Arul Thiru Sankaraiah
வீணான சந்தேகம் தேவையில்லை" சன்மார்க்க மணி. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாத சன்மார்க்க மணி



வள்ளற்பெருமான் 1874 ஆம் ஆண்டு மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்திரு மாளிகையில் ஒரு அறையில் புகுந்து கொண்டு ஒளியுடம்பு எய்தினார் என்பது பிரசித்தம். சாகாத கல்வி கற்றுத் தேர்ந்த மெய்ஞ்ஞானியர் பலர், இதற்குமுன் இவ்வாறு உடலை மண்ணிற்கோ, நெருப்பிற்கோ இடாமல், மறைந்திருக்கிறார்கள் அசுத்தம் சுத்தமானால் நித்தியமாகும். செம்போடு வந்த களிம்பு எவ்வகைத் தந்திரத்தாலாவது நீக்கப்பட்டால், சுத்தத் தங்கம் ஆவதுபோல, சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால், மும்மலம் நீங்கி, நித்திய ஞான உடம்பைப் பெறலாம். ஆதாரமாக சித்தர் நூல்கள், தாயுமானவர், பட்டினத்தார் திருமூலர், திருவள்ளுவர் ஔவையார் நால்வர் போன்ற மெய்ஞ்ஞானியர் அருளியுள்ள உபதேசங்களே போதுமான சாட்சிகளாகும.

மனிதறும் கடவுளாகலாம் வள்ளற்பெருமான் அருளிய

திருவருட்பாவிலும் சாகாக் வலியுறுத்தப்படுகின் றன திறமும் அவசியமும் சாகாதவனே சன்மார்க்கி என்கிறார், என்னையும் இறைவன் இருப்பதாக்கினன்" என்கிற மணிவாசகர் இறக்கவில்லை வானில் கலந்து விளங்கினார். திருளான சம்பந்தரோ, தானும் தன் அணைவியாருடன், தன் திருமணத்தில் கலந்து கொண்ட அனை வரையும் பேதமில்லாது, சோதியிற் கலப்பித்த பின்னரே, சோதியுள் சலந்தார். திருநாவுக்கரசும் இலிங்க வடிவமாயினர். பட்டினத் தாரும் அப்படியே. சுந்தரரும் அவரது சீடராகிய சேரமான் பெருமானும் வெள்ளையானை மீதேறி, விண்ணுலகம் ஏகினர். ஸ்ரீ ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் திருவரங்கத் தானிடம் இரண்டறக்கலந்து, ஒன்றியதும் ஏற்கப்படுகிறது. புலையராம் நந்தனாரும் தில்லையில் சோதியில் கலந்தார் பெற்றான் சாம்பான் என்னும் புலையர் குலத்தலருக்குப் பேதமற தீக்கை தல்கி, சோதியிற் கலக்க அருள் செய்தார் உமாபதிசிவம் என்னும் மெய்ஞ்ஞானகுரு.

மேற்கூறிய மெய்ஞ்ஞானிகளுடன் வள்ளற் பெருமானை ஒப்பிட சமய மதவாதிகள் பலருக்கும் நாத்திகம் பேசும் பலருக்கும் நெஞ்சம் ஒருப்படுவதில்லை சமய மதவாதிசளுக்குப் பெரு மானாரின் சமய மதங்கடந்த சமரச நன்னிலையை மனம் ஏற்க முடியவில்லை. அசூயையால் அவர் ஞானவடிவம் பெற்றதை மறுக்கின் றனர் நாத்திகர்கள் கடவுள் கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள், வள்ளலார் சமய மதக் கொள்கைகளை ஆரம்பத்தில் மிகவும் பாராட்டி பல தெய்வங்களைப் புகழ்ந்து பாடியவர்; பிற்பகுதியில் ஆறாவது திருமுறை எழுதிய காலத்தில் முன்னர் எழுதினதை முற்றிலும் மறுத்ததால், அவருக்குப் பல விரோதிகள் தோன்றி, வஞ்சகமாகச் சதி செய்து, மடித்து விட்டு ஒளியுடம்பெய்தினார்' என்று கூறியிருப்பார்கள் என்று முடிவு செய்கின்றனர். கருத்து ஒன்றிலே மாய்ந்துவிட்டால், மெய் விளங்காது என்பதற்கு மேற்கூறியவர்களின் முடிவு நாளே சாலப் பொருந்தும்

