DAEIOU - தயவு
9.9.2013 Sanmarga Marriage of Thiriu Sathiyaraj, Thinaikulam, Ramanathapuram District. சன்மார்க்க முறையில் திருமணம்.
The marriage of Thiru Sathiyaraj, native of Thinaikulam, Ramanathapuram District was performed after following the Sanmarga rituals on 9.9.2013 at about 9.30 a.m.

On the request of Thiru Sathiyaraj, Thiru Balashanmugam Senior Sanmargi of Vadalur came to Thinaikulam for conducting this Sanmarga marriage. 

Thinaikulam is a coastal side village near Keelakarai and Thiruppullani. All these area people are doing either fishing or doing palm leaf products.

There is no major industry in these area. All are accustomed to eat fish, mutton because, the sea coast is only at a distance of about 3 kms.

From among the family members, Thiru Sathiyaraj is the only person who came to know about the suddha sanmarga principles of St. Vallalar. 

His marriage took place in the community hall near Kanthariamman Temple in Thinaikulam village. All his relatives and the nearby coastal side people attended the marriage. 

With the grace of Almight and Arutperunjothi the marriage was conducted in a grand manner.

      இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம் திணைக்குளம் ஆகும். இங்கு பிறந்து, தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர் திரு சத்தியராஜ், கடந்த சில வருடங்களாக, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிக்கு ஆட்பட்டு, தமது திருமணமும், சன்மார்க்க முறையில்தான் நடைபெற வேண்டும் என விரும்பினார். அவரது பெற்றோரையும் சம்மதிக்க வைத்தார்.

      வடலூரில், திரு பால சண்முகம் என்ற மூத்த சன்மார்க்க அன்பர், சன்மார்க்க முறையில் திருமணம் செய்விப்பவர் எனத் தெரிந்துகொண்டு, அவரை அழைத்து, 9.9.2013 (திங்கட்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையில், திணைக்குளத்தில் (அன்று விநாயகர் சதுர்த்தி விழா) தனது உறவினர்கள், பந்து மித்திரர்கள், ஊர்ப்பெரியவர்கள் அனைவரின் முன்பாக, திணைக்குளத்தில் உள்ள காந்தாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சமுதாயக் கூடத்தில், தமது திருமணத்தை சன்மார்க்க முறையில் அவர் செய்து கொண்டார். மதுரையிலிருந்து வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு இராமானுஜம் மற்றும் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த மூத்த சன்மார்க்க அன்பர் திரு சந்திர மோஹன் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். 

       இந்த கிராமத்துக்கு 4 கி.மீ தூரத்தில் உள்ள வண்ணாங்குண்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கர்ணம் (லேட்) திரு ஏ.எம். ராமமூர்த்தி அவர்களின் மகன் திரு சிவஷண்முகம் என்பவர் தமிழாசிரியராக, இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேனிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவருடைய தந்தையார் ராமமூர்த்தி, தனது காலத்திலேயே 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே, வள்ளல் பெருமானுக்காக, 20 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்து விட்டார். அந்த இடத்துக்கு அமுரா பாக்கம் எனப் பெயரிட்டுள்ளனர். இங்கு தினந்தோறும், ஏழை எளியோருக்கு கஞ்சி வார்க்கும் ஜீவகாருண்யப் பணி நடைபெற்று வருகின்றது. வள்ளல் பெருமானின் சிலை ஒன்று உள்ளது. சத்திய ஞான சபை கட்டுமானப் பணிகள், ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அவர், இந்தத் திருமணத்துக்கு வருகை தந்து, மீன், இறைச்சி உண்ணும் ஒரு கடற்கரை ஓரக் கிராமத்தில், இப்படி ஒரு சன்மார்க்க இயக்கத்துக்கு வந்த தீவிர நாட்டமுள்ள திரு சத்ய்ராஜின் எண்ணத்தையும் செயல்பாட்டையும் வியந்தார். ஆசி கூறிச் சென்றார். 

       இராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டி திரு ராஜவீர் அவரது மனைவியார் திருமதி ஹரிலக்‌ஷ்மி ஆகியோரும், இந்த சன்மார்க்க முறைத் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை ஆசீர்வதித்தனர். வள்ளல் பெருமானின் கொள்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரு சத்தியராஜால் வழங்கப்பட்டது.
SAM_5583.JPG

SAM_5583.JPG

SAM_5540.JPG

SAM_5540.JPG

SAM_5530.JPG

SAM_5530.JPG

SAM_5562.JPG

SAM_5562.JPG

SAM_5579.JPG

SAM_5579.JPG

SAM_5581.JPG

SAM_5581.JPG

SAM_5527.JPG

SAM_5527.JPG

SAM_5529.JPG

SAM_5529.JPG

SAM_5530.JPG

SAM_5530.JPG

SAM_5536.JPG

SAM_5536.JPG

SAM_5537.JPG

SAM_5537.JPG

SAM_5538.JPG

SAM_5538.JPG

SAM_5541.JPG

SAM_5541.JPG

SAM_5542.JPG

SAM_5542.JPG

SAM_5543.JPG

SAM_5543.JPG

SAM_5544.JPG

SAM_5544.JPG

SAM_5546.JPG

SAM_5546.JPG

SAM_5553.JPG

SAM_5553.JPG

SAM_5554.JPG

SAM_5554.JPG

SAM_5555.JPG

SAM_5555.JPG

SAM_5556.JPG

SAM_5556.JPG

SAM_5557.JPG

SAM_5557.JPG

SAM_5559.JPG

SAM_5559.JPG

SAM_5560.JPG

SAM_5560.JPG

SAM_5561.JPG

SAM_5561.JPG

SAM_5563.JPG

SAM_5563.JPG

SAM_5564.JPG

SAM_5564.JPG

SAM_5565.JPG

SAM_5565.JPG

SAM_5566.JPG

SAM_5566.JPG

SAM_5567.JPG

SAM_5567.JPG

SAM_5571.JPG

SAM_5571.JPG

SAM_5572.JPG

SAM_5572.JPG

SAM_5573.JPG

SAM_5573.JPG

SAM_5574.JPG

SAM_5574.JPG

SAM_5575.JPG

SAM_5575.JPG

SAM_5576.JPG

SAM_5576.JPG

SAM_5577.JPG

SAM_5577.JPG

SAM_5578.JPG

SAM_5578.JPG

SAM_5579.JPG

SAM_5579.JPG

SAM_5580.JPG

SAM_5580.JPG

SAM_5581.JPG

SAM_5581.JPG

SAM_5582.JPG

SAM_5582.JPG

SAM_5583.JPG

SAM_5583.JPG

SAM_5592.JPG

SAM_5592.JPG

SAM_5593.JPG

SAM_5593.JPG

SAM_5621.JPG

SAM_5621.JPG

SAM_5622.JPG

SAM_5622.JPG

SAM_5623.JPG

SAM_5623.JPG

SAM_5624.JPG

SAM_5624.JPG

SAM_5625.JPG

SAM_5625.JPG

SAM_5626.JPG

SAM_5626.JPG

SAM_5627.JPG

SAM_5627.JPG

4 Comments
PRABU RAMALINGAM
வாழ்த்துகள் ... ஐயா எனது திருமணமும் சன்மார்க்க முறையில் நடைபெற விரும்புகிறேன்.திரு பால சண்முகம் அவர்களின் தொடர்பு எண் முகவரி வெண்டுகிறேன்.
Tuesday, April 26, 2016 at 08:49 am by PRABU RAMALINGAM
Daeiou  Daeiou.
திரு பாலஷண்முகம் ஐயா அவர்களின் தொடர்பு எண்...கிடைக்கப்பெற வில்லை. வேறு யாரேனும், சன்மார்க்க முறையில் திருமணம் நடத்துகின்றார்களா என...அன்பர் ஒருவரைக் கேட்கப்பட்டுள்ளது. பதில் வரப்பெற்றதும், இந்த இணைய தளத்தில், அவ்விபரம் தெரிவிக்கப்படும்.
Tuesday, April 26, 2016 at 12:32 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
Kindly contact Senior Sanmargi and Thiru Arutpa singer, Thiru Sakthivel of Valangaiman...He is also doing such sanmarga marriages.
Contact No. 82202 23560.
Tuesday, April 26, 2016 at 13:09 pm by Daeiou Daeiou.
MOHAN T
Dear All,THIRU K.SANKARAIAH (SENIOR SANMARGI,91 years old). he is doing sanmarga marriage for the past 60 years. he done more than 1500 marriages in all over tamilnadu. for your information, he is going to conduct my brother marriage on 8/6/2016 in thanjavur. because of the age, please contact earlier and have his appointment for the sanmarka marriages. his contact no: 9789050157,044-22730865.regars,t.mohan-9003077772
Saturday, April 30, 2016 at 02:08 am by MOHAN T