Anandha Barathi
"திருஅருட்பிரகாச வள்ளலார்" சன்னிதி முறையீடு (1912 - நூல் முழுவதும்) - உபயகலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார்
வணக்கம்,


திருஅருட்பிராகச வள்ளல் பெருமானின் மாணக்கரான உபயகலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், நமது பெருமானார் மீது பாடிய ஒப்பற்ற செந்தமிழ் பாடல்களின் தொகுப்பு "திருஅருட்பிரகாச வள்ளலார்" சன்னிதி முறையீடு என்னும் நூல் ஆகும்.

இத்தொகுப்பு தமிழ்தாத்த உ.வே.சாமிநாதர் உத்வேகிக்க, தொழுவூர் வேலாயுதனாரின் மகன்கள் திருநாகேஸ்வரனார், செங்கல்வராயர் ஆகியோரால் தொகுத்து வெளியிடப்பட்டது, இந்த பழம்பதிப்பின் படக்கோப்பு (நூல் முழுவதும்) இணைத்துள்ளோம்,

அன்பர்கள் பயின்றும், பாதுகாத்தும், பகிர்ந்தும் பயன்பெறுவார்களாக.

நன்றி: நூலினைத் தந்து உதவிய சன்மார்க்க சீலர் இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்களுக்கும், நூலினை சிறந்த முறையில் வருடிய திரு. பொள்ளாச்சி நசன் அவர்களுக்கும் நன்றிகள் பல.


சிவமயம்
கணபதிதுணை.

பதிப்புரை.

ஒப்புமுயர்வுமற்ற பேரின்ப வீட்டை, அடையும் பொருட்டு தாதமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்க மென்னும் நான்கு வகையில்பெருங்கருணைத்தடங்கடலாகிய பரசிவப் பிரபுவை வழிபட்டுய்ந்தார் பலபெரியோர். அவ்வழிபாடு தரத்திற்கேற்றதாம். சிலர் “அன்பிற்பெரிகிய தரத்தின்மிக்க அர்ச்சனைப்பாட்டே யாகு மாதலான் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று திருவருட்டுறை” இறைவன் ஆளுடைய நம்பிகளுக்கு கட்டளையிட்டவண்ணம் தோத்திரஞ் செய்துள்ளனர்.

இன்றைக்குச்சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்குமுன் சென்னையில் சிவானுபூதிச் செல்வராய்ச் சிவபெருமானைச் செந்தமிழ்ப்பாக்களாற் றுதித்த திருவருபிரகாச வள்ளலா ரென்னும் “சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் விளங்கியிருந்தனர். அவரிடம் ஓரோர் விடயத்தை மாத்திரமறிந்த பல மாணக்கரிருந்தனர், முற்றுமுணர்ந்தாரிலர். இந்நூலாசிரியர் மாணக்கர்களின் சிரோரத்தினமாகியும், சுவாமிகளது பூரண்கிருபையைப்பெற்றார். அறிதற்கரிய விடயங்களையெல்லாம் சுவாமிகள் இடத்தில் அறிந்தவராகியும் இருத்தவர் இவ்வொருவரேயாம். “மகனறிவு தந்தையறிவு” என்றுதம் ஆசிரியரால் புகழ்ப்பட்டவர், ஆசாரிய பக்தியிலும் வழிபாட்டிலும் முதிர்ந்து கனிந்து நெக்குருகிப் பலவருமைப் பாக்கலா லவரைத் துதித்துப் பொறித்துவைத்தனர்.
எங்கருதியோ வெளியிடாது விட்டனர்.

அடியேன், சுமார் ஐயாட்டைப் பிராயத்தனாய் வடலூரினின்றும் இவருடன் சென்னை சேர்ந்தவன் பல்வகை இடையூரு வத்திசை நோக்க வேலாது சென்ற குரோதி வருஷதைப்பூசமகோத்துவத்தைத் தரிசிக்க வினைதுரப்ப மேற்படி சுவாமிகள் மீது இவரியற்றிய திருபள்ளியெழுச்சியில் இரண்டுபாக்களையும், மங்கள்வாழ்த்தையும் இலவசமாக அச்சிட்டுடன் கொண்டு “மாதுக்க நீங்களுருவீர் மனம்பற்றி வாழ்மின், சாதுக்கள் மிக்கீலறையே வந்து சார்மின்களே” என்றதற்கிணங்க அங்கு கூடியிருந்த சாதுக்களும் அக்காலத்தே சென்னையில் சாதுக்களுக்கு எனது இளைய சாகோதரர் தொழுவூர் வே. செங்கள்வராய முதலியாரைக்கொண்டும் வழங்க, அவர்கள் இப்பாக்கள் முற்றும் பெற்றிலமென்று வற்புறுத்தக் கண்டேன். மேல் எந்தையாரது அபிமானிகள் பலரும் முக்கியமாய் சென்னை பிரசிடென்சி காலேஜில் தமிழ்ப் பண்டிதராக விருக்கும் மகோபாத்தியாயர், பிரமஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள், இப்பாக்களை விரைவில் திரட்டியோர் புத்தகமாக வெளியிடும்படி ஏவிக்கொண்டிருந்தனர்.