சமரச சுத்த சன்மார்க்க வள்ளலார், மாட்சியளிக்கும் சன்மார்க்க மரபு இன்னதென்றும் சத்திய சங்கம் அமைத்த அருட்சோதியைப்பெற்று மரணமில்லாப் பெரு வாழ்வு பெறுதலே மனிதப் பிறவியின் முடிவான இலட்சியம் எனத் திட்ட வட்டமாகப் பேசியும் எழுதியும் வந்தார். ஞானயோக சாதனையால் சாவா வரம் பெற்று, சுத்த, பிரணவ, ஞானதேகம் பெற்றார். திருக்குறள், கடவுள் வாழ்த்துப் பத்துக் குறள்களையும், தக்க ஞான ஆசிரியர் மூலம் மெய்ப்பொருள் அறிய நேர்ந்தவர் அந்த விபரீத முடிவுக்கு வரமாட்டார். ஒளவைக் குறள், திருமூலர் திருமந்திரம், தாயுமானவர், பட்டினத்தார் போன்ற சித்தர் பெருமக்கள் அனுபவித்து எழுதிய ஞான நூல்களைப் படித்தவர் களுக்கு, திருவருட்பாவில் வள்ளலார் பலவிடங்களில் மரணமிலாப் பெருவாழ்வு தாம் அடைந்ததை ஆதாரங்களோடு விளக்கியுள்ளதை ஏற்பார்கள், ஞான சித்தர்கள் இறந்தவர்களை எழுப்பும் தனி அருளாற்றல் பெற்றவர்கள் என்பதையும், அவர்களுள் வள்ளற் பெருமானும் ஒருவராவர் என்பதையும் மறுக்கவியலாது. சத்திய ஞானசபை திறப்பு விழாவின்போது, வானவேடிக்கை காட்டிய போது, கூனன் ஒருவன், ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு, கீழே விழுந்து உயிர் நீத்தான் என்பதும், அவனை மீண்டும் உயிர்பெறச் செய்து, அவனது இயல்பான கூனையும் நிமிர்த்திய அருட்செய்கை பெருமான் வரலாற்றில் காணப்படுகின்றது. பஞ்ச பூதங்களாலும், பகைவர்களாலும் வேறு எந்த வகையாலும் தம்முடல் அழிக்கப் படக்கூடாது என்றும், என்றுமே அழியாத முத்தேக சித்தி தமக்கு அருளவேண்டுமென்றும் வள்ளலார் விண்ணப்பிக்க, இறைவன் அவற்றை வேண்டியவாறு விரைந்து அளித்தார் என்பது அகச் சான்றாகும் தம் குறை உணர வாய்ப்பில்லாதவர், பெருமான் அடைந்த பெருநிலையில் ஐயங்ககொள்வது இயல்புதான்

