அருள்பாவலர் சக்திவேல் .வே
இணையத்தள - வள்ளலார் அன்பர்களுக்கோர் வேண்டுகோள்..
இணையத்தள - வள்ளலார் அன்பர்களுக்கோர் வேண்டுகோள்...

🙏🙏🙏🙏

தற்காலம் இணையத்தளக் காலம்.

வளர்ந்து வரும் இணையத் தள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பற்பல சன்மார்க்க அன்பர்களும் வள்ளலார்- திருவருட்பா- சன்மார்க்கம்... தொடர்பாக நல்ல பல கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

வள்ளல் பெருமானார் தொடர்பாக வரிவடிவ காணொளி மற்றும் ஒலிப் பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வருகின்றன.

வாட்ஸாப் , முக நூல் மற்றும் யூ டீயுப் ... களில் வள்ளல் பெருமானாரின் சன்மார்க்க கருத்துகள் பரவலாக வலம் வருகின்றன...

இவற்றை முறையாகச் சேமித்து... அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டுமென நினைக்கின்றோம்..

இணையத்தில் உள்ள.. வள்ளல் பெருமானார் பற்றிய பதிவுகள்... பலருக்கும் தெரியாமாலே உள்ளன....

அப்பதிவுகளுக்குத் தக்க இணைப்பு பாலத்தை (லிங்கை) ஏற்படுத்தும் நோக்கில் ....

"ஓர் இணைய தளத்தை" உருவாக்க எண்ணினோம்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையினாலும் ; வள்ளல் பெருமானாரின் பெருந் தயவினாலும்.. ஓர் இணையத்தளப் பக்கத்தை உருவாக்கி உள்ளோம்.

ஆம்...

vallalargananeerai.blogspot.com

இத்தளத்தின் நோக்கம்:
~~~~~~~~~~~~~~~~

வள்ளல் பெருமானார் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குவது இத்தளத்தின் நோக்கமாகும்.

★ திருஅருட்பா ...நூல்

★திருஅருட்பா - உரைநூல்கள்.

★திருஅருட்பா தொடர்பான..தற்கால அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்...

★திருஅருட்பா -ஒலிப்பேழை (mp3 audio)

★ஆங்காங்கு நடைபெறும் சன்மார்க்க சங்கங்களின் நிகழ்ச்சிகள்...பற்றிய செய்திகள்...

★சன்மார்க்க சான்றோர்களின் முக்கியமான சத்விசார பதிவுகள்...

.... என பற்பல...

பதிவுகளின் இணைப்பை உலகம் முழுவதும்.... இணையத்தின் வழியே .. கொண்டசெல்ல vallalargananeerai.blogspot.com முயல்கின்றது.

கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் .. இத்தளத்தை உருவாக்கினோம்...

நாளது அக்டோபர் 5 -க்குள் வள்ளல் பெருமானாரோடு தொடர்புடைய முதன்மையான செய்திகளை.. இத்தளத்தில் பதிவேற்ற திட்டம் தீட்டியுள்ளோம்...

5 /10 / 2023.. அன்று உலகம் முழுவதும்... வள்ளல் பெருமானாரின் 200 -ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற விழா கொண்டாடப்படவுள ளது. அன்றைய நாளளவில் இத்தளத்தில் வள்ளலார் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உள ளடக்கி... வள்ளலார் இணையக் களஞ்சியமாக வார்த்தெடுக்க திட்டமிட்டுள்ளோம்...

இணையத்தைக் காணும் வழி...
~~~~~~~~~~~~~~~~~~~~~

தங்கள் கணினி அல்லது இணைய வசதிகொண்ட ஆன்ராய்டு போனில்... Google / chrome ..யில்

vallalargananerai.blogspot.com

என்று டைப் செய்தால்... இவ் இணையத் தளத்தின் பக்கத்திற்குச் சென்றுவிடலாம்...

