www.vallalarspace.com/durai
வடலூர் அருகேயுள்ள ஒரு வள்ளலார் பள்ளியில் தாமச உணவ!
அன்புடையீர், வணக்கம்பல.

எமக்குவந்தஇந்தத் தகவல் ஒரு வதந்தியாகிட வள்ளல்துணை செய்யட்டும். வடலூருக்கும் பண்ருட்டிக்கும் இடையில் (about 10 km) அமைந்துள்ள அப்பள்ளியில், மாணவர்களுக்கு மாமிசஉணவு வழங்கப்படுவதாக ஒரு அதிர்ச்சிசெய்தி வந்துள்ளது.

ஊர் பெயர் கொள்ளுக்காரன்குட்டை என்றனர்.இப்பெயரில் பிழை இருக்கலாம்.

அதன் உண்மையை அறிந்தவர், அதன் தொலைபேசியை இங்கு பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்அறியும்.

எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!

நன்றி! வணக்கம்!

அன்பன் துரை

 

 

5 Comments
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நிகழக் கூடாது இந்த நேயமற்ற செயல்.
பள்ளிப் பிள்ளைகள் நெஞ்சில்
கொள்ளிவைக்கும் கொடுமை இது.
எச்சரிக்கையாய்ச் சொல்லி வைக்கிறோம்.
ஆசிரியர்கள் ஒருபோதும் சிறியர்கள்' ிஆகிவிடக் கூடாது.
Wednesday, June 24, 2015 at 17:43 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Sutharsan Thangamuthu
It is learnt that the above mentioned school is a private school owned by brothers of the local politician Mr Velmurugan(Ex.PMK...).Waiting for valid information.ArutPerumJothi...
Sunday, August 2, 2015 at 04:30 am by Sutharsan Thangamuthu
Durai Sathanan
Thank you very much for the kind information ArutPerumJothi...
Monday, August 3, 2015 at 03:04 am by Durai Sathanan
Bala murugan
Yes it is confirmed as enquired today,they feeds non veg to hostel students. School name vallalar metric school,kollukaran kuttai near panruti landline no 9965103333
Monday, August 3, 2015 at 03:32 am by Bala murugan
Durai Sathanan
Thank you...Thank you Ayyah. May God bless you abundantly forever!

They have two options to escape from the unbearable God's Marakkarunai/Anger. They are, 1. They may change their School's name, if not, 2. They must stop serving NV Food. Let us pray for them to be blessed by His Arakkarunai. Hope they will stop serving NV food, even though the school is their personal property. Since, it is named after Vallalar.

Comparatively, no one has taught the importance of Jeevakaarunyam across this globe as what Vallalar has taught for it. Not only that, He has been living for what He has taught for us. Vallalar's main message to this whole world is that selfless compassionate service to every needy soul regardless of any difference is the highest form of worship/ prayer offered to Almighty God by an enlightened person, and hence know that all other forms of prayer and acts are just mind charming only. The school owners must know this divine truth. They cannot play anymore.

No educational institution across this globe, named after an Indian Saint serve NV Food. Then, what is wrong with this school? Education does not merely mean the accumulation of worldly information alone. It can be the means for manifesting perfection that already exists in us.

By His Grace, I am trying to reach them and request them to stop serving NV Food there forever. All of us can also do the same, if possible by His Grace.

Hope they will permanently stop serving NV food and get the great Blessings from the Almighty God, as we all keep on requesting them in a proper way. May God bless us abundantly! ArutPerum
Jothi...
Monday, August 3, 2015 at 15:16 pm by Durai Sathanan