ramalingam govi
ஒன்பதாம் தந்திரம் ThiruMoolar on Research/Science aid for Detachment

2982. ஏயுஞ் சிவபோக மீதன்றி யோரொளி
ஆயும் அறிவையும் ஆயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனதெய்துஞ்
சாயுந் தனது வியாபகந் தானன்றே.

நன்னெறி நான்மை நற்றவப்பேற்றால் சிவக்களிப்பாகிய சிவபோகம் பொருந்தும். அதுவல்லாமலும் திருவருட் பேரொளியால் ஆயும் அறிவு உண்டாகும். நிலைப்பதும் நிலையாததுமாகிய பொருள்களின் வேறுபாடுகளை அறியும் அறிவே ஆயும் அறிவெனப்பட்டது. இவற்றை உள்ளவாறு ஆராயவொட்டாது தடைசெய்து நிற்கும் அறியாமையால் பொருள்களில் பசை யென்னும் பரிவுண்டாகும். பசை - வாசனா மலம். 

ஏயும் சிவபோகம் - சிவானந்தம் உண்டாம். ஆயும் அறிவு - ஆராய்ச்சி அறிவு. \

Durai Sathanan
Great Truth is revealed here. Thank you Ayyah... Arutperunjothi...
Thursday, January 19, 2017 at 19:58 pm by Durai Sathanan