DAEIOU - தயவு
17.10.2020 வடலூரில் வள்ளற் பெருமான் தோற்றுவித்த சமரச சுத்த சத்திய சங்கத்தினைப் பதிவு செய்த ஆவணங்கள் யாரிடமும் உள்ளனவா ?
வள்ளற் பெருமான் அவர்கள், வடலூரில், கடந்த 1865ஆம் ஆண்டில், சமரச சுத்த சத்திய சங்கத்தினைத் தோற்றுவித்தார். 1892ஆம் ஆண்டில் அரசாங்கம், இதுபோன்று உள்ள எல்லா சங்கங்களையும் பதிவு செய்ய வேண்டுமென ஒரு சட்டம் கொண்டுவந்ததாக பல்வேறு மூத்த சன்மார்க்க சங்க அங்கத்தினர்களை கலந்துரையாடியதிலிருந்து தெரிய வருகின்றது.  வள்ளற் பெருமான், 1874ஆம் ஆண்டில் முத்தேக சித்தி பெற்றுக் கொண்டார். ஐந்தொழிற் காரியப்பாடுகள் செய்யும் நிலை அடையப் பெற்றுக் கொண்டு, எல்லா ஆன்மாக்களிலும் புகுந்து கொண்டார். அவரே சன்மார்க்கம் நடத்துகின்றார்.

       வடலூரில் இயங்கும் வள்ளலார் ஏற்படுத்திய சமரச சுத்த சத்திய சங்கத்தினைப் பிற்காலத்தில் யாரேனும் பதிவு செய்திருந்தால், அது பற்றிய குறிப்புகள் யாரிடமும் இருப்பின் அதனைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

       ஏனெனில், வள்ளலார் தெய்வ நிலையத்தில், 10 ஆண்டுகளுக்குரிய அங்கத்தினராவதற்கு, ஒவ்வொரு சன்மார்க்க அங்கத்தினரும் ரூ.500/- கட்டும் ரசீதுகளில், மேற்படி சத்திய சங்கம், பதிவு செய்யப்பட்ட எண் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்தத் தேடுதல். 

       அல்லது, முந்தைய காலத்தில், பழைய புத்தகங்களில், சங்கம் பதிவு செய்ததற்குரிய குறிப்பு ஏதேனும் இருப்பின், எந்தப் புத்தகத்தில், இது பற்றிய குறிப்பு உள்ளது என்ற விபரத்தை அன்பர்கள் தெரிவிக்கக் கோரப்படுகின்றது.

IMG_20201017_232533_041.jpg

IMG_20201017_232533_041.jpg

vlcsnap-2019-01-23-22h11m57s534.png

vlcsnap-2019-01-23-22h11m57s534.png