தகவல்களைப் பெறும் வழிமுறை :
~~~~~~~~~~~~~~~~~~~~~~

"வள்ளலார் ஞான நெறி" என்று தோன்றும் தலைப்பின் பக்கத்திற்குக் கீழே...

இளம் மஞ்சள் நிறப் பின்புலத்தில் "லேபில்கள்" தோன்றும்..

உதாரணமாக... திருஅருட்பா pdf / அருட்பா AUDIO / வள்ளலார் விளக்க நூல்கள் / சன்மார்க்க நிகழ்ச்சி - செய்திகள்.... என பற்பல லேபில்கள் தோன்றும் ....

அதை கிளிக் செய்து ... அழுத்தினால்... அத்தலைப்பில் வெளியான செய்திகளின் இணைப்பு திரையில் தோன்றும்.... அதை சுடுக்கினால் /அழுத்தினால் முழு விவரத்தைப் பெற முடியும்..

மற்றொரு வழி...

"வள்ளலார் ஞான நெறி" இணையத்தளத்தின் தலைப்புப் பக்கத்தின் வலப்புறத்தில்.... இத்தளத்தில் வெளியான முக்கிய பதிவுகளின் லிங் கொடுக்கப்பட்டிற்கும்.

உதாரணமாக..

●திருஅருட்பா ஆறாம் திருமுறை pdf

●திருஅருட்பா உரைநடை pdf

●அருட்பெருஞ்ஜோதி அகவல் தெளிவுரை..நூல்.pdf

●அருட்பெருஞ்ஜோதி அகவல் Audio ..mp3

●வள்ளலார் பற்றி பல பேராசிரியர்கள் எழுதிய கட்டுரை ..நூல்..pdf

.... என்று பற்பல.....

அதை அழுத்தினால் முழு பதிவையும் தங்களால் பெற இயலும்.

இவ் இணையத்தள பக்கத்தின் இடப்புறத்தில்... சமீப காலமாக யான் எழுதிய வள்ளலார் தொடர்பான கட்டுரைகளின் லிங் கொடுக்கப்பட்டிற்கும். அவ்லிங்கை அழுத்தினால் அக்கட்டுரையின் முழுப் பகுதியையும் வாசிக்கலாம்..

இவ் இணையத்தளப் பக்கத்தின் மையப் பகுதியில்...இத்தளத்தில் புத்தம் பதியதாக வெளியிடப்பட்ட செய்திகள் திரையில் தோன்றும்...

வருங்காலங்களில் மேன்மேலும் வசதிகள் மேன்படத்தப்படும்..

சன்மார்க்க அன்பர்களுக்கோர் வேண்டுகோள்.:
~~~~~~~~~~~~~~~~

வள்ளலார் -திருஅருட்பா -சன்மார்க்கம் தொடர்பான அனைத்து வரிவடிவ .. ஒலி வடிவ.. ஒளி வடிவ ... இணையத்தள இணைப்புக் களஞ்சியமாக இத்தளத்தை உருவாக்க எண்ணியுள்ளோம்...

ஆதலால்... தாங்களிடம்..
வள்ளலார் தொடர்பான பிடிப் மற்றும் ஆடியோ விடியோ லிங் ஏதேனும் இருந்தால் ... அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்..

நீங்கள் அனுப்பும் தகவல் வள்ளலார் -திருஅருட்பா- சன்மார்க்க தொடர்படையதாக மட்டுமே இருக்கட்டும்..

தகவல் / லிங்கை அனுப்ப வேண்டிய E mail..

vallalargananerai@gmail.com

அல்லது..

9865545979

எனும் எண்ணிற்கு வாட்ஸாப் வழியாகவோ அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்..

ஆங்காங்கு ... நடைபெறும் சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள்... பற்றிய செய்திகளை உடனக்குடன் ப்லாஸ் செய்திகளாக... இத்தளத்தில் வெளியிடப்படும்...

எனவே... உங்கள் பகுதி.. சன்மார்க்க விழாக்கள் ... தொடர்பான செய்திகளையும் அனுப்பி வையுங்கள்... இத்தளத்தில்பதிவேற்றுவோம்...

இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளுக்கு... லிங்... தோற்றிவைக்கப்பட்டு... வாட்ஸாப் வழியாக ... முகநூல்வழியாகவும் பகிரப்படும்..... இவ்விணைப்பு (லிங்)களின் வழியே முழு செய்தியையும் அறிந்தகொள்ள முடியும்..

இச்சிறியேனின்... இம்முயற்சிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையும் , வள்ளல் பெருமானாரின் பெருந்தயவும் முழுமையாகக் கிடைக்க பிராத்திக்கின்றேன்...

சன்மார்க்க சங்கத்தார்களே... இச்சிறியேனையும் தங்களுள் ஒருவனாக ஏற்று .. வழிநடத்துங்கள்...
நன்றி..!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளல் மலரடி வாழி..வாழி...

எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்.. சென்று ...எந்தை.. வள்ளல்தன அருள் பகழைப் பரப்ப விரும்பும்... சன்மார்க்க நேயன் அருள்பாவலர் சக்திவேல்.வே

எல்லாம் செயல் கூடும்...

கீழ்க்காணும் இணைப்பு ... லிங்கை அழுத்தினால்.... வள்ளலார் ஞான நெறி இணையத்தளப் பக்கத்திற்குள் நுழையலாம்...
http://vallalargananerai.blogspot.com/?m=1