Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண். 209. அதிகாரம் 21. மருட்கை. சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண்.209.
21ஆம் அதிகாரம்.
மருட்கை.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

அருட்கண் மலர்ந்து அனகநிறை போது
மருட்கை மதனொழிவான் மற்று.         (தயவுக் குறள் எண்.209)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     அகத்தே அருள் ஒளி கண்டு, அதனையே அந்நிலையினின்றே விரித்து (அனகமுறச் செய்து) உயிர் உடம்பில் நிறைத்து, அருள் வண்ணமாய் விளங்கும்போதுதான் மருட்கையறும்.  மன்மதன் அழிவான். அதாவது, தூல காம தேகத்துவம் (அருள் ஒளிக்கு இடம் கொடுத்து விட்டு) ஒழியும்.

     ஆன்மா, அருளொளித் தேகம் பெறாத வரை, கருமதேகம், வினை உடம்பு சூழும். இதற்காகத் திருவருளே உயிர்களிடத்து சீவ சுபாவமாய், அவாவாய், காம இச்சையாய்த் தோன்றி மேலும் மேலும் பிறவி எடுக்கச் செய்கின்றதாம்.
20140224_122354~2~2.jpg

20140224_122354~2~2.jpg