்டி தொட்டி எங்கும், பெருமான் காலத்தில் அருட்பா பாடல்கள் முழங்கியது போல, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் ஜீவர்களுக்கு வகுத்த சுத்த சன்மார்க்க நெறி, இளம் பிராயத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பரவட்டும். இந்த அருமையான முயற்சியிலிருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஏனைய மாவட்டங்களிலும், இதுபோன்று, இளம் சிறார்களுக்கான வகுப்புக்களைத் துவக்க, அந்தந்த மாவட்ட சன்மார்க்க சங்கங்கள், தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
Monday, August 18, 2014 at 04:50 am by Daeiou Daeiou.