V Baskar
ஆன்ம உருக்கம்-இதுதான் இந்தியா
ஆன்ம உருக்கம்-இதுதான் இந்தியா

பாகிஸ்தானில் இஸலாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள் ஒரு பளளியில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 141 பேர் இறந்து போன சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி இந்தியாவில் உள்ள எல்லா பள்ளிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் ஒரு பள்ளி மாணவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும்போது ஆன்ம உருக்கத்தால் கண்ணீர் அஞ்சலி செலுத்தியள்ள காட்சியினை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தொடர்ச்சியாக இந்தியா மீது தாக்குதல் நடத்தி ஏராளமான உயிர்களை பலிவாங்கினாலும், நமது நாடு பாகிஸ்தான் மீது எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏராளாமான உயிர்கள் பலிகொண்ட நடவடிக்கையைப் பார்த்து நம் நாட்டினர் ஆன்ம உருக்கத்தால் கண்ணீர் வடிக்கின்றனர். இதுதான் இந்தியா-ஆன்ம உருக்கத்தின் தலைநகரம். நம்முடைய வள்ளல்பெருமானின் கூற்றுக்கு இன்று ஒரு சிறுமியின் கண்ணீர் ஆதாரமாக அமைந்துள்ளது.’

“ஜீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப் பட்ட படியால் ஓர் உரிமையுள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஓர் ஆபத்தால் துக்கப்படுகின்ற போதும்,துக்கப்படுவாரென்று அறிந்த போதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின்,ஒரு ஜீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதும்,துக்கப்படுமென்று அறிந்த போதும் மற்றொரு ஜீவனுக்கு உருக்க முண்டாவது ‘பழைய ஆன்ம உரிமை’ யென்று அறிய வேண்டும்”.-வள்ளலார்.

chennai school.jpg

chennai school.jpg

Anandha Barathi
Baskar ayya,

you extracted, the great passage form Jeevakarunya Ozhukkam..

Thanks.
Friday, December 19, 2014 at 04:33 am by Anandha Barathi