ThiruArutprakasa Vallalar Trust - Vallalar Kudil - வள்ளலார் குடில்
திருஅருட்பா - திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பும் பெருமையும் - MP3
(திருஅருட்பா - திருவடிப் புகழ்ச்சியின் சிறப்பும் பெருமையும் - கட்டுரை : கடலூர் - தி.மா. இராமலிங்கம்)

உயிர்களுக்கெல்லாம் உறவானவர்களே, வணக்கம்!

இவ்வுலகில் வாழும் நாம் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, தங்களுடைய காரியங்களை வெற்றிகரமாக முடித்துக்கொள்கிறோம் என்பது உண்மை. புகழ்ச்சிக்கு அடிமையாகாத மனிதர்கள் இல்லை எனலாம். உண்மையில் புகழுபவனுக்கு அப்புகழை ஏற்பவன் அடிமையாகிவிடுவான். அதனால் தான் புகழுபவனின் காரியங்கள் வெற்றியடைகின்றன.

புலவர்கள் மன்னர்களை புகழ்ந்துப் பாடியதும், அமைச்சர்கள் யாவரும் முதலமைச்சரை புகழ்வதும், முதலமைச்சர்கள் பிரதம அமைச்சரை புகழ்வதும் எதற்காக என்றால் காரிய சித்தியடைவதற்காகவே ஆகும்.

திருவள்ளுவரைக்கூட இந்த புகழ் விட்டு வைக்கவில்லை. அவர் இயற்றிய குறளை படியுங்கள்...

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று."

இக்குறளுக்கு இதுவரை யாரும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும் இதுவரை புரியவில்லை,

எழுதின் புரிதலோடு எழுதுக அஃதிலார்
எழுதலின் எழுதாமை நன்று.

இந்தக் குறளை பொறுத்தமட்டில், இதுதான் திருவள்ளுவருக்கு என்னுடைய புகழுரையாகும். இறைவனும் இந்தப் புகழுக்கு அடிமையானவனே என்றால் அது பொய்யன்று. திருவள்ளுவர் இங்கே இதற்காக ஒரு சரியானக் குறளை கொடுத்திருக்கிறார்...

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

உயிர்கட்கு இருவினைத் தொடர்பு உண்டென்றும், அது நீங்குதற்கு அவன் திருவடியைப் புகழ்வதாகிய வினையே வேண்டுவது என்றும் திருவள்ளுவர் உரைக்கின்றார்.

மேலும் இதற்குச் சாட்சியாக பல்லாயிரங்கணக்கான தமிழ் இலக்கிய / ஆன்மீக நூல்களை கூறலாம். அந்த வகையில் நமது வள்ளலார் தம் இறைவனை புகழ்ந்துப் பாடியதே இந்த திருவடிப் புகழ்ச்சியாகும்.

வள்ளலார் இயற்றிய திருவடி புகழ்ச்சியின் சிறப்புகள்:-

# இத் திருவடிப் புகழ்ச்சியில் வள்ளலார் மொத்தம் 114 இடங்களில் 'பதம்' என்கிற இறை பதத்தை உபயோகப் படுத்தியுள்ளார். இறுதியில் முடிக்கும் போது 'அழிவில் நின்று உதவுகின்ற பதமே' என்று முடித்துள்ளது சிறப்பாக அமைகிறது.

# இந்த திருவடிப் புகழ்ச்சி 128 அடிகளைக்கொண்டதாக இருந்தாலும், உண்மையில் இது 4 அடிகளைக்கொண்ட ஒரே பாடலாகும். எப்படியெனில் ஒவ்வொரு அடியும் 32 வரிகளைக் கொண்டது. (32*4=128).

# இப்பாடல் 'கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்னும் இலக்கண வகையைச் சார்ந்தது. 'கழிநெடிலடி' என்பது ஐந்து சீர்களுக்கும் மிக வருவது. 'விருத்தம்' என்பது நான்கு அடிகளாக மட்டுமே அமைவது.

# பரசிவம், தரமிகும், மரபுறு, இரவுறும் என்பன அடிதோறும் முதல் சீர்களாக வந்து எதுகை தொடையாக இருப்பதைக் கவனிக்கவும்.

# வரி ஒன்றுக்கு 6 சீர்கள் என 32 வரிகளில் (ஒரு அடியில்) 192 சீர்களை இது கொண்டுள்ளது.

# அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களில் 50 க்கும் அதிகமான் சீர்களை உடையவை உள்ளன. ஆனால் 192 சீர்களைக் கொண்ட ஒரு தமிழ்ப் பாடல் உண்டு என்றால் அது தமிழ் இலக்கிய உலகில் வள்ளலார் இயற்றிய இந்த 'திருவடிப் புகழ்சி' ஒன்றே ஆகும்.
Thi.jpg

Thi.jpg

Audio:

2 Comments
venkatachalapathi baskar
Please change the name 'Ramalinga Swamigal' to either to 'RAMALINGA ADIGAL' or Chidambaram Ramalingam or 'Thiruarutpirakasa Vallalar' as our peruman does not like naming HIM as 'Swamikal'; this had been revealed in one of HIS letters to Rathina Mudaliyar. We must do what our peruman like. This is just the suggestion.
Tuesday, August 13, 2013 at 06:27 am by venkatachalapathi baskar
Anandha Barathi
Dear All,

The Great Thiruarutpa - Thiruvadi pukazchi MP3 song, pls download it.
Thursday, November 28, 2013 at 10:59 am by Anandha Barathi