Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண். 207. அதிகாரம் 21. மருட்கை. சுவாமி சரவணானந்தா.
தயவுக் குறள் எண். 207.
அதிகாரம் 21.
மருட்கை.
சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

பாழடிக்கும் விஞ்ஞானப் பாடெல்லாம் பாழாக
ஊழடிக்கும் மெய்ஞ்ஞானத் தொன்று.       (தயவுக் குறள் எண்.207)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     இப்பொழுதுள்ள விஞ்ஞானம், அக அருள் நெறிக்குப் புறம்பாய் உள்ளது. ஆதலின், அதனால் உண்டாகின்ற புலனனுபவப் பயன் தீமையே மிகுத்து உள்ளதாம். மனத்தின் கண் அவா, வெகுளி, மயக்கம் நிரம்ப உள்ள இவ்விஞ்ஞானிகளால் உலகம் பெரிதும் பாழாகின்றது.

     அகத்தினின்று அருள் நிறை சன்மார்க்கம் தோன்றி, வெளிப்பட்டு, ஊழையே மாற்றவல்ல உயர் ஞான உணர்வு உண்டாகி, வெறும்பாட்டு உழலும் விஞ்ஞானியையும் மாற்றி வாழச் செய்வது நம் சுத்த தயா நெறி.
20140806_082447.jpg

20140806_082447.jpg