Arul Thiru Sankaraiah
:தினம் ஒரு உயிர் உறவு வார்த்தைகள். திரு. உயிர் உறவு ஐயா அவர்களின் நூலில் இருந்து.
:தினம் ஒரு உயிர் உறவு வார்த்தைகள். திரு. உயிர் உறவு ஐயா அவர்களின் நூலில் இருந்து..

  அம்மையப்பனான இறைவன்

 

அம்மையப்பனான இறைவன், எண்ணிறந்த பிறவிகள் தோறும் செய்வித் தருளுகின்றான் என்பதை அறிவோம் அத்தனையும் அருள் சக்திக்குத் தெரியாமலா போகும்? அத்தனை குறைகளையும் உடனிருந்து சீவ சாட்சியாகக் கவனித்துவரும் சக்தி அக்குறைகளுக்காக வெறுத்து ஒதுக்கித்தள்ளிவிடுவதில்லை, அன்புடன் ''நீ என் பிள்ளை. இதோ பார். எத்தனை பிறவிகளில் இதே தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்வாய் உனக்கே சரியாகப்படுகிறதா? என்னைப் பார், என் முகத்தைப்பார்'' என்று கருணைத்திறங் காட்டும் மெய்யன்பு இந்த ஒரு பிறவியில் வாய்க்கும் தாய்க்கு உள்ளது போல எத்தனை மடங்கு உயர்ந்தது இதற்குக் காரணம், தனக்குவமையில்லாதவன் சீவர்கள் மேல் கொண்டுள்ள நிலைத்த, மாறாத உயிர்
உறவுதான்

தனக்கும் இறைவனுக்குமுள்ள இசைந்த பொருத்தத்தை எப்படிப் போற்றி வியந்து பாராட்டி மகிழ்கிறார் பாருங்கள்

தனியன் மேல் நீ வைத்த தயவு தாய்க்குமில்லையே தகுமைத் தொழிலும் வேண்டுந்தோறும் தருதல் வல்லையே வினவு மெனக்கென் னுயிரைப் பார்க்க மிகவும் நல்லையே மிகவும் நான் செய் குற்றங்குறித்து விடுவாயல்லையே

சர்வ ஜீவ தயாபரனைத் தன் தாயிடம் காண்பவனுக்கு களைப்பும் இளைப்பும் வாராது. தரங்கெட்டு, வழிதவறி, நடந்து விட்டோமே எனத் தன் குறையுணர்ந்து தாயிடம் அணுகத் தயங்கி, ஒதுங்கி நிற்கும் பிள்ளையை வலிய வந்து ஈர்த்து அன்னை அணைத்துக்கொள்ள மாட்டாளா அகத்தும் புறத்துமிருந்து கண்ணெனக் காக்கும் கருத்தனை-ஆதிமுதல்வனை-அம்மை யப்பனை, உயிருக்கு உறவாயிருந்து உதவும் உத்தமனை, வள்ளற் பெருமான் எத்தனை நன்றியுணர்வுடன் பாடிப் பணிகின்றார் பாருங்கள்,

களைப்பறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்து எனக்கு இளைப்பறிந்து உதவிய என் உயிர் உறவே தன்னைத்தழுவுறு தரம் சிறிது அறியா என்னைத் தழுவிய என் உயிர் உறவே மனக்குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது என் உறவு ஆகிய என் உயிர் உறவே

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்னும் ஆன்றோர் வாக்கை அமுதமென ஏற்போம். பெற்றோரைப் போற்றிப் பெரும் பயன் அடைவோம், தம் பொறுப்புணர்வோடு வாழ்வோம்