ஞானத் திண்ணை
கொரோனா நீங்க வேண்டி - அகவல் வழிபாடு
வள்ளலார் அன்பர்களுக்குப் பணிவான வேண்டுகோள்...!

🙏🙏🔥🙏🙏
கொரோனா எனும் கொடிய வைரசால் உலகமே செய்வதறியாது மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 105 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் மடிந்துள்ளன.

உலக மக்கள் பெருத்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அறிவியல் அறிஞர்களும் , மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் செய்வதறியாது விழிபிதுங்குகின்றனர்.

இச் சூழலில் ;

*மண் உலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்*

*கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்*

*எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோது இசைத்தபோது எல்லாம்*

*நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்.!*

என்று பாடிய *வள்ளல் பெருமானார் வழியில் பயணிக்கும் அன்பர்களே...! தங்கள் தாள் பணிந்து ஒரு வேண்டுகோள்...!*

அருள் அனுபவத்தின் உச்சத்தில் எழுதப்பட்ட திருஅருட்பாவின் அருட்பெருஞ்ஜோதி அகவலை மன ஒருமையுடன் வாசித்தால் அனைத்துத் தகவலும் நன்மையாய் கிடைக்கும் என்பது சன்மார்க்கத்தாரின் நம்பிக்கையாய் உள்ளது.

ஆதலால் ...

*இக்கட்டான இன்றைய சூழலில் மனித இனத்தின் துன்பங்கள் எல்லாம் நீங்க வேண்டி....*

நாளது *26 - 03 -2020 வியாழக்கிழமை மாலை ஆறு மணி அளவில்.....* உலகம் முழுவதும் உள்ள வள்ளலார் அன்பர்கள் தங்கள் இல்லங்களில் ஞான தீபத்தை ஏற்றிவைத்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணக் கூட்டு வழிபாடு செய்ய வேண்டுமாய் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயண வழிபாட்டின் நிறைவில் .... புருவ மத்தியில் மன ஒருமையுடன்.... *கொரோனாவின் உயிர்ப்பலியும், அச்சமும் நீக்கி அருள் செய்ய வேண்டுமாய்...!* பிராத்திக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயத்தை இணையத்தின் வழி கூட்டு வழிபாடாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், 26 - 3 - 20 வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை ஆறு மணியளவில் பன்னாட்டுத் தொலைபேசி வாயிலாகவும் இணைந்து .... இவ் அகவல் பாராயண வழிபாட்டில் பங்காற்ற அழைக்கின்றோம்.

பன்னாட்டுத் தொலை பேசி வாயிலாக இணைய விரும்புவோர் தங்கள் ஆன்ராய்டு செல்பேசியில் கூகுல் ப்லே ஸ்டோர் சென்று free conference call app - யைப் பதிவிறக்கம் செய்து... கீழ்க் காணும் லிங்கைப் பயன்படுத்தி இணையலாம்.

Dial-in number (IN): 0172 510 0958
Access code: 183719#
International dial-in numbers: https://fccdl.in/i/vallalargnananerai
Online meeting ID: vallalargnananerai
Join the online meeting: https://join.freeconferencecall.com/vallalargnananerai

இணைய வழி பன்னாட்டுத் தொலைப்பேசி வழியாக நடைபெறும் அருட்பெருஞ்ஜோதி அகவல் வழிபாட்டிற்கான செயல் திட்டம் வருமாறு.

வியாழக் கிழமை - மாலை ஆறு மணி...

★அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம்

★சற்குரு வணக்கம்

★திருவடிப் புகழ்ச்சி

★அருட்பெருஞ்ஜோதி அகவல்

★அட்டகம்

★ஜோதிப் பாடல்

★விண்ணப்பம்.

இணைய வழி இவ் அகவல் வழிபாட்டில் பங்கெடுத்து அகவல் வாசிக்க விரும்பும் அன்பர்கள்... 6379827595 எனும் வாட்ஸாப் எண்ணிற்கு முன்கூட்டியே செய்தி அனுப்புமாறு வேண்டுகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!*