மனிதப்பிறவியின் உயர்ந்த இலட்சியமும் சான்றும்

நூற்றி அறுபது ஆண்டுகள் வள்ளலாருக்குப் பின் ஆகியும் அவரைப்போல ஒரு சன்மார்க்க சாதகர் கூட ஏன் தோன்றி ஒளியுடம்பு பெற்றுக் காட்டவில்லை என்கின்றனர் பலர். மனிதப் பிறவியின் உயர்ந்த முடிவான இலட்சியம் மரணமிலாப்பெரு வாழ்வுதான், ஒளியுடம்பு அடைதல் தான்-சுடவுள் நிலையறிந்து அம்மயமாதல்தான் என்பதை சன்மார்க்கிகள் ஏற்கின்றனர் அப்பெருநிலையை நோக்கிப் பீடு நடைபோடுகின்றனர்!பெருமான் பெற்ற நிலையை அத்துணை சுலபமாக எல்லோராலும் பெற இயலாது என்பதை ஏற்கவேண்டும் சென்று தம் முடலைச் சோதி பிற் கரைத்தார் என்பதை, நம்பமுடியாதவர்க்கு ஏற்கும்வகையில் அண்மையில் ஏதாவது ஒரு சான்று கிடைக்காதா என ஏங்கியிருந்த எனக்கு, வடநாட்டில் 1970ஆம் ஆண்டு பட்டப் பகலில் பல முக்கியமான வர்கள் முன்னிலையில் சீக்கிய சாது ஒருவர்ஞான ஒளியில் கலந்து காட்டிய செய்தி பெருமகிழ்ச்சியூட்டியது. பெருமான் எய்திய பெறற்கரிய பெருநிலையில் எளியேனுக்கு சந்தேகம் எள்ளளவுமில்லையென்றாலும், பலர் சந்தேகங் சொண்டு திரிகின் றார்களே என வே தனைப்பட்டிருந்த நிலையில் மேற்படி நிகழ்ச்சி பற்றிய செய்தி பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன் றில் வெளியாயிற்று. அச்செய்தியின் தமிழாக்கத்தை 1990-ம் ஆண்டு ஏப்பிரல் மாத சன்மார்க்கமணி இதழில், "வீணான சந்தேகம் தேவையில்லை" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன் இந்து (THE HINDU) ஆங்கில நாளிதழில் வெளியான ஆங்கில மூலச்செய்தியை சன்மார்க்க மணியில் வெளியிடக் கோரி, முக்கிய மானவர்கள் பலர் கேட்டுக் கொண்டனர். அவ்வுண்மைச் செய்தி யினை 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாத சன்மார்க்க மணியில் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறேன், நம்பி ஒருவரை ஏற்க வேண்டும்; ஏற்றபின் அவநம்பிக்கை கொள்வது ஆபத்தானது பயனற்றது உறுதியும், வைராக்கியமும், தெளிவும் பூரண நம்பிக் கையால் பெறப்படுவன.

விஞ்ஞானம் உயர்வடைந்து வரும் இக்காலத்தில், அறிவுக்கு ஏற்றதான செய்திகளை ஏற்கவே அறிவு துணியும். அறிவிற்கும் எட்டாத, அறிவினை முழுமையாகக் கட்டிவைத்துவிட்டு பூரண நம்பிக்கையில் அருளை நாடுபவர்க்கே மெய்ந்நிலையுணர்வு கிட்டும். தலைநெறியாகிய சுத்த சன்மார்க்கம் இன்னதென்று விளக்கப் பெறும், அன்பினால் அடைவதை அறிவினால் அடைய முடியாது உணர்வெலாங் கடந்த பெருநிலையை எங்ஙனம் இசைத்தல் கூடும் இது அது என்று விளக்குதற்கு அரிதான இயற்கைத் தனி அனுபவத் தைப்பெற்று, இறைவன்மயமாகும் நித்திய ஆனந்த போகநிலை எளிதில் பெறப்படுவதன்று! அந்நிலை நோக்கி, உண்மை நெறியில் தவறாது ஒழுக வேண்டுவதே மனிதப்பிறவியின் மாண்பான செயல், சந்தேகம் முயற்சியைக் கெடுக்கும்

இந்து நாளிதழில் (The Hindu) 1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் வெளியான ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம் வருமாறு

யோக சாதனையால் தன்னை எரித்துக் கொண்ட சாது லக்னோ-நவம்பர் 27

உத்திரப்பிரதேசத்தில் எட்டா மாவட்டத்தில், கஞ்சுடுட்டு வாரா என்னும் 174

என்னும் ஞானயோகி ஒருவர், 21 நாள்களுக்கு முன்பாக, யோக சாதனையால் தன்னையே எரித்துக்கொண்டதால், அந்நகரம் ஒரு புனித யாத்திரை ஸ்தலமாக ஆயிருக்கிறது.

