DAEIOU - தயவு
சன்மார்க்க சங்கத்தினரை (இப்படியும்) ஏமாற்றும் பேர்வழிகள்...உஷாராக இருக்க வேண்டியது மிக அவசியம்.
    ஷ்ரிடியில் நிர்வாகத்தில் வழக்கறிஞர் என்று ஒரு ஆணும் (வயது 59), போஸ்ட் ஆபீஸில், தாம் சூப்ரண்டாக வேலை பார்த்தவர் என்று சொல்லிக் கொண்டு ஒரு வயோதிகப் பெண்மணியும் (வயது 88), ஒரு சன்மார்க்க சங்கத்தில் அனுமதி பெற்று 5 நாட்கள் தங்கியிருந்தனர். அந்த வயோதிகப் பெண்மணி, திரு அருட்பாவிலிருது பல பாடல்களை மனனமாகப் பாடுவதைக் கேட்டதும், அந்த சங்கத்தில் இருந்த அன்பர்கள், ஓ....இவர்கள், வள்ளலாரின் உண்மையான பக்தர்கள் என நம்பி விட்டனர்.

    தாம் சமையல் வேலையிலும் திறமைசாலிகள் என்பதாக, அங்கும் தமது திறமையைக் காண்பித்தனர். அந்த சன்மார்க்க சங்கத்தின் நிறுவனர், இவர்களை முழுதுமாக நம்பி விட்டார். பின்னர், அசந்த நேரம் பார்த்து, அந்த சங்கத்தில் இருந்த ஏ.டி.எம். கார்டு, ரொக்கப் பணம், மற்றும் துணிமணிகள் ஆகியவற்றுடன் அவ்விருவரும் கம்பி நீட்டி விட்டனர். தமக்கு பென்ஷன் வாங்குவதற்கு பேங்கிற்குச் செல்ல வேண்டும் என்ற காரணம் சொல்லித் தப்பியுள்ளனர். அவர்கள் சென்ற பின்னர் பார்த்தபோது, சங்கத்தில் இருந்த நிறுவனரின் ஏ.டி.எம். கார்டு, ரொக்கப் பணம், சில துணிமணிகள் ஆகியவற்றையும் திருடிக் கொண்டு அவர்கள் சென்றது தெரியவந்தது. எனவே, சன்மார்க்க அன்பர்கள், இது குறித்து, தமது சங்கங்களில் தெரிவித்து, உஷார் படுத்துமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றது.
20140114_081130-1.jpg

20140114_081130-1.jpg