எந்தை சுவாமிகள்பாமாக சதபங்கி இயற்றியதாகச் சொல்லியதுண்டு. அவரது சுவடிக்கட்டுகளில் காணப்பெற்றிலன், பிறகு சித்தாந்தசரபம் மா-ர-ர-ஸ்ரீ பூவை அஷ்டாவதானம்-கல்யாணசுந்தரமுதலியார் அவர்கள் அது தமக்கு தெரிந்ததோ ரிடத்திருந்து கைதப்பியதாக வருந்தி அதை மறுபடி சவதரிக்க முயன்று வருகின்றனர், அன்நன்றி மறக்கதக்கதன்று. கிடைத்ததும் வெளியிடப்படும்.

இவ்வருமைப்பிரபந்தங்களைத் திருவாய் மலர்ந்தருளிய எந்தையாரது சரித்திரச் சுருக்கமும், ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள் சரித்திரச் சுருக்கமும், பல இஷ்டர்கள் இப்புத்தகத்தி லிருக்கவேண்டுவ தவசிய மென்று வர்புறுத்த ஒருவாறு எழுதிச்சேர்க்க்ப்பட்டன. இவ் விருசரித்திரங்களது விரிவும் பின்னர் வெளியிடப்படும், இன்னும் சுவாமிகள் சரித்திரத்திற்கான ஆதவுரவுகள் சில முக்கியமாய் வேண்டி யிருப்பதால், தற்சமயம் சுருக்கமாக விடப்பட்டது.

இவ்வரிய பரமாரியப் பணிவிடைக்கு நேர்ந்த இடையூறுகளும், மனத்தாங்களும் சுவாமிகளே யறியர். அவரது கிருபையாலேயே இஃதோர்வகையாய் பூர்த்தியாயிற்று, மேற்படி பரமாசாரியார் திருவடிகளை

“ஆரியனார் சீர்பாதந் தாங்க அமைசிரமும்
ஆரியனார் சீர்பாட வாநாவும் - ஆரியனார்
செம்மொழியே சிந்திக்கு நெஞ்சுந் தருந்தவமே
எம்மையினும் வாழ்க இனிது.”

என்ற வெந்தையார் கட்டளைப்படி வணங்கியுய்வேனாக.



இப்படிக்கு.,

தொழுவூர் வே. திருநாகேசுவரன்
வேலாயுத ஆச்சிரமம்.,
சிறுகடல் கிராமம், அடியார்க் கடியன்.,
1912 வருஷம் ஜனவரி. 





Vallalar_SannidhiMuraieedu - CoverPage.JPG

Vallalar_SannidhiMuraieedu - CoverPage.JPG

Download:

3 Comments
TMR RAMALINGAM
வள்ளலாரின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அருளிய “திருவருட்பிரகாசனார் சந்நிதிமுறைப் பிரபந்தங்கள்” என்னும் அரிய நூலினை சன்மார்க்க அன்பர்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் இங்கே பதிவேற்றிய திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்களுக்கும், சன்மார்க்க சீலர் இராம. பாண்டுரங்கன் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல. அருட்பெருஞ்ஜோதி.
Thursday, October 5, 2017 at 06:40 am by TMR RAMALINGAM
vaithilingam namasivayam
Good work in reminding the present generation about past works.thanks to Dr.Rama Pandurangan and Thiru Ananda Bharathi. I have a copy of 1959 edition of first part of this book
Wednesday, October 11, 2017 at 01:05 am by vaithilingam namasivayam
Anandha Barathi
Dear Ayya,

Thanks for your kind information, I have collected the same book from Dr.Pandurangan ayya.
Wednesday, October 11, 2017 at 09:21 am by Anandha Barathi