அந்த யோகி தன்னை அதிசயமாக எரித்துக் கொண்டு, மறைந்த குருத்துவார், (சீக்கிய கோவில்) நூற்றுக்கணக்கான மக்களால் தரிசிக்கப்பட்டு வருகிறது. உள்ளூரிலுள்ள இந்து, சீக்கிய மற்றும் முஸ்லீம்கள் அனைவரும் இச்சாதுவை ஒரு சாதாரண, தன்னைக் காட்டிக் கொள்ளாத, அடக்கமான சாது என்று மட்டும் கருதியிருந் தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் அவரை ஒரு சிறப்புமிக்க சாது என்று மதித்து, அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பத் திட்டமிட்டிருக்கின்றனர்

ஹிஸ்.. ஸ் என்ற சப்தம்

நவம்பர் 6ஆம் நாள் கோகுலாஷ்டமி தினம் கிருஷ்ண பரமாத்மாவின் தொடர்புடைய திருநாள். சுஞ்சுடுட்டுவாராவி லுள்ள ஒரு சீக்கிய வியாபாரியின் மகன் 12 வயதுள்ள குவ்தீப் பள்ளிக்கூடத்திற்குப் போகும் வழியில் யோகி சாதுசிங்கின் பாதங்களைத் தொட்டு வணங்கக் குருத்துவாரரவுக்குச் சென்றான் குருத்துவாராவுக்குள் அடியெடுத்து வைத்ததும், "ஹிஸ்...ஸ்' என்ற அழுத்தமான சப்தத்தைக் சுமார் மணியிருக்கும் கேட்டான். அப்பொழுது அவனுடைய 15 வயதான காலை மூத்த சகோதரன் ஜக்ஜித் அந்த சாதுவுக்கு அரைமணி நேரத்திற்கு முன்னால் தான் பால் கொடுக்க குருத்துவாருக்குச் சென்றிருந்தான் உள்ளூர் சீக்கியர் சிலர், அக்குருத்துவாருக்குப் பிரார்த்தனைக்கு வந்திருந்தவர்களும் காலை 8 மணிக்குப் போய்விட்டார்கள் பீதியடைந்த குல்தீப், அந்த சாதுவானவர் யோகாசனத்தில் அசையாமல் அமர்ந்திருக்கும் அவரது அடிவயிற்றிலிருந்து நெருப்புச் சுவாலை தாவிக்கிளம்பி சாதுவின் நெஞ்சை எரித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். குல்தீப் வெளியில் ஓடி "பாபா ஞானி' எரிந்து கொண்டிருக்கிறார் என்று கூச்சலிட்டான்

நிமிஷ நேரத்திற்குள் நந்தலால் என்னும் கூலிவேலைக்காரர் ஒருவர், ராஜாசிங், மற்றும் அவதார்சிங் என்னும் இரண்டு சீக்கிய வியாபாரிகள், மற்றும் உதேராம் என்ற மற்றொரு இந்து வியாபாரியும், குருத்துவாருக்கு வந்து, சாதுவின் உடலிலிருந்து நெருப்புச் சுவாலை வெளிவருவதைக் கண்டனர். இராஜாசிங் தீயை அணைக்க ஒரு வாளி நிறையத் தண்ணீர் கொண்டுவந்தார். 

