Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 114. பன்னிரண்டாம் அதிகாரம்..மெய் இந்திரிய ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
பேரூண் மடிமை பெருந்துயி லிம்மூன்றும்
சேரூன் உடல்நரகத் தீ.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

பேரூண்  = அதிக உணவு கொள்ளுதல்.
மடிமை = சோம்பிக் கிடத்தல்.
பெருந்துயில் = அதிகமான தூக்கம்.

      இவை மூன்றும் சேர்ந்த புலையுடம்பு இம் மனிதப் பிறப்பைக் கீழான நரகத்தீயிடை உய்க்கும்.

      இவ்வூனுடல் பற்றே பந்தம், நரகம், பிணி எல்லாம். பற்று அறுதலே விடுதலை, வீடு, மோட்சம், பேரின்ப நிலையுமாம்.

     அகம் உணர்ந்து கூடி, உண்டியும், உறக்கமும் சுருங்கி, மடிமை இல்லாது தயவுப் பணி புரிந்து கொண்டிருத்தல் திருவடியைப் பெறும் உபாயமாகும்.



IMG_20150802_095338.jpg

IMG_20150802_095338.jpg