சாதுவின் உடல் விறகில்லாமல் தானாகவே எரிய நால், அது சாதாரணமான ஒன்றல்ல, என்று சொல்லி, உதேராம் அவரைத் தடுத்து நிறுத்தினார்

ஆறுமணியளவில் தீச்சுவாலை

அந்த குருத்துவாருக்குச் சென்றிருந்த நான், இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பல துறைகளிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்களைச் சந்தித்து, விசாரித்தேன். அவர்களுள் காவல்துறை பினர், விஞ்ஞானப் பேராசிரியர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களும் வேறு பலரும் அடங்குவர். அவர்களுள் பலர் முகமதியர்கள், சிலர் அதி தீவிரமான ஆரிய சமாஜத்தினர் ஒருவர் மார்க்கிஸ்ட் கொள்கையிலுள்ளவர் குறித்த அந்த இடத்திற்கு மாலையில் வருகைதந்திருந்த மாவட்டக் குற்றவியல் நீதிபதி திரு. பல்வந்த் சிங்கையும் சந்தித்தேன்,

ஆறுமணிநேரம் எரிந்துகொண்டிருந்த சமயம் அநேக உள்ளூர் வாசிகள் அந்த இடத்திற்கு ஐந்தாறு தடவைகள் வந்து பார்த்தனர். சாதுவின் உடல் விறகில்லாமலேயே எரிந்தது என்றும், சாதாரண மாக மனித உடல் எரியும்போது வெளியாகும் துர்நாற்றம் கிடையாதென்றும், ஒரு வேள்வி (யாகம் )த் தீயின் போது வெளி யாகும் ஒரு மதுரமான நறுமணம் வீசிற்று என்றும் அனைவரும் சொன்னார்கள். மெழுகுவத்தி எரிவதுபோல, சுவாலை பிரகாசமாக இருந்ததாகவும், அதற்கு இரண்டடித் தொலைவிலிருந்தபோதிலும் வெப்பத்தை உணர முடியவில்லை என்றும் கூறினர்.

செய்தியை அறிந்ததும் குறித்த இடத்திற்கு விரைந்தோடிய சாலிக்ராம் என்னும் தலைமைக் காவலரைப் (Police Head Constable) பார்த்து, 'ஏன் அவர் நெருப்பை அணைக்க முயல வில்லை?' எனக் கேட்டேன். சாது ஏற்கெனவே இறந்துவிட்ட தாகக் காணப்பட்டாரென்றும், அது ஒரு சாதாரணமான நெருப்பு இல்லை என்பதாகவும் சொன்னார்.

'அச்சாதுவின் உடல் அருகே நெருப்பு எளிதில் பற்றக் கூடிய எவ்விதமான பொருளும் இருந்ததாகக் காணப்படவில்லை' என்று காலை பத்து மணிக்கு அவ்விடத்தைப் பார்வையிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. D. P. சர்மா கூறினார்

காவல் துறையினர், மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு இந்த அதிசயமான நிகழ்ச்சியைப் பற்றித் தகவல் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர், இது எந்தவிதமான மோசடியோ, தற்கொலையோ அல்லது எதிர்பாராத அசம்பாவி தமோ இல்லை என்பதாக முடிவு செய் தனர், என்றாலும், அந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? என் விளக்கம் கூறமுடியவில்லை . ஆனால் இது ஒரு மர்மமானது' என்று முடிவு செய்துவிட்டனர். அந்தச் சாது தன்னுடைய உடலை யோக சாதனையால் எரித்துக் கொண்டார் என்று மாவட்டக் குற்றவியல் நீதிபதி திருப்தியளிக்கும் வகையில் மனப் பூர்வமாக நம்பியிருக்கிறார்

இரண வைத்தியரின் அறிக்கை

தனது நீண்டகாலப் பணியில் நூற்றுக்கணக்கான பிரேதங் களைப் பரிசோதனை செய்துள்ள, பதவி ஓய்வு பெற்ற, சிவில் இரணவைத்தியர் டாக்டர் வர்மா, சாது எரியும் காட்சியை வெகு அருகிலிருந்து நேரில் பார்த்திருக்கிறார், டாக்டர் வர்மா எழுத்து மூலம் ஒரு அறிக்கையில்

"அந்தத் தீ அந்தச் சாதுவின் அடிவயிற்றிலிருந்து எழுந்தது நான் உணர்ந்து பார்த்தேன். அத்தீ சூடாக (வெப்பமாக) இல்லை ஆனால் அழுத்தமாகவும், ஆழமாகவும் அமைந்திருந்ததால், சாது வின் கெட்டியான பருத்த எலும்புகளும் அழிந்து, மிகக்குறைவான சாம்பலாகியது அவரது உடலைச் சுற்றி வேதனையால் ஏற்படும் அசைவு எதுவுமில்லை. பொதுவாக மனித உடல்கள் எரியும் போது காணப்படும் பச்சை அல்லது நீல நிறமோ காணப்படவில்லை

சாதாரணமாகத் தீப்பற்றி எரியும் நிகழ்ச்சிகளில் உடல் வெளுப்பாகவும் ஈரமாகவும் இருக்கும். மாறாக இச்சாதுவின் உடல் கருப்பாகவும் மிகவும் வரட்சியாகவுமிருந்தது. மேல் தோலும் உள் தோலும் சீராக இல்லை. உள்ளுறுப்புகள் வெந்து, சாம்பலாயின இளகும் தன்மையிலான கொழுப்பு, அமிலப் பொருள்கள் காணப் படவில்லை

காவல் துறையினரின் அறிக்கையில் மற்றும் இரண்டு அம்சங்கள் இருந்தன. அவை மக்களின் தகவல்களும், மற்றும் புகைப்பட சாட்சியங்களுமாகும். சாது அமர்ந்திருந்த கோரைப்பாய் முழுமை யாகக் கெடாமலிருந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்புதான் எரிந்தது. இரண்டாவதாக, சாது அணிந்திருந்த உடைகள் உடல்

எரியும்போதே சேர்ந்து எரிந்தது.

 

சாது இயற்கை எய்திய அந்தக் குருத்துவாரா 1960 ஆம் ஆண்டு உள்ளூர் சீக்கிய மக்களால் அமைக்கப்பட்டது. சாதுவின் பூர்வீக கான ஊர் பஞ்சாபிலுள்ள மோகாவிலிருந்தது. கடந்த 33 ஆண்டு களாக இப்பகுதியில் அந்தச் சாது காணப்பட்டார், 1914 ஆம் வருடத்திலிருந்து அவர் துறவு மேற்கொண்டிருந்தார். அவரது வயதை நிச்சயிக்க எவ்வித ஆதாரங்களுமில்லை, அவருக்கு 114 வயது என்று உள்ளூரிலுள்ள சீக்கியத் தலைவர்கள் சிலர் உறுதி யளிக்கின்றனர். 85 வயதாயிருக்கலாம் என்பது காவல் துறையின சின் கணிப்பு இந்தக் குருத்துவாரா கட்டி முடித்ததும் அதற்கு பூசகராகவும், போஷகராகவும் குருத்துவாரில் தங்கியிருக்கும்படி வேண்டிக்கொள்ள அவரும் இணங்கினார். சர்க்கரையிலான பொம்மைகளைத் தெருக்களில் அவர் விற்றதைப் பொது மக்கள் நினைவில் வைத்துள்ளனர். அவர் தானாகவே அவற்றைத் தயா ரித்து, சிறுவர்களிடையே வந்த விலைக்கு விற்று வந்தார்.




மற்றறிவோ மெனச்சிறிது தாழ்ந்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே யந்தோ

சற்றுமதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்களல்லா லதனை சுற்றி நின்று தடுக்க வல்லார் ரெவ்வுலகி லெவரும் இல்லை கண்டீர், சத்திய மீது என்மொழி"...

"இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடு சேர்ந்திடுமின் என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே."

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால் நிந்தியமாகி 3ய நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்துளீர்களே"

திருவருட்பா

காலங்கடந்த கடவுளைக் காண்பதற்கு காலங்கருத வேண்டா தடையொன்று மில்லாத தலைவரைக் காண்பதற்கு எவ்விதத்